பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளப் பலகையினின்றும் ஒரே தூரத்தில் (உய ரத்தில்) இருக்கின்றன. விளக்கப் படத்தில் புள்ளிக் கோட்டால் காட் டப்பெற்றுள்ளவாறு விளக்கையும் ஒளி தொகுஉறுப்பையும் அடைப்பதற்கு ஓர் ஒட்டுப் பலகை, உலோகத் தகடு அல்லது அட்டையா லான பெட்டி தேவைப்படுகின்றது. இருட்ட டைப்பு செய்யப்பெற்ற அறையொன்று இந்த ஆய்கருவிக்கு இன்றியமையாதது. 100-வாட் மின் குமிழ்களைப் பயன்படுத்தும் வணிகக் கருவிகள் பாதி இருட்டடைப்பு செய்யப்பெற்ற ஒர் அறையில் பயன்படுத்தப்பெறுதல் கூடும்; به ۳۰۰ مساس مه * * * ; ٣ممي

"---..

يمه ه* ஆளுல் விளக்கினின்றும் வெப்பத்தை சிதறச் செய்யும் பிரச்சினை மிகவும் பெரியது. 3. எளிய நுட்பத் திரைப்படக் கருவி (Micro projector): இந்தக் கருவியின் ஒளியமைப்பு படத் துண் டிற்குப் பயன்படுத்தும் திரைப்படக் கருவியின் ஒளியமைப்பினைப் போன்றதே. பொருள்களின் (நுண்பெருக்கி நழுவங்கள் அல்லது அங்ங்னம் ஏற்றப்பெற்ற சிறிய பொருள்கள்) பருமன் காரணமாகவும், மிக உயர்ந்த பெருக்கத்தை அடைவதற்கேற்ப, மிகக் குட்டையான குவியப் பொருள் வில்லையைப் பயன்படுத்துவதன் தேவை காரணமாகவும் இக்கருவிகளின் அமைப்பில் வேறுபாடுகள் இன்றியமை யாதவை. இதிலுள்ள விளக்கு ஒரு 12 வோல்ட்டு மோட்டார் வண்டியின் குமிழாகும்; ஒளி தொகு - உறுப்பு 1.5 லிருந்து 2 செ.மீ. வரை குறுக்கு விட்டமுள்ளதும், ஒரு கண்ணுடிக் குழலினின்று ஊதப்பெற்றதுமான ஒரு சிறிய கண்ணுடிக் குமிழாகும்; ஒரு வணிக நுண் வாயினுள் பொருந்துகின்றது; E. ஒளியியல் பிம்பம் வீழ்த்தல் பெருக்கியின் பொருள் வில்லையே பொருள் வில்லையாகும். இதன் இந்த ஆய் கருவியின் அடித்தளம் 10 செ.மீ. நீளமும், 4 செ. மீ. அகலமும், 7 செ.மீ. உயர மும் உள்ள ஒரு சிறு மரத் தொட்டியாகும்; 4 செ.மீ. அகலமுள்ள இரண்டு மரத்துண்டுகள் 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும், 1 செ.மீ. கனமும் உள்ள ஒரு மரத் துண்டுப் பக்கங் களுடன் ஆணிகளால் இணைக்கப்பெறு கின்றன. இந்த அளவுகள் இப்படியே மாறு தானமாக (Critical) இருக்கவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை; கிடைக்கக்கூடிய வேறு பொருள்கட்குப் பொருத்தமாக இந்த அளவுகள் மாற்றிக்கொள்ளப்பெறலாம். 2.5 செ.மீ. துளையினக்கொண்டதும், 9 செ.மீ. நீளமுள்ளதும் 7 செ.மீ. அகலமுள்ளதுமான ஓர் ஒட்டுப் பலகையால் தொட்டியின் ஒரு முனையை மூடி இந்தப் பொருள் வில்லைக்கு ஒரு தாங்கும் உறுப்பு அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு செவ்வக வடிவமுள்ள விளக்கு-வீடு கால் வீட்டிலுள்ள கடுகு வைக்கும் தகரக் கொள்கலன் அல்லது வேறு செவ்வக வடிவமுள்ள தகரக் கொள் கலனில் ஒரு மோட்டாரின் மின்குமிழையும் குமிழ்ப் பிடியினையும் பொருத்தி இந்த வீடு அப்போதைய ஏற்பாடாக எளிதில் அமைக்கப் பெறுகின்றது. உச்சியைச் சுற்றிலும் செய்யப் பெற்றுள்ள துளைகள் காற்ருேட்டத்தை அளிக் கின்றன; 1.5 செ.மீ. குறுக்கு விட்டமுள்ள துளை ஒளி தொகு - உறுப்பினைத் தாங்குவதற் குத் துணையாக உள்ளது. குமிழின் தண்டினைச் சுற்றியும் தகரக் குவளையில் செய்யப்பெற் றுள்ள துளைகளினூடே செல்லும் தாமிரக் கம்பி ஒளி தொகு-உறுப்பினை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுகின்றது. திரையில் வீழ்த்தப்பெறவேண்டிய பொரு ளைப் பிடித்துக்கொண்டுள்ள நழுவம் கால்வா யின் ஓரங்களில் வெட்டப்பெற்றுள்ள பள்ளங் களில் பொருந்தியிருப்பதுடன் நேர்க்குத்து தளத்திலும் வைக்கப்பெறுகின்றது; இதல்ை ஒளி தொகு-உறுப்பினின்று வரும் ஒளி அதன் வழியாகச் செல்லுகின்றது. நுண்பெருக்கியின் பொருள் வில்லை 7 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் உள்ள ஒட்டுப் 287