பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடியதற்கேற்ப வழக்கமான முறையில் திரட் டப்பெற்ற எடுகோள்களாக இருத்தல்கூடாது. 2. அவை மாணுக்கராலேயே விரைவாக கூட்டுவிக்கப்பெறும் எளிய ஆய்கருவியால் செய்யப்பெறுதல் வேண்டும். 3. அவை கருத்தேற்றம் தரப்பெற்ற போக்குகளில் மேலும் செயலில் உற்சாக மூட் டக்கூடியனவாக இருத்தல்வேண்டும்; சோதனை யினின்றே வளரும் கொள்கை சார்ந்த கருத்துக் களை ஆய்வதற்கு அழைத்துச்செல்லத் தக்கன வாக இருத்தல் வேண்டும்; ஏற்கெனவே பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள கருத்துக் களால் வழிகாட்டப்பெறுவனவாகவும் இருத் தல் வேண்டும். ஆசிரியர் க ள லு ம் மாளுக்கர்களாலும் அமைக்கப்பெறக்கூடிய ஆய்கருவி வகையை வளர்ப்பதே குழுவின் ஆதி எண்ண மாக இருந்தது; ஆல்ை, இதில் அடங்கியுள்ள பயன்கள் வெளிப்படையாக இருப்பினும் ஆசிரி யர்களின் மீதுள்ள சுமை மிக அதிகமாக இருக் கும் என்று விரைவில் கண்டறியப்பெற்றது. ஆய்வகக் கையேட்டில் விவரிக்கப்பெற்றுள்ள ஆய்கருவிகள் இப்பொழுது வணிகமுறையில் வணிகவிலே குறைந்த விலையில் இருப்பதற்கு இயலுமாறு அமைப்புக்களில் உற்பத்தி செய்யப் பெறுகின்றன. அதன் பிறகு கட்புலத் துணைக்கருவிகள் ஆராயப்பெற்றன; கிடைக்கக்கூடிய கல்வி பற்றிய ஃபிலிம்களைச் சோதித்தலில் ஒரு சில ஃபிலிம்களே வகைமுறையிலும் பொருளடக்கத் திலும் குறிப்பிடப்பெற்றுள்ள கருத்துக்களை மேலும் முன்னேற்ற முறையில் விளக்கிச் செல் வதாகக் காணப்பெற்றன. எனவே, புதிதாக அறுபது ஃபிலிம்கட்குத் திட்டமிடப்பெற்றது. இந்த ஃபிலிம்களின் நோக்கம் இது: (அ)ஆசிரி யரின்மீதுள்ள கமையை எளிதாக்குவதற்கு; (ஆ) ஆய்வகத்தில் மேற்கொள்வதற்கோ அல் லது செய்து விளக்கிக் காட்டும் சோதனைகளால் காட்டுவதற்கோ கடினமாக உள்ள செயல்களைக் கட்புலளுக்கி அளிப்பதற்கோ, (இ) ஒரு புதிய பாடத்தை முன்னிலைப்படுத்துவதற்கு, அல்லது ஒரு பாடப்பகுதியை சுருக்கியுரைப்பதற்கும் ஒருமைப்பாடடையச் செய் வ த ற்கு ம்; (ஈ) இயன்ற வரையில், உண்மையான சூழ்நிலையில் T அறிவியல் பயிற்றலில் சில புதிய போக்குகள் உண்மையான அறிவியலறிஞர்கள் வேலை செய் வதையும் அவர்கள் நேரடியாக மாணுக்கர்களி டம் பேசுவதையும் காட்டுவதற்கு. அறிவியல்பற்றியும் அறிவியலறிஞர்களைப்பற் றியும் தாள் கட்டமைத்த புத்தகத் தொகுதி ஒன்றை (Paperbacks) உற்பத்தி செய்வது குழு வின் தொடர்ந்த ஒரு செயலாக இருந்து வந் தது. அவற்றின் முதலாவதான நோக்கம் பாடப் புத்தகத்தின் சுமையை நீக்கிப் பொதுவிதிகளை விளக்கி யுரைப்பதாகும். தற்சமயம் அறுபது புத்தகங்கள் திட்டமிடப்பெற்றுள்ளன; இவை தலைமையான பாடத்திட்டத்தைப் பயின்று வரு பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பெளதிக (310 jurisosuu?&r (Survey of Physics) Bobôth. சில புத்தகங்கள் மனிதனுக்குப் பணிபுரிவதில் பெளதிகத்தின் பங்கின உரைக்கின்றன: மற்றவை வரலாறு கூறும் இயல்பினவாக இ ரு ந் து கண்டுபிடிப்பாளர்களை ப்பற்றிய வரலாறுகளையும், அவர்களுடைய பெரிய கண்டு பிடிப்புக்களையும்பற்றிக கூறுகின்றன. மேலும் அவை பாடத்திட்டத்துடன் மிகையாகச் சேர்வ துடன், துறைநெறி சாராதவருக்கும் புரியக் கூடியவையாக இருக்கலாம், அஃது அறிவியல் துறை மானுக்கருக்கும் கலைத்துறை மாளுக் கருக்கும் உள்ள இடைவெளியினை இனக்கும் பாலமாகவும் அமையலாம். மேற்கூறப்பெற்ற பாடத்திட்டத்தை மேற் கொண்ட முயற்சிகள் சில ஆசிரியர்கள் பாடப் புத்தகத்திற்கு ஒரு வழிகாட்டி பயனுள்ளதாக இருப்பதைக் காண்கின்றனர் என்பதைக் காட்டியது. ஆகவே பாடப்புத்தகத்திலுள்ள புதிர்கட்குரிய விடைகளும், பாடத்தைப் பயிற்ற லுக்குரிய கருத்தேற்றங்களும் உட்பட ஆசிரி யர்க்குரிய குறிப்புக்களை உண்டாக்குதல் குழு வின் இறுதியான முயற்சியாக இருந்தது. பல வற்றையும் உட்கொண்டுள்ள இந்த வழிகாட்டி இன்று கிடைக்கின்றது. அது இந்தப் பாடத் திட் டத்தை மேற்கொள்ள முயல்பவர்கட்கும், அல் லது தங்களுடைய சிறப்பான தேவைகட்கேற்ப அதனை மாற்றியமைத்துக் கொள்பவர்கட்கும் மதிப்பிட முடியாததாக இருக்கும். மேலும் தகவல்கள்: இந்தப் புதிய பாடத்திட்டத்தின் செல் திசை (Course) என்ன என்பதையும், அஃது 315