பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E, ஒளியியல் பிம்பம் வீழ்த்தல் பலகையிலுள்ள துளையில் இறுக்கமாகப் பொருந்துகின்றது; இந்தப் பலகை முனைத் தகட்டுடன் பொருந்துமாறு ஒரு கால் சட்டை சைக்கிள் இடுக்கியால் பிடித்துக்கொள்ளப் பெறுகின்றது; இதிலுள்ள வில்லை ஒளி அமைப் பின் அச்சுடன் இருப்பதற்கேற்ப ஒழுங்கு படுத்தக்கூடிய நிலையில் பலகை இடுக்கியால் பிடித்துக்கொள்ளப்பெறுகின்றது. இங்குள்ள விளக்கப் படம் நடைமுறையிலிருப் பதைவிட அமைப்பின் உறுப்புக்கள் சற்று விலகிய நிலையில் ஏற்றி அமைக்கப்பெற்றுள் ளதைக் காட்டுகின்றது ; அதன் தொடர்புள்ள நிலைகளை மிகத் தெளிவாகக் காட்டும் பொருட்டே இங்ங்னம் செய்யப்பெறுகின்றது. இந்த ஆய்கருவியினை ஒழுங்குபடுத்துவதில் நழுவம், விளக்கு-வீடு, ஒளி-தொகு உறுப்பு இவை பொருள் வில்லையின்மூலம் ஒளி சென்று தொட்டியின் முனைக்கு அப்பால் 60 செ.மீ. தொலைவில் வைக்கப்பெற்றுள்ள 30 செ.மீ. சதுரமுள்ள ஒரு தேய்ப்புக் கண்ணுடித் திரை யில் ஒரு பிம்பத்தை (எ-டு. ஒரு தாவர மாதிரிப் பொருள்) உண்டாக்கும் வரையில், சேர்ந்தாற் போல் முன்ளுேக்கி நகர்த்தப்பெறுகின்றன. நழுவத்திற்குரிய சரியான நிலை கண்டறியப் பெற்றுவிட்டால், பெட்டியின் ஒரத்தில் வாள் வெட்டுக்கள் (Sawcuts) செய்யப்பெறுகின்றன; இவ்வெட்டுக்கள் பயன்படுத்தப்பெறும் எல்லா நழுவங்கட்கும் துணையாக உள்ளன. நியூட்ட னின் வளையங்களையும் ஒளி கோணும் நிகழ்ச்சி களையும் திரையில் வீழ்த்துவதற்கும் இந்த ஆய் கருவி பயன்படுத்தப்பெறுதல் கூடும்.