பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

p, கிதம் மற்றிய சோதனைகள் 11. வண்ண ஒளிகளைக் கலத்தல்: (அ) வட்டமான அட்டைத் துண்டுகளில் £if-susētswrišić5&n to (Water colours) to 34 செய்து வண்ண ஒளிகளின் கலப்பினை அடைய லாம். 10 செ. மீ. வட்டமான அட்டையின் ஒரு புறத்தில் மஞ்சள் நிற முட்டைக் கருவினையும் மற்ருெரு புறத்தில் நீல நிறக் கருவினையும் பூசுவது ஒரு முறையாகும். இந்த வட்டத் துண்டு ஒரு சிறிய கயிற்றில் தொங்கவிடப் பெற்று பெருவிரலுக்கும் ஏனைய விரல்களுக்கும் இடையில் பிடித்துக்கொண்டு சுழலச் செய் தால் இதல்ை விளைவது கிட்டத்தட்ட வெள்ளை நிறமாகும்; நிறங்கள் தெடுக்கப்பெற்ருல் இது தெளிவாகத் தெரியும். விளையாட்டுக் கருவியின் நிற உச்சிகளின்’ மீது பயன்படுத்தப்பெற்றுள்ளதைப் போன்ற வேறு வண்ணக் கலவைகள் ஆராய்ந்து கண்டறியப்பெறுதல்கூடும். சிவப்பு, பச்சை நிறங்களை மாறிமாறி ஆரவளைவு வட்டப் பகுதி & sit (Radial segments) || 31101.1 présir poor. இந்த வட்டத் துண்டினை ஒரு கயிற்றில் அமைத்துச் சுழலச் செய்தால் இதல்ை விளையும் சிவப்பு, பச்சை ஒளிகளின் கலவை மஞ்சள் நிறமாகத் தோன்றும். - - (ஆ) தொடக்க நிலை ஒளியியலில் கதிர்கள் பற்றிய சோதனைகளில் விவரிக்கப்பெற்ற பெட்டிகளில் மூன்று பெட்டிகள் வண்ண ஒளி களைக் கலப்பதற்கும் பயன்படுத்தப்பெறலாம். ஒரு மோட்டார் வண்டியின் மின்குமிழைக் கவனமாகத் தேர்ந் கொண்ட அதே மாதிரியான பெட்டியொன்று இதே செயலுக்குப் பெரிதும் பயன்படும். பெட்டியின் முன்புறம் சிவப்பு, பச்சை, நீல நிறங்களின் நாடக அரங்கு வடிகட்டிகளை வைத்து ஒரு வெண்மையான திரையின்மீது செவ்வக வடிவமுள்ள ஒளிப் பாளங்களை விழு மாறு செய்க. சிவப்பு நிறமும் பச்சை நிறமும் மஞ்சள் நிறத்தைத் தரும். நீல நிறமும் சிவப்பு நிறமும் ஊதா நிறத்தை விளைவிக்கும். பச்சை நிறமும் நீலநிறமும் மயில் நீல நிறத்தை உண்டாக்கும். சிவப்பு நிறமும் பச்சை நிறமும் நீல நிறமும் வெள்ளை நிறத்தைத் தோற்று விக்கும். ទារក្សា 12. சோப்புக் குமிழியில் நிறங்கள்: சோப்புக் குமிழிகள் ஊதுவதற்குத் தயா ரிப்பது போன்ற ஒரு தீவிர சோப்புக் கரை சலைத் தயாரித்திடுக. ஒரு தட்டையான தட்டு ஒன்றில் அக்கரைசலே நிரப்பி அதில் ஒரு முட்டைக் கிண்ணம் அல்லது தேநீர்க் கிண் ணத்தை அக்கிண்ணத்தின் குறுக்கே ஒரு ஃபிலிம் உண்டாகும்வரையிலும் அமிழ்த்துக. இதனை ஒரு தீவிரமான ஒளியில் பிடித்துக் கொண்டு நீங்கள் காணும் நிறங்களை உற்று நோக்குக. பெரும்பாலும் மெல்லிய ஃபிலிம்கள் வண்ணங்களைக் கொண்டுள்ளன. 284