பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் துணையும் விரும்பத்தக்கது. மிகக் கடின மான அல்லது மிக எளிதான பொருள், சிறுவர் களின் விடையைத் தராத பொருத்தமற்ற பொருள் ஆகியவை ஊக்கத்தைக் கெடுக்கும். மெதுவாகக் கற்கும் மாளுக்கர்கள் அல்லது படிப்புக் குறைகளையுடையவர்கள் ஆகியோருக் குப் படிக்கும் பொருள்களைத் தேர்ந்தெடுத்தலி லும் சிறப்பான கவனம் வேண்டற்பாலது. அறிவியலில் படித்தலிலும் கற்றலிலும் திறனை வளர்த்தல் இணைந்தே செல்லுதல் கூடும். ஆளுல், அறிவியல் கற்கும் வழிகளில் படித்தலும் ஒரு வழியாகும். அதனை அதிகமாக வற்புறுத்து தல் அறிவியல் பயிற்றலின் சில அடிப்படையான நோக்கங்களைப் புறக்கணிப்பதாகும். அறிவியலைக் கற்று, நுகர்ந்து, அது சிறுவர் சிறுமியரின் வாழ்வில் செயற்படச் செய்வதற்கு முன்னர், அது புத்தகத்தின் பக்கங்களை விட்டு நீங்கி அவர்களின் அன்ருட அனுபவத்துடன் சிறந்த முறையில் கலந்துவிடவேண்டும். பாடப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக நின்று துணைபுரியும். ஆசிரியர்களும் மாளுக்கர்களும் இணைந்த நிலையில் பிரச்சினைகள் எழுப்பப் பெறும். பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழிகள் மாளுக்கர் குழுவினல் தீர்மானிக்கப் பெறும். அதன் பிறகு, படித்தல் மிகவும் சிறந்த, பயன் படக்கூடிய, முறையாக அமையலாம் ; அமை கின்றது. பாடப் புத்தகம் நமக்குத் தேவையான தகவலைத் தருகின்றது. இதல்ை, நாம் புத்த கத்தின் 18-வது பக்கத்தைத் திறந்து 24-வது பக்கம் வரைப் படிப்போம் ; அதன் பிறகு படித்த வற்றைப்பற்றிப் பேசுவோம்' என்பது பொரு ளன்று. - உற்று நோக்கலால்: எல்லா அறிவியல் பயிற்றலிலும் உற்று நோக்கி அறிதல் மற்ருெரு இன்றியமையாத செயலாகும். தங்களுடைய புலன்களைப் பயன் படுத்துவதன்மூலம் சிறுவர்கள் பலவற்றில் அனு பவத்தை அடைதல் கூடும். பொருளின் இழை நயத்தைத் தொட்டுணர்தல் அல்லது உலர்ந்த மின்கலத்துடன் இணைக்கப்பெற்றுள்ள கம்பி யைத் தொட்டு வெப்பத்தை உணர்தல், முகில் உண்டா தலைக் காணல், நிழல்களின் நீளத்தில் மாற்றங்களைக் காணல், பறவைகளின் குரல் களைக் கேட்டல் ஆகிய இத்தகைய பல்வேறு செயல்கள் அறிவியல் வேலையின் ஒரு முக்கிய C. சிறுவர்கள் அறிவியல் கற்கும் முறை மான பகுதியாகும். இவை கற்றலை மிகவும் தெளிவுடையனவாக்குகின்றன. பொருள்களின் சிறப்பியல்புகளே அறுதியிட வும், வளரும் பொருள்களிலுள்ள மாற்றங்களைக் காணவும், பிராணிகளின் பழக்கவழக்கங்களே அறியவும், சோதனைகளின் மு. டி வு க ளை க் காணவும் சிறுவர்கள் உற்று நோக்குகின்றனர். ஆளுல் அவர்கள் நாளுக்கு நாள் மிகச் சரியாக உற்று நோக்கவும், தம்முடைய உற்று நோக்கல் களைக் கவனமாக அறிவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். மிகச் சரியாக உற்று நோக்கும் திறனும் உற்று நோக்கினவற்றைச் சரியாக அறிவிக்கும் திற னும் மிகவும் இன்றியமையாதவை, இவை யின்றிச் சோதனை செய்தல் முற்றிலும் வீளுன செயலாக முடியும், சிறுதொலைப் பயணங்களும் காட்சித் துணைக்கருவிகளும் இவையின்றிப் பயனுள்ளவையாகா. நம்முடைய உற்று நோக் கல்களில் மிகக் கவனமாக இருக்க நாம் பயிற்சி பெறுவோமாயின் நம்முடைய அன்ருட வாழ்க் கைச் சூழல்களினின்றே எத்தனையோ செய்தி களை அறிந்து கொள்ளலாம். தம் பள்ளி வாழ்க் கையிலேயே இம்முறையில் கற்கும் அனுபவத்தை அடையும் மாளுக்கர்கள் இங்ங்னம் கற்காதவர் களை நோக்க விரைந்தோடும் தொடக்கத்தைப் பெற்றவர்களாகின்றனர். சிறுதொலைப் பயணங்களை மேற்கொள்ளலால் : பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் தகவலை அடையும் நிகழ்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்பெறும் சுற்றுலாக் கள் (excursions) தொடக்க அறிவியலில் முக்கிய மான செயல்களாகும். பூங்காக்கள், பிராணிக் காட்சிச்சாலை,தொலைப்பேசிப் பறிமாற்ற நிலையம், மரம் அறுக்கும் வாள் பட்டடை, வானவூர்தி நிலை யம், குடிநீர் தூய்மையாக்கப்பெறும் இயந்திர அமைப்பு, நெல்வயல், பள்ளிக்கு அண்மையி லுள்ள இத்தகைய வேறு இடங்கள் ஆகிய வற்றிற்கு ஆசிரியர்களும் மாளுக்கர்களும் சிறு தொலைப் பயணங்களை மேற்கொள்வர். இத் தகைய பயணங்களை நன்குத் திட்டமிட்டு மாளுக்கர்கள் ஊக்குவிக்கப்பெருவிடில், அவை ஆசிரியருக்குத் தலைவலியை நல்கும்; மாளுக்கர் கட்கு ஏதோ ஒருவித விடுமுறை கிடைக்கும் : பள்ளிக்கும் கேடு பயக்கும் பொது மக்கள் உறவு கள் நேரிடும்.

13

13