பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் பயிற்றலில் சில புதிய போக்குகள் இவற்றின் அடிப்படையில் பொது நிலைப் படுத்திக் கற்கப்பெறுதல் கூடாது. தொடக்க இடை நிலைகளில் அறிவியல் முழு வதற்கும் உயிரியல் ஒரு முன்னுரையின் பகுதி யாக இருத்தல்வேண்டும், உயிர்ப்பிராணிகளைப் பற்றிய நேரடியான உற்றுநோக்கல்கள் மேற் கொள்ள ப்பெற்று செய்முறை வேலைக்கு முக் கியத்துவம் தரப்பெறுதல் வேண்டும். ஆராய்ச் சிக்கு எடுத்துக்கொள்ளப்பெறும் உயிரிகள் (Organisms) எளிதாகக் கிட்டக்கூடிய உள்ளுர்ச் செடியினம் உயிரினங்களினின்றும் (Flora and fauma) தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும்; எளிய இயல்பான இருப்பிடத்தைப்பற்றிய ஆராய்ச்சிகள் மிகச் சிறந்த முறையில் பொருத்தமுள்ளவை. ஊட்டமும், சுவாசித்த லும் பெளதிக, வேதியியல், உயிரியல்பற்றிய கூறுகளுடன் கூடிய அகன்ற அறிவியல் தலைப் புக்களின் பகுதிகளாக ஆராயப்பெறுதல் கூடும். இடைநிலையில் தொடக்க நிலையிலிருந்ததைவிட மிக ஆழத்திலும் குறுகிய முன்னணியிலுமாக முன்னேற்றம் அடைதல் வேண்டும். கேம்பிரிட்ஜ் உள்ளூர்த் தேர்வுகளின் ஆட்சிக் குழுவின் (Cambridge Local Examination Syndicate) பாடத் திட்டத்தையொட்டிய பாடத்திட்டம் மேற்கூறிய தேவைகளைச் சமாளிக்கின்றது என் பதும், வேறு பல பாடத்திட்டங்களிலிருப்பதை விட இதுதான் ஆசிரியர்க்குரிய அதிகமான குறிப்புக்களைக் கொண்டுள்ளது எ ன் று ம், மேலும் ஒரு கருத்தேற்றம் அதில் இருந்தது. முன்னேறிய நிலையிலுள்ள பாடத் திட்டம் இதற்கு முன்னருள்ள நிலைகளின் பாடத் திட்டங்களினின்றும் வளர்கின்றது. ஆரும் படிவத்தினர் பாடத்தை மிக அதிகமான முதிர்ச்சியினையுடைய மனத்துடன் அணுகுகின் றனர்.இவர்கட்கு மிக முன்னேற்றமுள்ள செய்ம் முறை வேலை சாத்தியப்படுகின்றது. முன்னுள்ள செயல்முறை விளக்கங்களில் பிராணிகளின் தனிப்பட்ட பிளந்தாய்தல்கள் (Dissections) நடைபெறுதல் கூடும். சில நுண்பெருக்கியின் தயாரிப்புக்களைக் கறைப்படுத்தலும் சட்டத்தி லேற்றலும் (Mounting) கூட மேற்கொள்ள ப் பெறுதல் கூடும். ஆசிரியர்கள் தம்முடைய மனப் பான்மைக்கும் கவர்ச்சிகட்கும் ஏற்பவும், சிறப் பாகக் களச்செயலைப் பொருத்தமட்டிலும் உள்ளூர் நிலைமைகட்கேற்பவும் குறிப்பிட்ட பிரிவுகளை வளர்த்தல்கூடும். ஆதலால், பாலுண்ணிகளையும், பூக்கும் தாவரங்களையும் பற்றிய மே லு ம் உள்ள ஆராய்ச்சி, வாழ்க்கையின் பல்வேறு கோலங்களின் வகைகள், தொடக்க நிலையிலுள்ள சூழ் நிலையியல் (Ecology) வாழ்க்கையின் இயல்பு. தொடர்ச்சி பலவகை' என்ற பொதுத் தலைப் பின்கீழ் பல உயிரியல் பாடத் தலைப்புக்கள் ஆகியவற்றையும் பாடத்திட்டம் உட்கொண் டிருக்கும். இந்த எல்லாத் திட்டக்குழுக்களின் வேலை முற்றுப் பெறவில்லை; அவர்கள் எல்லைக் கோடு களாகக் காட்டியுள்ள குறிப்புக்கள் கழகங்களின் வாயிலாக வெளியிடப்பெற்றுள்ள விரிவான பாடத் திட்டங்களில் உருவங்கொடுக்கப்பெற் றுள்ளன. பிரிட்டனிலுள்ள ஆசிரியர்கட்குக் கொடுக்கப்பெற்றுள்ள அதிக சுதந்திரம் அக் குறிப்புக்கள் பல்வேறு முறைகளில் விளக்கப் பெறுவதற்கு வழி விடுகின்றது. பள்ளிகளில் சோதனைக்காக சிறு திட்டங்கள் செயலில் உள் ளன; அடுத்ந சில ஆண்டுகளில் விரும்பும் குறிக்கோள்கள் எந்த அளவுக்கு மிக நல்ல முறையில் அடையலாம் என்பதுபற்றி அதிகம் அறிந்து கொள்ளப்பெறும். வெளியீடுகள் அறிவியல் ஆசிரியர்க் கழகம், பெண்கள் அறி வியல் ஆசிரியர்க் கழகம் இவர்களின் அடியிற் குறிப்பிடப்பெற்றுள்ள வெளியீடுகள் ஒவ் வொன்றும் 2. வில்லிங் வீதம் The Librarian, Science Masters’ Association, 52 Bateman Street, Cambridge என்ற முகவரியில் கிடைக்கும் : A policy statement on science education. Physics for grammar schools. Chemistry for grammar schools. Biology for grammar schools. எல்லா நாட்டுக்குமுரிய தனிப்பெளதிகம் பயன் முறைப் பெளதிகக் கூட்டுறவுக் குழுவின் செயல் : 1960-இல் பாரீஸ் மாநகரில் எல்லா நாட் டுக்குமுரிய ஒரு பெளதிக மாநாடு நடைபெற் றது. அஃது ஐரோப்பியப் பொருளாதாரக் & L.G. sps of Soulju (Organization for Euro pean Economic Co-operation-OECD), &#éstu நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு, 3.18