பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சின்மீது படுக்கை வசமாகக் கிடத்தப் பெற்றுள்ள ஒரு மீட்டர் அளவுகோல் இந்த எளிய ஆய்கருவியின் அடிப்படையாகத் துணை புரிகின்றது. பள்ளங்களைக்கொண்ட மரக் கட்டைத் துண்டுகள் கொளுவிகளாகச் (Holders) சரிப்படுத்திக் கொள்ளப்பெறலாம். ஒவ்வொருமரக்கட்டையின்மீதும் ஒட்டப்பெறும் தக்கையடுக்கு அல்லது மென்மையான அட்டை பொருள் குண்டுசி (Object.pin), தேடு குண்டுசி கள் (Search pins) போன்ற குண்டுசிகளைக் குத்துவதற்கு எளிதாக இருக்கும்; பக்கங்களில் திருகாணிகளால் பிணைக்கப்பெற்றிருக்கும் வசதியான வில்லைக் ஒரு பள்ளம் துண்டுகள் செயற்படுகின்றன. தகரத் கொளுவிகளாகச் கட்டையின் உச்சியிலுள்ள ஒரு வில்லையை அதன் நிலையில் வைப்பதற்குத் துணை செய்கின்றது; தகரத் துண்டுகளின் மீதுள்ள இரப்பர்க் குழல் பிடியை உறுதியாக்கு கின்றது. கட்டைகளுடன் பொருத்தப்பெறும் அட்டை யும் மின்சாரக் கைவிளக்குக் குமிழ்களும் முறையே திரைகளாகவும் ஒளி மூலங்களாக வும் அப்போதைய ஏற்பாடுகளாகச் செய்து கொள்ளப்பெறுகின்றன. இந்த ஆய்கருவி யின் முழு அமைப்பினையும் செய்வது மிகவும் C. ஒளி விலகலும் அதன் சயன்களும் பயனுடையது; இதல்ை வில்லைகளைப்பற்றித் தனித்தனி வேலை முயலப்பெறுதல் கூடும். கட்டையின்மீது இரண்டு வாள் வெட்டுக்கள் செய்யப்பெற்ற பிறகு ஓர் உளியைக்கொண்டு ஒரு பள்ளத்தைச் செய்வது எளிதானது. இந்த ஆய்கருவியினைப் பயன்படுத்தி வேறு பல சோதனைகளைச் செய்ய முயலலாம். எ.டு. ஒளி பற்றிய எதிர்த்தழித்தல் (Interference), கோணுதல் (Diffraction) இவற்றின் சோதனை களைக் குறிப்பிடலாம். - 13. எளிய நுண்பெருக்கி: ஒரு கண்ணியை அமைத்திடுவதற்கு ஓர் ஆணியைச் சுற்றிலும் ஒரு தாமிரக் கம்பியை ஒரு சுற்றுச் சுற்று க. அந்தக் கண்ணியை நீரில் தோய்த்து அதன்வழியாக நோக்குக. மிகப் பழங்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற நுண் பெருக்கிகளைப் (Microscopes) போன்ற ஒன் றினை நீங்கள் அடைவீர்கள். அத்தகைய ஒரு வில்லை நான்கு அல்லது ஐந்து மடங்கு உருப் பெருக்கும். கம்பியை ஒரு கண்ணுடி ஓரத்தின்மீது வேக மாகத் தட்டினுல் ஒரு துளி நீர் கீழே விழும். கம்பிக்கும் நீருக்கும் இடையேயுள்ள ஒட்டுப் பண்பின் (Adhesion) காரணமாக மீதியுள்ள திரவம் மையத்தில் மிக மெல்லியதாகவுள்ள ஒரு வில்லையை (அஃதாவது ஒரு குழிவான வில்லையை) உருவாக்கும். - 14. நீர்த்துளி நுண்பெருக்கி: ஒரு கண்ணுடித் தட்டின்மீது கவனமாக ஒரு துளி நீரை வைத்திடுக. துளிக்கு அருகில் உங்கள் கண்ணினைக் கொணர்ந்து நீர்த்துளி வழியாகவும் கண்ணுடிவழியாகவும் ஏதாவது சிறிய பொருளை நோக்குக. இஃது ஒர் எளிய துண்பெருக்கியாகப் பயன்படுகின்றது. 277