பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 18 ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் 1. கண்ணுடிக் கலங்களைக் கழுவுதல் : ஒரு லிட்டர் நீரில் 100 கிராம் வீரிய கந்தக அமிலம் கலந்த கரைசலில் 100 கிராம் பொட் டாசியம் டைக்ரோமேட்டைக் கரைத்திடுக. கண்ணுடிக் கலத்தை இந்தக் கரைசலில் நனைய வைத்து மீண்டும் மீண்டும் இது பயன்படுத்தப் பெறலாம். எச்சரிக்கை அரிக்கும் இந்தக் கரைசல் தோல் அல்லது ஆடைகளின்மீது படுவதைத் தடுப் பதில் மிக அதிகமான கவனம் எடுத்துக் கொள்ளப்பெறுதல் வேண்டும். வீரிய கந்தக அமிலத்தை நீர்த்த அமிலமாக்குவதற்கு ஒரு கற்பாத்திரம் அல்லது மட்கலத்தைப் பயன் படுத்துக. அமிலம் நீருடன் கலக்கும் செயலில் அதிகமான அளவு வெப்பம் வெளிவிடப்பெறு வதால் நீரில் அமிலத்தை மிக மெதுவாக ஊற்றுக. தெரிந்த மூலத்தினின்று ஏற்படும் கறைகளை அகற்றுவதற்கு ஆசிரியர் தமது வேதியியல் அறிவினை பயன்படுத்துதல் வேண்டும். மாசுற்ற கலன்களில் காரங்கள், காரங்கள் சம்பந்தமான எதிர் வினைகளால் உண்டான உப்புக்கள் இவை களிருப்பின், ஒரு சிறிதளவு நீர்த்த அமிலத் தைக்கொண்டு தூய்மையாக்குவதற்கு முதலில் முயல வேண்டும்; அந்தக் கறை பொட்டாசியம் பர்மாங்கனேட்டினுல் ஏற்பட்டதாக இருப்பின், சோடியம் சல்ஃபைட்டுக் கரைசலில் சிறிதளவு நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்த்து அதனைக் கொண்டு அக் கறையை நீக்க முயலலாம். இங்ங்ணம் பல முறைகள் உள்ளன. காரங்கள் மெதுவாகக் கண்ணுடியைத் தாக்கு கின்றன; சோடாக் காரம் போன்ற பொருள்கள் நீண்ட காலமாகக் கொண்டுள்ள புட்டிகள் எப் பொழுதுமே தம்முடைய ஒளி புகும் நிலையைத் திரும்பவும் பெற முடியாது. 2. பாதரசத்தைக் கழுவுதல் : ஒரு மேற்பரப்பின்மீது பாய்ந்து செல்லும் பாதரசம் வால்களை (Tails) விட்டுச் சென்ருல், அந்தப் பாதரசம் கழுவப்பெறுதல் வேண்டும். சாதாரணமாகச் சோதனைகளில் வினைப்படுத் தும் பொருளாகப் (Reagent) பயன்படும் நீர்த்த நைட்ரிக் அமிலத்தைவிடச் சற்று அதிகமாகவே நீர் கலந்த நைட்ரிக் அமிலத்தைக் கொண்ட ஓர் உயரமான உருளை வடிவமான கண்ணுடிப் பாத்திரத்தில் பாதரசம் துளி துளியாகச் இரப்யர் இணைப்பு - தத்துகிக் குழல் - கண்ணுடி சாடி நீர்த்த நைட்ரிக் அமிலம் சொட்டப்பெறுகின்றது. புனலின் நுனியில் பொறுத்தப்பெற்றுள்ள தந்துகிக் குழல்வழி tursů (Capillary tube) LI TÉ U 3 Ib Glasp # 5 : பெறுங்கால் அது ஒரு மெல்லிய அருவிபோல் விழுமாயின், அது மிகவும் சிறப்பாக அமைகின் றது. அதன் பிறகு அப் பாதரசம் ஓர் உறுதி யான புட்டியில் நீருடன் சேர்த்து நன்ருகக் குலுக்கப்பெற்று அதிலுள்ள அமிலம் அகற்றப் பெறுகின்றது. இறுதியாக அது வழக்கமான முறையில் மடிக்கப்பெற்று ஒரு புனல்போல் அமைந்த ஒரு வடிதாளின் நடுவில் செய்யப் பெற்றுள்ள ஓர் ஊசித் துளையின் வழியாகச் செலுத்தப்பெறுகின்றது. புனலில் தங்கும் பாதரசத்தின் இறுதித் துளிகள் அடுத்த முறை பாதரசம் கழுவப்பெறுங்கால் இருக்கட்டும் எனத் தனியே வைக்கப்பெறுதல் வேண்டும். பாதரசம் மிக உலர்ந்த நிலையில் இருக்க வேண்டுமாயின் அஃது இறுதியாக வடிகட்டப் பெறுவதற்கு முன்னர் அஃது ஒரு காற்றடுப்பில் வெது வெதுப்பாக்கப்பெறலாம், 296