பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் கருவியின் கைப்பிடியைச் சுழற்றுக; உங்கள் கையைக் காப்பாற்றும் பொருட்டு துணியை அல்லது ஒரு தோலுறையைப் பயன்படுத்திக் கம்பியின் மற்ருெருமுனையைப் பலமாக இழுத் திடுக. உங்கட்குத் தேவையான நீளமுள்ள வில்லைச் செய்ததும், ஆணியைச் சுற்றிலும் கம்பியின் முனையை வளத்திடுவதற்கு ஒரு பற்றுக் குறட்டினைப் பயன்படுத்துக; அதன் பிறகு கம்பியை வெட்டிவிடுக. கம்பியின் சுற்று சிறிதளவு பிரியும்; இதல்ை குறையொன்றும் இல்லை. துளையிடும் கருவியின் வாயினின்றும் கம்பியை விடுவித்து, இவ்வாறு அமைந்த வில் லின் முனையை வெட்டிவிடுக;ஆணியையும்அகற் றுக. பற்றுக் குறட்டினைப் பயன்படுத்தி வில் லின் ஒரு முனையிலுள்ள இரண்டு கோடிச் சுற்றுக்களையும் இணைத்து உறுதியாகப் பற்றிக் கொண்டு ஒரு கண்ணி உண்டாகுமாறு அவற் றினைச் செங்கோணங்களில் வளைத்திடுக. வில் லின் மற்ருெரு முனையிலும் இதனையே திரும்பச் செய்திடுக,