பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சியுற்ற சாயங்கள் என வழங்கப்பெறும் நூலிழையிலுள்ள வண்ண வளர்ச்சிக்கு மூன்று கரைசல்கள் தேவைப்படுகின்றன. முதல் கரைசலில் 0.1 கிராம் பிரைமுலினும் 0.1 கிராம் சோடியம் பைகார்பனேட்டும் (NaHCO) 100 கிராம் நீரில் கரைக்கப்பெற்றுள்ளன. கஞ்சி நீக்கப்பெற்ற ஒரு துணியை இந்தக் கரைசலில் 1 நிமிடம் கொதிக்க வைத்து இரண்டாவது கரைசலுக்கு மாற்றுக. 05 கிராம் சோடியம் நைட்ரைட்டும் (NaNO) 3 மில்லி லிட்டர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl) 109 மில்லி விட்டர் நீருடன் சேர்க்கப்பெறுகின்றது. இத் துண்டுத் துணி இந்தக் கரைசலில் 15 நிமிடங் கள் இருக்க அனுமதிக்கப்பெற்று அதன் பிறகு வளர்ச்சிபெறச் செய்யும் தொட்டிக்கு மாற்றப் பெறுகின்றது. 0.05 கிராம் சோடியம் ஹைட் ராக்ஸைடும் (NaOH) 0.05 கிராம் ஃபீனுலும் (Phenol) 100 மில்லிலிட்டர் நீரில் கரையச் செய்து இத்தொட்டி தயாரிக்கப்பெறுகின்றது. (ஃபீனுலுக்குப் பதிலாக ஆல்ஃபா நேஃப்தால் அல்லது ரிஸார்ஸிஞல் பயன்படுத்தப்பெற லாம்.) இந்தக் கரைசல் வெதுவெதுப்பாக வைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்; இதில்துணி 20 நிமிடங்கள் இருக்கச்செய்து, அதன்பிறகு கழுவப்பெற்று உலர்த்தப்பெறுகின்றன. பல் வேறு வகைகளில் சாயந்தோய்த்தலின் விளைவு கள் பண்பினையொட்டி ஆராயப்பெறலாம். 33. தீக்குச்சிகளைத் தயாரித்தல்: சிறிய மரச் சிம்புகளைத் தயாரித்திடுக; அல் லது பயன்படுத்தப்பெறுவதற்கு முன்னர் தலைப் பகுதி நீக்கப்பெற்ற தீக்குச்சிகளைப் பயன் படுத்துக. இக் குச்சிகளின் முனைகள் உருகிய பாரஃபின் மெழுகில் தோய்க்கப்பெறுகின்றன. 2 கிராம் பொடியாக்கப்பெற்ற பொட்டாசியம் குளோரேட்டும் (KCIO) 1 கிராம் சிவப்பு ஆண்டிமொனி ட்ரைசல்ஃபைடும் (Sbs8) சேர்ந்த கலவை தயாரிக்கப்பெறுகின்றது. இதனை அறைத்துப் பொடியாக்குதல் கூடாது. இந்த இரண்டு திடப்பொருள்களும் விரல் களால் க ல க் க ப் .ெ ப று த ல் வேண்டும். மெல்லிய கோந்து (Mucillage) சேர்த்து அது பசையாகச் செய்யப்பெறுகின்றது. பாரஃ பின் மெழுகில் தோய்க்கப்பெற்ற தீக்குச்சி யின் முனை இக்கலவையில் தோய்க்கப்பெற்று ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் நன்ருக உலர்ந்து கெட்டியாவதற்கு ஒரு நாள் முழுவதும் தலைகீழாகத் தொங்கவிடப்பெறுகின் றது. சமபரிமாணங்கள் சிவப்பு ஃபாஸ்ஃபரஸாம் நுண்ணிய வெண்மணலும் கலந்த கலவை யுடன் கோந்து சேர்த்து தீக்குச்சிகளைத் தீப் பற்றவைக்கும் ஒரு மேற்பரப்பு தயாரிக்கப்பெறு கின்றது. அக்கலவை ஓர் அட்டையின்மீது அல் லது மரத்தாலான ஒரு மேற்பரப்பின்மீது பரப்பப்பெற்று உலரவைக்கப்பெறுகின்றது. இந்த மேற்பரப்பின்மீது தேய்க்கப்பெறுங்கால் தீக்குச்சிகள் தீப்பற்றுகின்றன. இங்ஙனம் தயாரிக்கப்பெறும் தீக்குச்சிகள் கடையில் விற்பனையாகும் காப்புத் திக்குச்சி வகைகளுடனும் காப்பில்லாத தீக்குச்சி வகை களுடனும் ஒப்பிடப்பெறுதல் வேண்டும். 34. வேதியியல் பூந்தோட்டங்கள் : வேதியியல் பூந்தோட்டங்கள் சவ்வூடுபரவும் செயலின் விளைவால் ஏற்படுபவை. 1.1 அடர்வு எண்ணுள்ள சோடிய சிலிக்கேட்டுக் (நீர்க் கண் ணுடி) கரைசல் விரும்பத்தக்கது. 400 மில்லி லிட்டர் இக் கரைசலைக்கொண்ட ஒரு முகவை யில் தாமிரம், இரும்பு, அலுமினியம் இவற்றின் சல்ஃபேட்டுத் துண்டுகளும், தாமிரம், இரும்பு, இவற்றின் குளோரைடுகளும் தாமிரம், இரும்பு, கோபால்ட்டு, நிக்கல், கால்சியம் இவற்றின் நைட்ரேட்டுகளும் போடப்பெறுகின்றன. இத் துண்டுகளினின்றும் பூக்கள் விரைவாக வளர் கின்றன. சிலிக்கேட்டுகள் சவ்வுபோன்ற பைகளை உண்டாக்குகின்றன; இப் பைகள் தம் உட்புறம் உயர்ந்த அடர்வினைக் கொண்டுள் ளன; இதனுல் பைகளின் வளர்ச்சி விரைவாக நடைபெறச் செய்கின்றது. 35. திருகு சுருளாயமைந்த வில்லினைச் சுற்றுதல் ஒரு சராசரி வில்லிற்கு ஃபாஸ்ஃபர் பிரான்ஸ் அல்லது எஃகுக் கம்பி (SWG 26) பொருத்த மானது. 15 செ.மீ. நீளமுள்ள ஓர் ஆணியைத் தேர்ந்தெடுத்து அதன் கூர் துணியை ஒரு சிறிய துளையிடுங் கருவியின் வாயில் இறுகப் பற்றுவித்திடுக. கம்பியின் முனையையும் அந்த வாயிலேயே சிக்கவைத்திடுக. அந்தத் துளை யிடும் கருவியைக் கிடைமட்டமாக ஒரு கம்பி யினது பிடிசாவியில் பொருத்துக. துளையிடும் 311