பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. மானிடி உடலின் சில உள்ளுறுப்புக்கள் பெறும் கூருணர்வுள்ள ஒரு மேற்பரப்பு காணப் பெறுதல் கூடும். இதில் கண் வில்லைக்கு எதிர்ப் புறத்தில் மஞ்சள் இடம் (Yellow spot) எனப் படும் இடத்தில் கூருணர்வுள்ள உயிரணுக்கள் மிக அதிகமாக அடங்கியுள்ளன. புலனுணர்வு களைத்(Sensations) தாங்கிச் செல்லும் நரம்புகள் விழி வெளிப்படலத்திலுள்ள (Sclerotic membrane) ஒரு துளையின் வழியாகச் செல்லுகின் றன; ஆகவே இந்த இடம் ஒளியுணர்வாக இல்லை; இந்த இடமே குருட்டிடம் என வழங்கப் பெறுகின்றது. 2. ஒரு பொருளின் பிம்பம் கண்-திரையில் எங் வனம் தோன்றுகின்றது? : இயல்-16இல் ஊசித் துளை காமிராவைப் புற்றிய சோதனை-A 4ஐக் காண்க. 3. கண்ணின் வில்லை கண்-திரையின்மீது எங் நனம் ஒரு பிம்பத்தை உண்டாக்குகின்றது :: இயல்-16இல் ஒரு குவி-வில்லையில் பிம்பம் உண்டாவதைப்பற்றிய சோதனை-C 11ஐக் காண்க. 11. இதயம் 1. இதயத் துடிப்பினக் கேட்கக்கூடிய ஒர் எளிய பொறியமைப்பினை இயற்றுதல் : ஒரு துடிப்பறி கருவியினை (Stethoscope) இயற்றி அதனைப் பயன்படுத்தி இதயம் செயற் படுவதைக் கேட்குமாறு மாளுக்கர்களை ஏவுக. ஒரு சிறு புனல், T-வடிவமுள்ள அல்லது Yவடிவமுள்ள ஒரு கண்ணுடிக் குழல், சிறிது இரப்பர்க் குழல் இவற்றைக் கொண்டு ஒரு திருப்திகரமான செயல் விளக்கத் துடிப்பறி கருவியினை அமைக்கலாம். ? அல்லது 8 செ.மீ. நீளமுள்ள இரப்பர்க் குழலினைப் புனலின் நுனி யில் நழுவச் செய்திடுக. (ஆய்வகத்திலுள்ள கண்ணுடிப் புனல், அல்லது குழந்தைகளின் பால் புட்டிகளை நிரப்பப் பயன்படுத்தப்பெறும் புனல் போன்ற ஏதாவது ஒருவகைச் சிறு புனல் இதற்குப் போதுமானது.) இந்தச் சிறு இரப்பர்க் குழலின் மற்ருெரு முனையில் ஒரு T-வடிவக் குழலைச் செருகுக;T-வடிவக் குழலின் இரு புயங்களிலும் நீண்ட இரப்பர்க் குழல்களை இணைத்திடுக. இரப்யர்க் குழல் இந்தத் துடிப்பறி கருவியினைப் பயன்படுத்து வதற்குப் புனலத் தன் இதயத்தின்மீது உறுதி யாகப் பிடித்துக்கொள்ளுமாறு ஒரு மாளுக்கனை யும், நீண்ட இரப்பர்க் குழல்களின் முனைகளைத் தன் காதுக ளில் வைத்துக்கொள்ளுமாறு மற் ருெரு மாளுக்கனையும் ஏவுக. மாளுக்கர்கள் இதயத் துடிப்புகளை விளக்கிப் பொருள்கூற இயலாது போயினும், அவர்கட்கு இத்துடிப்புக் கள் தெளிவாகக் கேட்கும். இதயம் செயற்படு வது ஒழுங்காகவுள்ளதா என்பதை அறிவதற்கு மருத்துவர் ஒரு துடிப்பறி கருவியைத் தான் பயன்படுத்துகின்ருர். இதயம் என்ன செய்கின்றது, சீரான உடல் நலம் நிலைபெறச் செய்வதற்கு இதயத்தின் முக்கியத்துவம் போன்றவற்றைக் கலந்தாய்வ தில் இயல்பாகவே இச்சோதனை கொண்டு உய்க்கும். இதயத்திற்குத் தீங்கு பயக்கக்கூடிய செயல்களும், இதய வலுக்குறைவால் சில சமயம் விளையக்கூடிய நோய்களும் கூட கலந் தாயப்பெறலாம். 2. நாடித் துடிப்பு வேகத்தைக் காணல் : மணிக்கட்டின்மீது இரண்டு விரல்களை வைத்து மணிக்கட்டின் பின்புறத்தைப் பெரு விரலால் தள்ளிச் சிறிது அமுக்கத்தைத் தந்து நாடித் துடிப்பினை அறியும் சரியான வழியைச் செய்து காட்டுக. 15, 30 வினடிகட்கு நாடித் துடிப்புக்களைக் கணக்கிட்டுக் கண்டறிவதில் பயிற்சி பெறச் செய்க. 3. நாடித் துடிப்பில் உடற்பயிற்சியின் விளைவு : இருக்கும்பொழுதும், வேகமான உடற்பயிற்சிக்குப் பிறகும் பல மாளுக்கர்களின் நாடித் துடிப்புக்களை எடுக்கச் செய்க. ஓர் அட்டவணையில் இந்தப் புள்ளி விவரங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுக. ஒய்வாக 294