பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சற்றுப் பெரிதாகவே இருத்தல் வேண்டும். பூச்சியினங்களுக்குரிய வகையைச் சார்ந்த ஒரு நீண்ட மெல்லிய குண்டுசி பூச்சியின் மார்பறை யின் நடுவில் செலுத்தப்பெறுகின்றது: பூச்சி பள்ளத்தில் சரியான நிலையில் உறுதியாக அமைக்கப்பெற்ற பி ன் ன ரே கு ன் டு சி செலுத்தப்பெறுகின்றது. அதன் பிறகு பூச்சி யின் இறக்கைகள், கால்கள், உணர் இழைகள் (Antennae) இவைகள் தேடுகருவி அல்லது நுண்ணிய சாமணத்தால் மிகக் கவனமாகப் பரப்பப்பெற்றுக் குறுகலாகவுள்ள காகிதத் துண்டுகளால் சரியான இடத்தில் வைக்கப் பெறுகின்றன. (இக்காகிதத் துண்டுகள் குண்டுசிகளால் பிடித்துக் கொள்ளப்பெறுகின் றன; இக்குண்டுசிகள் பூச்சியினைத் தொடுதல் கூடாது.) இப்பொழுது மாதிரிப் பொருள் முற்றிலும் நன்ருக உலர்த்தப்பெறுதல் வேண் டும்; அமைப்புப் பலகை ஒர் உலர்த்தும் பாண்டத்தில் (Desiccator) சில நாட்கள் வைக்கப்பெருதவரை வெப்பமண்டலப் பகுதி களில் உலர்த்துவது ஒர் எளிதான செயலன்று. அஃது உலர்ந்ததும் பூச்சியின் பல்வேறு உறுப் புக்கள் சரியான இடத்தில் அமைந்து விடுவ தால் காகிதத் துண்டுகள் அகற்றப்பெறுகின் றன. அஃது எளிதில் உடையக்கூடிய தன்மை யுடனிருப்பதால் மார்பறையிலுள்ள குண்டுசி அசைவதற்குரிய எவ்வித முயற்சியையும் மேற் கொள்ளலாகாது. இந்தக் குண்டுசியைக் கொண்டுதான் பூச்சி அமைப்புப் பலகையினின் றும் உயர்த்தப்பெற்று ஏற்றும் அட்டையில் பொருத்தமான நிலையில் குத்தப்பெறுகின்றது. இந்த ஏற்றும் அட்டை என்பது ஒர் அட்டை அல்லது அமுக்கப்பெற்ற தக்கையாலானது; இஃது சமதளமாகவுள்ள தகரப் பெட்டி அல்லது வேறு பொருத்தமான பெட்டியின் அடிமட்டத் தில் பொருந்துமாறு முன்னதாகவே வெட்டப் பெற்றதாகும்; இந்தப் பெட்டியின் மூடிக்குப் பதிலாக ஒரு கண்ணுடி முகப்பு அமைக்கப் பெறலாம். வெப்ப மண்டலப் பகுதிகளில் மாதிரிப் பொருள்களைப் பேணுதல் ஓரளவு சங்கடமான செயலாகும்; அங்குப் பல்வேறு வகை எறும்பு கள் அவற்றைத் தாக்குதலைத் தடுத்தல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. சில நுண்ணிய இன வகை எறும்புகள் புதிதான அல்லது உலர்ந்த ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் உள்ளுறுப்புக்களின் மீது ஆவலுள்ளனவாகக் காணப்பெறுகின்றன; தலை, மார்புக் கூடு, இறக்கைகள் இவற்றைத் தவிர ஒவ்வொன்றை யும் அவை அகற்றுவதில் முனைந்துள்ளன. ஆதலால் மாதிரிப் பொருள்கள் எறும்புகள் புகா பெட்டிகளிலோ அல்லது திரவங்களால் சூழப்பெற்றுள்ள ஏதாவது ஒரு தாங்கியின் மீதுள்ள பெட்டிகளிலோ வைக்கப்பெறுதல் வேண்டும். (ஆவியாதல் காரணமாக நீர் அடிக்கடி ஊற்றப்பெறுதல் வேண்டும்; கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதற்காக அதன்மீது ஓர் எண்ணேப் படலம் அல்லது தொற்று நீக்கியின் (Disinfectant) | LJ Leulà அமைக்கப்பெறுதல் வேண்டும். ஒரு மோட்டார் குழியிலுள்ள பயன்படுத்தப்பெற்ற பொறி எண்ணெய்க்கு அதிகமான கவனம் தேவை யில்லை; அது நீர் பயன் விளைவிப்பதைப் போலவே பயன் விளைவிக்கக் கூடியது.) எண்ணெய் அல்லது தொற்று நீக்கியினைக் கொண்ட தகரக் கலங்களில் ஒரு மேசையின் கால்கள் இருக்குமாறு அமைத்து அந்த மேசை யின்மீது பூச்சிப் பெட்டிகளை வைத்தலே இப் பிரச்சினைக்குச் சிறந்த முறையில் தீர்வு காண்ப தாகும். மேசையின் கால்கள் திரவத்தின் நடுவில் கவிழ்ந்த நிலையில் வைக்கப்பெற்றுள்ள சிறிய தகரக் கலங்களின்மீது இருக்குமாறு அமைத்து விட்டால் அவை தூய்மையாகவும் நனையாமலும் இருக்கும். எறும்புகளும் தீங்கு பயக்கும் வேறு பூச்சிகளும் திரவத்தின் மேற் பரப்பைக் கடந்து செல்ல முடியாது. வேறு உயிரியல் சம்பந்தமான மாதிரிப் பொருள்கள் : நீர்-நில வாழ்வன, ஊர்வன, பறவைகள், பாலுண்ணிகள் முதலியவை குளோரோஃபாரம் என்ற ஒரு மயக்க மருந் தால் கொல்லப்பெறுகின்றன; இப்பிராணிகள் இருக்கவேண்டிய பெட் டி யி ல் அட்டை போலமைந்த பஞ்சினைக் குளோரோஃபாரம் திரவத்தில் தோய்த்து வைத்து இச்செயல் நிகழ்த்தப்பெறுகின்றது. 70 சதவிகித சாராயம் அல்லது 4 சதவிகித ஃபார்மலின் (Formatin) என்ற திரவங்களில் பாலுண்ணிகளைப் பாது காப்பாக வைக்கலாம். நீர்-நில வாழ்வன, ஊர்வன, நத்தை இனப்பிராணிகள் (Molluscs) மோலோடுள்ள நண்டு இனத்தைச் சேர்ந்த 1îrrsssfissir (Crustaceans) P, Rus»s.js&m 299