பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. லுனர்கள் அறிவியன் கல்கம் முறை தம் மனத்தில் ஒரு திட்டமான நோக்கத்துடன் சிறுவர்கள் சுற்று லாக்களே மேற்கொள்ள வேண்டும்; சிறுதொலைப் பயணங்களால் அடை யும் தோடியான அனுபவத்தால் பல விளுக் களுக்கு மிகச் சரியான விடைகளைக் காணல் முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறு வ ரி க ள் தம்முடைய சிறு தொலைப் பயணத்தின் நோக்கத்தை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்; இதில் வழிகாட்டி யாகப் பங்கு பெறுவோர் சிறுவர்கள் பார்க்க வேண்டியவற்றையும் கற்கவேண்டியவற்றையும் முதலிலேயே அறிந்துகொண்டிருத்தல் வேண் டும்; ஆசிரியர் முதலில் தான் மட்டிலும் தனியாக அந்த இடங்கட்குச் சென்று அங்கு வழிகாட்டி யாகப் பங்குபெறுவோரிடம் கலந்து ஆராய வேண்டும். மானுக்கர்கள் குழுவாக நின்று இயங்குவதில் ஆசிரியர் அந்த வழிகாட்டிக்குத் துணைபுரிந்து பலவற்றைக் காண்பதற்கும், அவற்றைப்பற்றி வினுக்களை விடுப்பதற்கும் தல்ல வாய்ப்புக்களை உறுதியாகப் பெறச் செய் தல் வேண்டும். சுற்றுலாக்கள் கற்கவேண்டிய பாடத்தின் முழுப்பகுதியாக அமையவேண்டுமேயன்றி சுற்று லாக்கள் செல்லல் வேண்டும் என்பதற்காக அவற்றை மேற்கொள்ளலாகாது. சிறு தொலைப் பயணங்கள் ஓர் அறிவியல் பாடத்திட்டத்திற்கு மதிப்பிட முடியாத அளவிற்குப் பயன்களை விளை வித்தல் கூடும்; அல்லது அவை வீண் காலம் கழித்தலாகவும் முடியும். சுற்றுலா செல்வதற் குரிய காலத்தைவிட அதனைத் திட்டமிடுவ தற்கும், அச்சுற்றுலாவில்ை பெறும் நல்விளைவு களத் திரட்டியறிவதற்கும் அதிகக் காலத்தைச் செலவிடல் வேண்டும். இப்படிச் செய்வதால் சுற்றுலாவின் முழுப்பயனையும் பெறலாம். - காட்சித் துணைப்பொருள்களப் பயன்படுத்தலால் : மாளுக்கர்கள் அறிவியல் கற்கும் இன்னொரு முறை அசைவுப் படத்தின்மூலம் அல்லது பிற வகைப் படத்தின்மூலம் ஆகும். முதல்நிஜல் பள்ளி அறிவியல் பயிற்றலில் காட்சித் துணைக் கருவிகளைப் பயன்படுத்தும் அவசியத்தைப்பற்றி மிக அதிகமாகவே கூறப்பெற்றுள்ளது. இன்று கிடைக்கக் கூடிய சில துணைக்கருவிகளின்றி ஒர் அறிவியல் பொடத்திட்டச் சல் fisper (science course) முற்றுப் பெறுவதில்லை; ஆனல் அதன் பெரும்பகுதி அத்துணைக்கருவிகளைப் பயன் படுத்துவதைப் பொறுத்துள்ளது. அசைவுப் படங்களும் திரைப்படத் துண்டுகளும் (filmStrips) பயன்படக்கூடிய பல வகைத் துணைக் கருவிகளில் ஒரு வகையைச் சார்ந்தவை. இவற் றிற்குச் சமமாகப் பயன்படக்கூடிய வேறு பலவும் உள்ளன. அசைவுப் படங்களும் திரைப்படத் துண்டு களும் பயன்படுத்தப் பெற்ருல் அடியிற் காணும் இன்றியமையாத குறிப்புக்களைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். 1. ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தலைப் போலவே ஒரு ஃபிலிமைத் (film) தேர்ந்தெடுத் தலும் மிகவும் முக்கியமானதாகும். மேல் நிலை களில் பயன்படுத்துவதற்கென்று திட்டம் செய் யப்பெற்ற ஃபிலிம்கள் தொடக்கநிலை மாளுக்கர் களுக்குப் பொதுவாகப் பயன் அளிக்கக் கூடி யவை அன்று. எடுத்துக்கொண்ட பிரச்சினை யில் நேரடியாகத் தொடர்புள்ள ஃ பிலிம்களையும் எந்த நிலைகளுக்குப் பயன்படுத்துவதற்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பெற்றனவோ அந்நிலை ஃ பிலிம்களையுமே தேர்ந்தெடுத்தல் வேண்டும். 2. ஃபிலிம்கள் காட்டப்பெறுவதற்குத் தகுதி யுடையனவா என்பதைத் தீர்மானிக்கவும், அவற் றைப் பயன்படுத்துவதற்கு ஆயத்தம் செய்யவும் ஆசிரியராலும் மாளுக்கர் குழுவாலும் முன்ன தாகவே பார்க்கப்பெறுதல் வேண்டும். ஒரு ஃபிலிமை முன்னதாகப் பார்த்தல் அது பயன் படுத்தப்பெற வேண்டிய நோக்கத்தை அறுதி யிடவும், அஃது எப்பொழுது (ஒரு பாடத்தின் தொடக்கத்தில், நடுவில், அல்லது இறுதியில்) காட்டப்பெறல் வேண்டும், அல்லது இந்நிலை களில் ஒரு தடவைக்கு மேற்பட்டுக் காட்டப் பெறுதல் வேண்டுமா என்பதை அறுதியிடவும் துணை செய்கின்றது. 3. ஃபிலிமைப் பார்ப்பதற்கு முன்னர் வகுப்பும் ஆயத்தப்படுத்தப்பெறுதல் வேண்டும். ஃபிலிமில் என்ன பார்க்க வேண்டும், அவற்றை ஏன் பார்க்க வேண்டும் என்பதை மாளுக்கர்கள் அறிதல் வேண்டும். 4. ஒரு ஃபிலிமைப் பார்த்தவுடன் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சொல்லாடல் (discussion) மிகவும் இன்றியமையாதது. இத் தகைய சொல்லாடல் நடைபெறுங்கால் விளுக் கள் விடுக்கப்பெறுகின்றன; கருத்துக்கள் தெளி வடைவிக்கப்பெறுகின்றன; மேலும் விளக்கங் கள் தரப்பெறுகின்றன.

14

14