பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 19 அறிவியல் பயிற்றலில் சற்றேறக் குறைய நூறு ஆண்டுகளாக பள்ளிகளில் அறிவியல் பயிற்றப்பெற்றுவருகின் றது. அஃது இயற்கை மெய்ப் பொருளியலாகத் தொடங்கியது; கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கட்கு முன்னர்தான் அது சிறப்பாக மெய்ம்மை யும் வருணனையும் நிறைந்த அறிவியல் சார்ந்த அறிவின் தொகுதியாக அமைந்தது. கடந்த ஒரு சில ஆண்டுகளாகப் பல நாடுகளின் அறி வியல் திட்டங்கள் ஆராய்ச்சி நிலையில் இருந்து வருகின்றன. இந்த நூற்ருண்டில் அறிவியல் அறிவின் விரைவான முன்னேற்றம் பல புதிய கருத்துக்களையும் (Concepts), கருத்துக்களின் ஒரு புதிய ஒருமைப்பாட்டினையும் கொண்டுவந் துள்ளது. அறிவியலின் வகைமுறையும் அதன் பொருளும் மாறிவிட்டன; தனியாக செய்யப் பெற்ற ஆராய்ச்சியின் இடம் குழு ஆராச்சியால் ஈடுசெய்யப்பெற்றுள்ளது; புதிய நுட்ப முறை கள் (Techniques) தோன்றியுள்ளன: பயன் படும் ஆய்கருவியும் மிக அதிகமாக விரிந்த நிலை யில் அமைந்துள்ளது. பள்ளியில் பயிற்றப் பெறும் அறிவியல் அன்ருட வாழ்வினின்றும் பிரிந்துவிட்டது; பல ஆசிரியர்கள் ஒரு தலை முறைக்கு முன்னிருந்த அறிவியலைப் பயிற்ற லும் போதாது என்று உணரத் தொடங்கிவிட் டனர்; ஆளுல் அந்த அறிவியல் பகுதி நவீன காலத்திற்கு மிகப் பொருத்தமாகவுள்ள பாடத் திட்டங்களில் சேர்க்கப்பெறுதல் வேண்டும். இதில் சிறப்பாக புதிது ஒன்றும் இல்லை; அண் மையிலோ அடுத்தோ சமூகத்தின் திறன்களும் அருஞ்செயல்களும் பள்ளிகளுக்குரிய கல்வித் திட்டத்தில் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. ஆல்ை, அறிவியலிலும் கணித இயலிலும், அவற்றுடன் இணைந்துள்ள தொழில் நுண் ணி யலிலும் நேரிட்டுள்ள பெரிய முன்னேற்றங்கள் கல்வியற்றிய கொள்கை, அதன் நடைமுறை இவற்றின் முன்னேற்றத்தையும் வி ஞ் சி விட்டன. இதன் காரணமாகவே, பல நாடுகள் தம் முடைய கல்வித் திட்டங்களைத் திரும்பச் சிந்தித்து வருகின்றன; அறிவியல்களிலேயே பெளதிக இயல் மிக முன்னேற்றம் அடைந் திருப்பதாலும், அது மானிட வாழ்வில் பெரு XL சில புதிய போக்குகள் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாலும், இந்தப் பாடமே முதலாவதாக ஆராய்ச்சியைப் பெற் றுள்ளது. இதல்ை எய்தின முடிவுகள் ஏனைய அறிவியல் பாடங்கட்கும் சமமாகப் பொருந்து கின்றன; ஆனல் பின்னல் வருவனவற்றில் பெளதிக இயலுக்கே அதிக அழுத்தம் தரப் பெறும்; காரணம், இந்தப் பாடத்தில் சில முற்றுப்பெற்ற பாடத்திட்டங்களும் ஏற்பாடு களும் தயாரிக்கப்பெற்று, சிறு திட்டங்களாகச் (Pilot schemes) சோதிக்கப்பெற்றுள்ளன. ஒரு சிறிய அளவு மதிப்பீட்டில் பல்வேறு நாடுகளின் கல்வித் திட்டங்களை விரிவாகத் தருவது இயலு வதொன்றன்று; அடியிற் குறிப்பிடப் பெறுவன வற்றுள் பாடத் திட்டங்களை அமைப்பதில் உள் ளடங்கியுள்ள விதிகளில் மட்டிலுந்தான் அழுத் தம் காட்டப்பெற்றுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பெளதிக அறிவியல்களின் ஆய்வுக் குழு, ஒன்றுபட்ட அரசினச் சார்ந்த (United Kingdom) ®Igìs?u6ì; e$$ fuissifisiT கழகம், பன்டுை சார்ந்த கொள்கை முறை பயன்முறை பெளதிக இயல்களின் கழகம் இவை ஆற்றியுள்ள செயல் குறிப்பிடப்பெறும்; சோவியத் சோஷலிஸ்டுக் குடியரசு நாடுகளின் கூட்டணியில் நடைமுறையிலுள்ள பெளதிக இயல் பயிற்றல்பற்றிய ஒரு சுருக்கமான குறிப் பும் இதில் சேர்க்கப்பெறுகின்றது. பெளதிக அறிவியல்களின் ஆய்வுக் குழுவின் பணி: பெளதிக அறிவியல்களின் ஆய்வுக் குழு என்பது பல்கலைக்கழக பெளதிக இயல் ஆசிரியர் களும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும்அடங்கிய ஒரு குழுவாகும்; இவர்கள் 1956-இல் அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் மேம்பாடடைந்த பெளதிக இயல் பாடத் திட்டத்தை மேற் கொண்டனர்; அக்குழுவினரின் வேலை கல்விப் பணி புரிவோர் கழகத்தினுல் செயலாட்சி செய் யப்பெற்றது. இக்கழகம் ஊதியத்தைக் கருதாத ஒரு கூட்டவையாகும். இக்கூட்டவை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளியின் அறி வியல் கல்வியை மேம்பாடடையச் செய்வதற்கு ஒரு பொது இயக்கத்தையே தூண்டியது; இங் ங்ணமே இன்று உயிரியல், வேதியியல், கணித 313.