பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் கம்பிச் சட்டங்களுக்கிடையில் உலர்தல் மிக விரைவாக நடைபெறுகின்றது. முதலில் ஒரு சில நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் மாதிரிப் பொருள்கள் அகற்றப்பெற்று புதிதான உலர்ந்த தாள்கட்கிடையில் வைக்கப்பெறுதல் வேண்டும்; ஆளுல் அப்பொருள்கள் சற்று உலர்ந்ததும் இத்தகைய மாற்றங்கள் அடிக் கடிச் செய்யப்பெற வேண்டியதில்லை. 100 மில்லி லிட்டர் மெத்திலேடட் ஸ்பிரிட்டில் (மெத்தில் சாராயம்) 0.5 கிராம் மெர்க்கியூரிக் குளோரைடு கரைந்த கரைசலைக்கொண்டு மாதிரிப் பொருள்கள் தூ ரி ைக யி ளு ல் இலேசாகத் தடவப்பெற்ருல் அவற்றின்மீது பூஞ்சக் காளான் வளர்வதைத் தடுக்கலாம். அதன் பின்னர் மாதிரிப் பொருள்கள் விறைப் பான ஒவியத் தாள் ஏடுகள் அல்லது கிட்டத் தட்ட 25x45 செ.மீ. அளவுள்ள பிரத்தியேக மாகச் செய்யப்பெற்ற அட்டைகளின்மீது ஒட்டப்பெறுதல் வேண்டும். ஒட்டும் பசையி லும் சிறிதளவு மெர்க்கியூரிக் குளோரைட் கலந் திருக்கவேண்டும்; இதுவும் பூச்சிகளால் தாக்கப் பெருமல் தடுக்கும். மாற்று வழியாக, அல்லது மேற்கண்ட முறையுடன் சேர்ந்து, மாதிரிப் பொருள் அட்டையுடன் தைக்கப்பெறுதல் கூடும்; அல்லது ஒளிபுகும் ஒட்டும் நாடாவில்ை புற்றச் செய்யப்பெறுதல் கூடும். ஒவ்வொரு மாதிரிப் பொருளின்மீதும் குறைந் தது அடியிற் கண்டவாறு பெயரொட்டப்பெறு தல் வேண்டும்: (அ) அதன் பெயர், இனக் குடும்பத்தின் பெயர்; (ஆ) மாதிரிப் பொருளை அடையாளங் கண்டவர் அல்லது குழுவின் பெயர்; (இ) கண்ட இடம், கண்டறியப்பெற்ற நாள்; (ஈ) கண்டெடுத்தவரின் பெயர். மாதிரிப் பொருளைச் சேர்ந்த பழங்கள் (நெற்றுக்கள்) அல்லது பருமனை பொருள் பெயரொட்டப்பெற்றுத் தனியாகச் சேகரஞ் செய்யப்பெறுதல் வேண்டும்; ஆளுல் சிறிய விரைகள் ஓர் உறையில் வைக்கப்பெற்று அட்டையின் மீது இணைக்கப்பெறுதல் கூடும். பூச்சிகள் : பொருத்தமான நஞ்சுள்ள ஒர் அகண்ட வாயுள்ள புட்டியில் இவை மிக நன் ருகக் கொல்லப்பெறுகின்றன. கொல்லும் புட்டியொன்று பின்வருமாறு இயற்றப்பெறு கின்றது. 20 சதவிகிதம் பொட்டாசியம் சயனைடு கொண்ட சோடியம், பொட்டாசியம் சயனைடுகள் கலந்துள்ள வாணிகப் பொருள்' இதற்குத் திருப்திகரமானது. கரைசலில் சிறி தளவு பாரீஸ் காரையைச் சேர்த்து ஒரு மெல்லிய பசையாகக் கலக்கப்பெற்று ஒரு புட்டியின் அடிமட்டத்தில் 1 செ.மீ. ஆழத்திற்கு விரைவாக ஊற்றப்பெற்று அங்கு அப்படியே இறுகவிடப்பெறுகின்றது. இந்த சயனேடு - பாரிஸ் காரையின்மீது வைப்பதற்கேற்ப ஒரு மையொற்றுத் தாளினை வெட்டுக. இந்த வட்ட மான தாள் நிறையத் துளைகளை இடுக. இந்தப் புட்டிக்கு மரையுள்ள ஒரு முடி, அல்லது காற்றுப் புகாதவாறு இறுக்கமாகவுள்ள அடைப் பான் இருத்தல் வேண்டும்; இந்த அமைப்பில் இது சில மாதங்கள் வரை பயன் விளைவிக்கத் தக்கதாக இருக்கும். எச்சரிக்கை : பொட்டாசிய சயனைடும் சோடிய சயனைடும் இறப்பினை விளைவிக்கக் கூடிய நச்சுத் தன்மையுடையவையாதலின் அவை மிக மிகக் கவனத்துடன் கையாளப்பெறுதல் வேண்டும். சிறைப்படுத்தப்பெற்ற பூச்சி முதன்முத லாகக் கொல்லும் புட்டியில் வைக்கப்பெற்றதும் அஃது உணர்ச்சியற்றுப் போகின்றது; ஆகவே அது சாகும்வரையில் சிலமணி நேரம் அப் படியே விட்டுவைக்கப்பெறுதல் வேண்டும். அதன்பிறகு அஃது ஒர் அமைப்புப் பலகைக்கு அகற்றப்பெறலாம். வழக்கமாக அரை-வட்டப் பள்ளத்துடன் கூடிய பலகைக்குப் பதிலாக உள்ளது படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அமைந்த சாதனம் ஆகும்; இந்த அமைப்பில் அமுக்கப்பெற்றுள்ள இரண்டு தக்கைத் தகடு கள், அல்லது தடித்த அட்டைகள் தம்முடைய விளிம்புகட்கிடையே இடைவெளியுடன் மூன்ரு. வது தகட்டுடன் பொருத்தப்பெற்றுள்ளன. பூச்சியைத் திருப்தியான முறையில் பிடித்துக் கொள்ளுவதற்கேற்ப அமைப்புப் புலகை 298