பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்பு நிற அட்டையை இணைத்திடுக. இதற்கு முன்னருள்ள சோதனைகளில் செய்யப்பெற்ற தைப் போலவே ஒரு மின்சாரக் கைவிளக்கினைக் கொண்டு ஓர் ஒளிக்கற்றைப் பெட்டியினுள் ஒளிருமாறு ஏற்பாடு செய்க. ஒரு பெரிய செவ் வக வடிவமான புட்டியை நீரினுல் நிரப்பி அதில்


才ジ

سپہ م* ஒரு சில துளிகள் பால் அல்லது ஒரு சிட்டிகை கஞ்சிப் பசை அல்லது மாவினைச் சேர்த்து நீரினைப் புகைப்படலம் போலாக்குக, புட்டியைத் தக்கையில்ை மூடுக. பெட்டியைப் புகையினுல் நிரப்புக. ஒளிக் கற்றைக்குச் செங்கோணத்தி லிருக்குமாறு புட்டியைப் பிடித்துக்கொண்டு நீரின் வழியாகக் கற்றையின் திசையை உற்று நோக்குக. அடுத்து, புட்டி ஒளிக்கற்றைக்கு வெவ்வேறு கோணங்களிலிருக்குமாறு அதனைச் சாய்த்து எங்கனம் புட்டியின் வழியாக ஒளிக் கற்றையின் பாதை பாதிக்கப்பெறுகின்றது என்பதை உற்றுநோக்குக. 5. ஒளி விலகலால் நாணயம் தோற்றமளிப் பதைக் காட்டல்: மேசையின்மீதுள்ள ஒரு தேக்கிண்ணத்தின் அடி மட்டத்தில் ஒரு நாணயத்தை வைத்திடுக. சற்று அப்பால் விலகி நின்றுகொண்டு கிண் ணத்தின் விளிம்பு அக் கிண்ணத்தின் அடி மட் டத்திலுள்ள நாணயத்தைக் காண்பதில் தலை யிடும் நிலையில் உங்கள் பார்வைக் கோட்டினை அமைத்திடுக. மற்ருெருவர் கிண்ணத்தினுள் கவனத்துடன் நீரை ஊற்றும்பொழுது நீங்கள் அதே நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? இதற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள் ? 6. பட்டகம் எங்ஙனம் ஒளிக் கதிர்களைப் பாதிக் கின்றது? : மேலே சோதனை-C 4இல் செய்ததைப் போலவே புகைப் பெட்டியைப் பயன்படுத்துக. ஓர் ஒற்றை ஒளிக் கற்றையில் ஒரு கண்ணுடிப் பட்டகத்தைப் (Prism) பிடித்துக்கொண்டு எங்ங்னம் அஃது ஒளி விலகுகின்றது என்பதை உற்றுநோக்குக. . C. ஒளி விலகலும் அதன் பயன்களும் 7. வில்லைகள் எங்ங்ணம் ஒளிக் கதிர்களைப் பாதிக் கின்றன?: இந்தச் சோதனைகட்கு நீங்கள் வில்லைகளை ஒரு பழைய மூக்குக் கண்ணுடியிலிருந்தோ அல் லது கெட்டுப்போன ஒளிக் கருவிகளினின்ருே எடுத்துக் கொள்ளலாம்; இல்லையாயின் படிக் கும் கண்ணுடி வில்லைகளையும் கை உருப் பெருக்கிகளையும் விலக்கு வாங்கிக்கொள்க. மூன்று துளைகளிடப்பெற்ற ஒரு கறுப்பு நிற அட்டையைக்கொண்டு புகைப் பெட்டியின் சாளரத்தை மூடுக. துளைகளின் இடைவெளி கள் ஒரே அளவு தூரங்களில் அமைந்திருக்க வேண்டும்; ஆல்ை இரண்டு வெளிப்புறத் துளை கட்கும் இடையிலுள்ள தூரம் உங்கள் வில்லை யின் குறுக்கு விட்டத்தைவிட ஒரு சிறிது குறை வாகவே இருக்க வேண்டும். முற்கூறப்பெற்ற சோதனைகளிலுள்ளதைப் போலவே ஒளிக் கதிர்களே அனுப்புவதற்கு மின்சாரக் கை விளக் கினை அமைத்துக் கொள்க. பெட்டியைப் புகை யினுல் நிரப்பி மூன்று ஒளிக் கற்றையின் பாதை யில் ஓர் இருபுறக் குழி வில்லையை (Double) convex lens) வைத்திடுக ; இந்த அமைப்பில் நடுவிலுள்ள ஒளிக் கற்றை வில்லையின் மையத் தைத் தாக்குகின்றது. ஒளி - மூலத்திலிருந்து வில்லையின் எதிர்ப்புறத்திலுள்ள ஒளிக் கற்றை களை உற்றுநோக்குக. அவை எங்ங்ணம் பாதிக் கப்பெறுகின்றன? - ஓர் இருபுறக் குழி-வில்லையைப் (Double concave lens) பயன்படுத்தி இச் சோதனையைத் திரும்பவும் செய்திடுக. இந்தச் சோதனையில் செய்த உற்றுநோக்கல்களை மேலே சோதனை6இல் செய்யப்பெற்ற உற்றுநோக்கல்களுடன் வைத்து ஒப்பிடுக. அடிப்புறத்தோடு அடிப் புறம் ஒன்ருகச் சேர்க்கப்பெற்று செய்யப் பெற்ற இரண்டு பட்டகங்களின் அமைப்பே இருபுறக் @మ-ఐమడి) என்பதையும், அங் ங்னமே நுனி முனையோடு நுனி முனை ஒன்ருக சேர்க்கப்பெற்று செய்யப்பெற்ற இரண்டு பட் பகங்களின் அமைப்பே இரு புறக் குழி-வில்லை என்பதையும் சிந்தித்துப் பார்த்திடுக. 8. புட்டியின் அடிப் பகுதிகளினின்றும் கரடு முரடான வில்லைகள் : குவிவான அல்லது குழிவான அடிப் புறங் களைக் கொண்ட புட்டிகள் கண்டுபிடிக்கப் 275