பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதல் வேண்டும்; தொடக்கநிலை முதல் இரண்டாண்டுகளையும், இடைநிலை கிட்டத்தட்ட மாளுக்கர்கட்குப் பதினறு வயது ஆகும் வரை யி லு ள் ள காலத்தையும், முன்னேற்றம் அடைந்த நிலை சிறிதளவு தனித்துறைப் புலமைப் பேற்றையும் கொண்டிருக்கும். 1960-இல் இந்தக் குழு இந்த மூன்று நிலை களையும் தழுவிய பெளதிக இயல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றிற்குரிய பாடத் திட்டங் களை வெளியிட்டது. நவீன வாழ்வுடன் மிக நெருக்கமாகத் தொடர்புள்ள பொருளை உள்ளடக்குவதற்கு இயலும்பொருட்டு, கடின மான பொதுமைக் கருத்துக்களும், ஆற் றல், காந்தம் இவைபற்றியனவும், வெப்பம், ஒளி இவை இரண்டுபற்றியனவுமான எண்ணங் களும், எண்ணைக் குறிக்கும் கணக்குகளும், பெளதிகப் பாடத்திட்டச் செல் திசையின் தொடக்கநிலை இடைநிலைகளினின்றும் நீக்கப் பெற்றன. முன்னேற்றம் அடைந்த நிலையில் எந்தச் செய்தியையும் பகுதியாக அமைப்பதில், 'அஃது இன்றைய பெளதிக இயலுக்கு அடிப் படையாக உளதா?’ என்பதுதான் அளவை யாக இருந்தது. பயன்முறை பெளதிகம் அல் லது தொழில் நுண்ணியல் என்ற தலைப்பின் கீழ் மிகப் பொருத்தமாக அடக்கப்பெறும் பாடங் களும்கூட நீக்கப்பெற்றுவிட்டன. இவை இருந்த இடங்கள் பொறி நுட்ப இயல்பற்றிய அடிப்படைப் பகுதிகளால் ஈடுசெய்யப்பெற் றுள்ளன; நவீன பெளதிகத்தை நன்கு உயர் வாக மதிப்பதற்கு இவ்வடிப்படைப் பகுதிகளைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத தாக உள்ளது. இதே பொது விதிகள் வேதியிய லிலும் செயற்படுத்தப்பெற்றுள்ளன. பிரிட்டனி லுள்ள பள்ளிகளில் வேதியியல் பயிற்றலின் உயர்ந்த நிலை உலகிலுள்ள வேறு எந்தப் பகுதி யிலுமுள்ள தைப்போல் இருப்பதாக உரிமை கொண்டாடப்பெறக்கூடியதாக இருந்தபோதி லும், புதிய நிலையைச் சமாளிப்பதற்குச் சிறிது மாற்றங்கள் இன்றியமையாதவையாக உள் ளன. கடந்த காலப் பாடத்திட்டங்கள், மெய்ம் மைகள், ஆயத்தம் செய்தல், செயல்முறை விவரங்கள் இவற்ருல் மிக அதிகமாகச் சுமை யேற்றப்பட்டிருந்தன. வேதியியலில் தொடக்கநிலைகளின் பொதுத் திட்டம் செயலாய்வு செய்தலுக்கும் உற்று அறிவியல் பயிற்றலில் சில புதிய போக்குகள் நோக்கலுக்குமுரிய அழுத்தத்துடன் தொடராக வுள்ள நுகர்ச்சி வழி ஆராய்வுகளாகப் (Empirical investigations) lur fá s issu Apsis Gsusir@tċ என்று குறிப்பாகத் தெரிவிக்கப்பெற்றுள்ளது. அதன் பிறகு உறுதிப்படுத்தப்பெற்ற மெய்ம் மைகளின் அடிப்படையில் ஆழ்ந்தாராய்தல் எழும்; எளிய கொள்கைகளைக் கண்டறிவதற்கு வாய்ப்புக்கள் நல்கப்பெறும். அடுத்து, இவை புதிய கொள்கைகளிலும் புதிய மெய்ம்மைகளைக் கண்டறிவதிலும் கொண்டு செலுத்தும். இரண் டாவது நிலையில் மாளுக்கர் அறிவியல் விதி களின் இ ய ல் ைப யு ம், மெய்ம்மைகட்கும் கொள்கைகட்கும் இடையேயுள்ள இடைத் தொடர்பினேயும், சடப்பொருளுக்கும் மின்சாரத் திற்கும் இடையேயுள்ள நெருங்கிய உறவினை யும் சுவைத்து மகிழக் கற்றுக்கொள்ள வேண் டும். சடப்பொருள் பங்குபெறும் எதிர்வினைகளை ஆராயும்பொழுது அணுக்களின் துகள் அமைப் பினைப் பாவன செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும், பொது வேதியியல் வினை களைப் பாதிக்கக்கூடிய கூறுகளையும் பற்றிய சில எண்ணங்களும் உருவாக்கப்பெறுதல் வேண் டும். முதல் இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப் பெறும் குற்றமற்ற பயிற்றலின் அடிப்படையில் தான் வேதியியலின் முக்கியமான அடிப்படை யையும், பொருள்களின் வகைகளையும், மாற்றங் களையும், மூலக் கூறுகள், அயனிகள் ஆகிய துறைச்சொற்களில் அவற்றின் முழு விளக்கத் தையும் இப்பொழுது கலந்தாராய்வதற்குச் சாத்தியப்படுதல் வேண்டும். உயிரியல் பயிற்றலை மீள்நோக்கிய பிறகு அக்குழு இந்தக் கூறு ஒரு தனிப்பட்ட அறி வியல் மட்டிற்குமேயன்றி, எல்லா அறிவியல் தொகுதிக்கும் பொருந்துகின்றது என்றும் வற் புறுத்தியது. மேலும் எல்லா அறிவியல்களையும் இணைப்பதற்கும் அவற்றை உளவியலுடனும், சமூக அறிவியல்களுடனும், வரலாறு, கலைகள் இவற்றுடனும் இணைப்பதற்கு உயிரியல் பயன் படுத்தப்புெறுதல் கூடும் என்பது அனுபவத் தால் அறியப்பெற்றது. இந்த இணைப்பு விளை வினை எய்துவதற்கு முழு உயிரிகளைப்பற்றிய ஆராய்ச்சியின்மீது உயிரியல் மையமாக அடை தல் வேண்டும்; அஃது உடற்கூற்றியல், உட லியல், உயிரணுவியல் அல்லது உயிர்வேதியியல் 317