பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஃபிலிம்கள் வேடிக்கைக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ காட்டப்பெறவில்லை என்பதையும், அவை கற்றலின் நோக்கத் திற்காகவே கையாளப்பெறுகின்றன என்பதை யும் மாளுக்கர்கள் உணர்வதற்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பெறுதல் வேண்டும். அசைவுப் படங்களும் திரைப்படத் துண்டு களும் முதல்நிலைப் பள்ளி அறிவியலில் பயன் படுத்தப்பெறும் காட்சித் துணைக்கருவிகளுள் ஒரு வகையாகும். பருவ வெளியீடுகளிலும் அவை போன்ற இதழ்களிலும் வெளிவரும் படங்கள் பல சமயங்களில் புறக்கணிக்கப்பெறுகின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணுக்கர்கள், பெற்ருேர்கள் இவர்களின் கூட்டுறவால் மிக அருமையான பயிற்றுவதற்குரிய படங்கள் திரட்டி வைக்கப்பெறுகின்றன. பிராணிகள் எங்ங்னம் வளர்கின்றன, அவை எங்ங்னம் தம் சூழ்நிலைக்கிணங்க மாறுகின்றன, அவை எங்கு வாழ்கின்றன, அவை எவற்றை உண் கின்றன--இவை போன்ற செயல்களை விளக்கும் படங்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். நாம் எவ்வாறு மின்சாரம், பொறிகள், வில்லைகள் (lens), பல்வேறுவகை ஆற்றல் ஆகியவற் றைப் பயன்படுத்துகின்ருேம் என்பவற்றைக் காட்டும் படங்கள் வேறு எடுத்துக்காட்டுக்களா கும். இவை சில முக்கியமான கருத்துக்களை விளக்குவதற்காகத் திரட்டப்பெறுகின்றனவே யன்றி, வெறும் படக்குவியலாக இருப்பதற்கன்று என்பது முக்கியமாக நினைவிலிருத்தவேண்டிய தொன்ருகும். கருத்துக்களைத் தெளிவாக்குவதற்கு மாதிரி உருவங்கள் (models) மிகவும் பயனளிக் கின்றன ; அவை முக்கியமாக அந்த நோக்கத் திற்காகவே பயன்படுத்தப்பெறுதல் வேண்டும். தொடக்க நிலை அறிவியல் வகுப்புக்களில் மாதிரி உருவங்கள் அமைத்தலுக்குப் பல சான்றுகள் உள்ளன; இவை யாவும் கிட்டத்திட்ட முற்றிலும் காலத்தை வீணுக்கும் செயல்களாகவே அமை கின்றன. எடுத்துக்காட்டாக: முதல்நிலைப் பள்ளி D. அறிவியல் பயிற்றுவதற்குரிய மூலவனங்கள் நிலையில் மலரின் பகுதிகளைக் காட்டுவதற்கு மெழுகினல் மாதிரி உருவம் அமைத்தல் மிகவும் பயன்படக் கூடியதன்று ; ஏனெனில் மலரின் அமைப்பினைப்பற்றிய விரிவான அறிவு இந்நிலை மாளுக்கர்கட்கு இன்றியமையாத தன்று. ஆயினும், கதிரவன் மண்டலத்தைப் பற்றிய கடினமான பொதுமைக் கருத்துக்கள் கதிரவன் மண்டலத்தைக் காட்டும் மாதிரி உருவத்தால் மிக எளிதாக விளக்கம் பெறுகின் றன. அது கதிரவன் மண்டலத்திலுள்ள கோள்களின் ஒப்புமைசார்ந்த பருமன்களையும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவுகளையும் பற்றிய கருத்தினைத் தருகின்றது ; அது சிறுவர் கள் கையாளக்கூடிய பருமன், இடைவெளி (space) பற்றிய பொதுமைக் கருத்துக்களை மிகவும் தெளிவாக மனத்தில் கொள்ளவும் மாணுக்கர் கட்குத் துணைபுரிகின்றது. பயிற்றும் வேறு துணைக்கருவிகளே அமைத்தலைப்போலவே மாதிரி உருவம் அமைக்கும் நோக்கத்தையும் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும். வானிலை பற்றிய கருவிகளின் மாதிரி உருவங்களை அமைத் தலும் சமநிலை விளையாட்டுக் கருவிகளை அமைத் தலும் சிறுவர்கள் புரிந்து கொள்வதில் பங்கு கொள்ளும் கட்டுமானச் செயல்களாகும். இங்ங்னம் மாளுக்கர்கள் அறிவியலைக் கற்கக் கூடிய பல்வேறு வகைச் செயல்கள் உள்ளன. எது நிறைவேற்றப்பெறல் வேண்டுமோ அதனைப் பொறுத்தே அச்செயலைத் தேர்ந் தெடுத்தலும் அமைகின்றது. அது புரிந்து கொள்ளல், கவர்ச்சியூட்டுதல், தெளிவு பெறுதல் இவற்றிற்குத் துணைபுரியக் கூடியதாகவுள்ள ஒரு செயலாக இருக்கட்டும் ; செயல்வேண்டும் என்ப தற்காக ஒரு செயலே மேற்கொள்ளல் விரும்பத் தக்கதன்று. ஒரு செயல் ஓர் அறிவியல் விதியை அல்லது கருத்தினை மிகத் தெளிவாக்கவேண் டும்; மிகக் கவர்ச்சியுடையதாக்கவேண்டும்; அது மாளுக்கர்களுடைய மனங்களும் கைகளும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பினையும் ந ல் கு த ல் வேண்டும். D. அறிவியல் பயிற்றுவதற்குரிய மூலவளங்கள் சிறுவர் சிறுமியருக்கு நமது கல்வித் திட்டம் மிகவும் உயிருள்ளதாகவும் பொருள் பொதிந் துள்ளதாகவும் இருப்பதற்கு நமது கையிருப்பி லுள்ள மூலவளங்களைப் (resources) பயன்படுத்த வேண்டுமென்று நாம் தொடர்ந்து தூண்டப் பெறுகின்ருேம். அடிக்கடிப் பாடப்பொருளும் பயிற்று முறைகளும் நமக்கு அண்மையிலுள்ள பொருள்களையே தொலைவிலுள்ளனவாகவும்

15

15