பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெரு கண்ணை மூடிக்கொண்டு சிறிதளவு ஒளியைக் கூட விடாமல் சுருளின்மூலம் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்திடுக. தாளின்வழியாகப் பரவி விரவும் மங்கலான ஒளியில் அச்சு மெதுவாகத் தெளிவுபடும். அச்சு தெளிவாகப் படிக்கக்கூடியதாக வந்த வுடன் விரைவாக ஓர் ஆடியில் பார்த்துக் கண் களின் பாவைகளின் (Pupils) அளவினைக் கவனித்திடுக. இந்தச் சோதனையை ஒவ் வொரு மாளுக்கண் அல்லது மாணவியும் தாளுகச் செய்யும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டும். பாவைகளின் அளவில் மாறக்கூடிய இத் திறனல் ஏற்படும் சில நற்பயன்களைக் குறிப் பிடுக; மிகப் பிரகாசமான ஒளியுள்ள பொழுது பாவைகளின் சுருக்கம் கண்களைப் பாதுகாக் கின்றது; அவற்றின் பெருக்கம் மிக மங்கலான ஒளியிலும் நாம் பொருள்களைக் காணத் துணை செய்கின்றது; பாவைகளின் பொருத்தப்பாடு விபத்தினைத் தவிர்க்க நமக்குத் துணைபுரி கின்றது. 5. உங்களுடைய குருட்டிடத்தை உங்களால் கண்டறிய முடியுமா? : பார்வை நரம்பு கண்ணுருண்டையில் நுழை யும் இடத்தில் ஒரு சில மில்லி மீட்டர் குறுக்கு விட்டமுள்ள ஒரு சிறிய குருட்டிடம் (Bind spot) உள்ளது. ஒரு மிக எளிய சோதனையால் நீங்கள் இந்தக் குருட்டிடத்தைக் கண்டறிய லாம். ஒரு வெள்ளைத் தாளின்மீது ஒரு கரும் புள்ளியை வரைக; அதற்கு வலப் புறத் தில் கிட்டத்தட்ட 5 செ.மீ. தூரத்தில் ஒரு கறுப்பு சிலுவைக் குறியினே வரைந்திடுக. வெள்ளைத் தாள் மேசையின்மீதிருக்கும் .ே உங்கள் புலன்கள் பொழுது உங்கள் இடக் கண்ணை மூடிக் கொண்டு உங்கள் வலக் கண்ணுல் கறுப்புப் புள்ளியினை நிலையாக உறுத்துப் பார்த்திடுக. இப்பொழுது மேசையின்மீதுள்ள தாளினை எடுத்து நீங்கள் அப்புள்ளியை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே அதனை உங்கள் கண்ணினே நோக்கிக் கொண்டுவருக, வலப் பக்கத்திலுள்ள சிலுவைக் குறியின் பிம்பம் மறையக்கூடிய ஓரிடத்தை நீங்கள் காண்பீர்கள். வலக் கண்ணை முடிக்கொண்டும் சிலுவைக் குறியை உறுத்துப் பார்த்துக்கொண் டும் உங்களுடைய இடக்கண்ணின் குருட் டிடத்தை நீங்கள் கண்டறிதல் கூடும். புத்தகம் உங்கள் கண்ணருகில் கொண்டுவரப்பெறும் பொழுது கறுப்புப் புள்ளி மறைந்து போகின் திது. . 6. æfri FLi Gums^ssir (Optical illusions) : அன்ருட வாழ்க்கையில் மிகவும் வியப்புத் தருகின்ற சில காட்சிப் போலிகள் உள்ளன. பகலவனும் மதியும் வானத்தின் உச்சியிலிருக் கும்பொழுது காணப்பெறுவதைவிட அவை தொடுவானத்திலிருக்கும்பொழுது மி க ப் பெரியனவாகக் காணப்பெறுகின்றன. அவை ஒரு மலையின் பின்புறமாக எழுகின்றதைக் காணும்பொழுது, அவை நமக்கு மேல் இருக் கும்பொழுது இயங்கிச் செல்வதைவிட அவை மிக வேகமாக இயங்கிச் செல்வனபோல் காணப்பெறுகின்றன. கதிரவனின் அல்லது மதியின் ஒழுங்கான குறுக்கு விட்டத்தை ஒரு கருவியால் அளக்கும் அளவீடு அல்லது அவை எழும்பொழுதும் மறையும்பொழுதும் அவற்றின் திசைக் கோணம் (Bearing) நம் முடைய முதல் கருத்துக்களுடன் (impressions) உறுதிப்படுவதில்லை. தொடுவானத்தின் அருகில் பருமன்கள், தூரங்கள் பற்றிய நமது மதிப்பீடுகள் (Estimates) offursorsosuurs இருப்பதில்லை; ஏனெனில் நாம் ஒப்பீடான நிலவுலகுக்கருகிலுள்ள பொருள்களை நம் முடைய தரப்படுத்தப்பெற்ற ஒப்பீடாகக் கொள்ளுகின்ருேம். இயல்-6இல் செய்யப்பெற்ற நில அளவீட் டில் பயன்படும் கோண அளவி (Theodolite) அல்லது உயரம் அளக்கும் கருவி (Astrolabe) யையும் கோணமானி (Sextant)யையும் பகல 291