பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. எலும்புகளும் தசைகளும் ஏற்பாடாகச் செய்யப்பெறுகின்றது என்பதை மேற் காட்டப்பெற்றுள்ள விளக்கப் படம் குறிப் பிடுகின்றது. 4. நடக்கும் கொண்டையூசி : உங்கள் கையில் ஒரு தலையூண் கத்தியை (Dinner knife) இறுக்கமாகப் பிடித்துக்கொள்க. ஒரு கொண்டையூசியை அதன் கால்கள் இரு புறங்களிலும் இருக்குமாறு ஒரு கத்தியின்மீது வைத்து அதனைச் சிறிது உயர்த்துக; கொண்டையூசி சாய்ந்த நிலையில் அதன் இரு கால்களும் மேசையின்மீது இலேசாகத் தாங்கி நிற்கின்றன. கத்தி வாளின் நெடுக, கொண்டையூசி நடப்பதை உற்றுநோக்குக. புயத் தசைகளின் மிகச் சிறிய இயக்கத்திளுல் இஃது உண்டாகச் செய்யப்பெறுகின்றது. B. உங்கள் புலன்கள் 1. உங்கள் மணப்புலன் : மாளுக்கர்கள் அமைதியாக ஓர் அறையில் ஒழுங்கான முறையில் உட்கார்த்திருக்கும் பொழுது அறையின் ஒரு மூலையில் மூக்கைத் துளைக்கும் மணமுள்ள ஏதாவது ஒரு பொருளை அவிழ்த்துவிடுக. ஒரு சிறிதளவு ஈதர் அல்லது அம்மோனியாவை ஒரு துணியின்மீது ஊற்றி மணத்தைப் பரப்பலாம். மணம் கண்டுபிடிக்கப்பெற்றதும் மாணுக்கர் களைத் தம் கைகளே உயர்த்துமாறு கூறுக; அறையின் குறுக்கே காற்றின்மூலம் மணம் பரவி விரவுதலின் முன்னேற்றத்தைக் கவனித் திடுக. மணப் புலன் நம்மை விபத்தினின்றும் காக்கின்றது என்பதற்குச் சில எடுத்துக் காட்டுக்களை மேற்கோள்களாகக் கூறுக. 2. பொருத்தமான படிக்குந் தூரம்: படிப்பதற்கு மிகவும் வசதியாகவுள்ள தூரத் தில் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஏதாவது படிக்குமாறு மாளுக்கர்களே ஏவுக; 30லிருந்து 40 செ.மீ. தூரம் சாதாரணமாகப் போது மானது. இங்ங்னம் மிகவும் வசதியாகவுள்ள தூரம் இதைவிட மிக அதிகமாகவோ குறை வாகவோ இருந்தால் பார்வையைத் திருத்து வதற்கு மூக்குக் கண்ணுடிகள் தேவைப்படு கின்றன. 3. பொருத்தமான் ஒளிவிளக்கம் : திரைகளை விழச் செய்து அல்லது சாளரக் கதவு அமைப்புக்களே மூடச் செய்து ஒரு 40-வாட் மின் குமிழை திறந்துள்ள புத்தகத் திற்கு 60 செ.மீ. உயரம் இருக்குமாறு பிடித்துக் கொள்க. இந்த அளவு ஒளி விளக்கம் (illumination) வசதியாகப் படிப்பதற்குக் கிட்டத்தட்டச் சரியான அளவாகும். விளக்கு அப்பால் நகர்த்தப்பெற்றதும் ஒளிவிளக்கம் விரைவாகக் குறைகின்றது என்பதைக் காட் டுக. 1 மீட்டருக்குச் சற்றுக் குறைவான தூரத் தில் இருக்கும்பொழுது, 60 செ.மீ. தூரத்தில் 40-வாட் மின் குமிழ் எவ்வளவு ஒளிவிளக் கத்தை அளித்ததோ அதே அளவு ஒளிவிளக் கம் அளிப்பதற்கு இந்தத் தூரத்தில் ஒரு 100-வாட் மின் குமிழ் தேவைப்படுகின்றது. ஒளி வெப்பினின்றும் (Glare) பாதுகாப்பதற் குப் பொருத்தமான படிக்கும் நிலைகளைச் செயல் விளக்கம் மூலம் காட்டுக. ஒரு வகுப்பறையின் எல்லாப்பகுதிகளிலும் பொருத்தமான அளவு ஒளியுள்ளதா என்பதைத் தீர்மானம் செய்க. அங்ங்ணம் இராவிடில் திருப்தியில்லாத நிலைமை களைத் திருத்துவதற்கேற்ற முறைகளைக் கலந் தாய்க. 4. கண்ணின் பொருத்தப்பாடு: 10 அல்லது 12 வெள்ளைத் தாள்களை ஒரு குழிவான சுருளாக உருட்டுக; இதனால் ஒவ் வொரு தாளும் சுருளைச் சுற்றிலும் இரண்டு தடவை நீண்டிருக்கட்டும். சுருளைச் சுற்றிலும் ஓர் இரப்பர்ப் பட்டையை நழுவச் செய்திடுக. ஒரு புத்தகத்தின் பக்கத்தில் இந்தச் சுருளை அமைத்து, ஒரு கண்ணேச் சுருளின் உச்சியின் மீது அமுக்குக: இதனுல் கீழிருந்தோ உச்சியி லிருந்தோ சிறிதளவுகூட ஒளி உள்ளே வருவ தில்லை. முதலில் எந்த ஒரு சொல்லையும் படிப்பது இயலாததாக இருக்கவேண்டும். ஏதாவது சொற்கள் படிக்கக்கூடியனவாக இருப்பின், கருளுடன் மேலும் ஒரு சில தாள் களைச் சேர்த்திடுக. 290