4. அண்மையிலுள்ள புலம்: அடியிற் கூறப்பெறு வனவற்றை அறியப் பயன்படலாம் : அரிமானம் (erosion) எங்ங்னம் தொடங்குகின்றது, அஃது எங்கனம் நிகழாமல் தடுக்கப்பெறலாம் என்ப வற்றைக் காண அரிமானத்தைப்பற்றிய சான்று களைக் கண்டறிதல் ; இலையமைப்புக்கள், வேரின் நீளம், அதன் அமைப்புக்கள், இலையின் இழை நயம் (texture) போன்றவற்றைக் கவனித்துத் தாவரங்கள் எவ்வாறு சூழ்நிலைக்கேற்பத் தம்மைச் சரிப்படுத்திக் கொள்ளுகின்றன என்பதை அறிதல் ; பல்வேறு வகைப் பூச்சிகள் எவ்வாறு சூழ்நிலைக்கேற்பத் தம்மைச் சரிப் படுத்திக்கொள்ளுகின்றன, அவை எவ்வாறு பயனுள்ளவையாக அல்லது தீங்கு பயப்பன வாக உள்ளன, எவ்வாறு தீங்கு பயப்பவை அழிக்கப்பெறுகின்றன என்பவற்றை உற்று நோக்கல் : பயிர் செய்யப்பெற்றுள்ள புலமாக இருந்தால், தாவரங்களுக்கு ஈரம் நல்கி எவ்வாறு பராமரிக்கப் பெறுகின்றன என்பதைக் கூர்ந்து நோக்கல் : உயரமான பகுதிகளிலும் தாழ்ந்த பகுதிகளிலும் ஈரத்தின் பல்வேறு அளவுகளைக் கவனித்தல் ; ஈரம் அதிகமாகவுள்ள இடத்தில் பயிர்ப் பச்சைகள் (vegetation) எங்ங்ணம் வேறு படுகின்றன என்பதைக் காணல். நிகழக்கூடிய பயன் : தாவரங்களை உற்று நோக்குவதற்காகப் பார்வையிடுக; சிலவற்றைத் தோண்டி எடுத்துவந்து மேலும் ஆராய்க; அருகிலிருந்து உற்றுநோக்கவும் ஆராயவும் பூச்சி வகைகளைச் சேகரம் செய்க : தகுந்த ஒருவரைக்கொண்டு களையும் பூச்சியும் எவ்வாறு கட்டுப்படுத்தப்பெறுகின்றன என்பதிலுள்ள பிரச்சினைகளை வகுப்பில் ஆராயச் செய்க. 5. கட்டப்பெறும் நிலையிலுள்ள ஒரு புதிய கட்டடம் இவற்றை அறியப் பயன்படலாம் : மின்சார கம்பி இணைப்பு எங்ங்னம் அமைக்கப் பெறுகின்றது என்பதைக் காணல் எங்ங்ணம் மின்சாரம் பாயாமல் கட்டடம் காப்பிடப்பெறு கின்றது என்பதைக் காணல்; என்னென்ன வெவ்வேறு வகைப் பொருள்கள் கட்டடத்தில் பயன்படுகின்றன என்பதைக் காணல்; அடித் தளத்தினின்றும் (basement) தோண்டி எடுத்த மண்ணைத் தோட்டத்து மண்ணுடன் வைத்து ஒப்பிட்டு ஆராய்தல்; எங்ங்னம் சாக்கடை நீர் அகற்றப் பெறுகின்றது என்பதை அறிதல். நிகழக்கூடிய பயன் ஆராய்ச்சிக்காகக் கட்டடப் பொருள்களைச் சிறிது அளவுகளில் திரட்டுக. III D. அறிவியல் உயிற்றுவதற்குரிய மூலவளங்கள் -எ.டு. பல்வேறு காப்பிடு முறைகளைக் காட்டும் மின் கம்பிகள், கல்நாரும் (rock wool) அது போன்ற வேறு வகைக் காப்பிடும் பொருள் களும், மண் வகைகள் முதலியவை ; மின் இணைப்பு செய்வோர், நீர்க் குழல்களை அமைப் போர் (plumbers), இவைபோன்ற செயல்களை நிகழ்த்துவோர் ஆகிய பணிமக்களுடன் கலந்து உரையாடுக; கிணறு வெட்டவேண்டியிருந்தால் அஃது அமைய வேண்டிய இடத்தைக் குறிப்பிடு வதையும் தோண்டப்பெறும் முறையையும் கூர்ந்து நோக்குக ! வீட்டினுள் நீர்க்குழல் அமைத்தல் செய்யப்பெற வேண்டுமாயின், நீர்க் குழல் அமைத்தல், சாக்கடைக்குழி இருக்க வேண்டிய இடத்தைக் குறிப்பிடுதல் ஆகியவற் றைத் தேர்ந்து ஆராய்க வீட்டிற்கு வெளியில் உடல் ஒப்பனை செய்யும் அறை (toiet) அமைக் கப்பெற்றிருந்தால், அது நீர் வசதியை யொட்டி எங்கு அமைக்கப்பெற்றுள்ளது. அக்குறிப்பிட்ட இடம் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்பவற்றைக் கண்டறிதல். 6. மரமறுக்கும் ஆலை யொன்று அடியிற் காண்பவற்றை அறிந்து கொள்ளப் பயன்பட லாம்: வெட்டுவதற்கு மரங்கள் எவ்வாறு தேர்ந் தெடுக்கப்பெறுகின்றன என்பதை அறிதல்; இளம் வெட்டு மரங்கள் எவ்வாறு பாதுகாக்கப் பெறுகின்றன என்பதைக் கண்டறிதல் ; எந்த வகை மரங்கள் மிக உயர்ந்தவை, ஏன் மிக உயர்ந்தவை எனக் கருதப்பெறுகின்றன என்பதை அறிதல் ; பொறிகள் பயன்படுவதை உற்றுநோக்கல் எவ்வாறு கரடுமுரடான மரத் துண்டுகள் ஆக்கப்பெறுகின்றன, அவை பின்னர் எங்ங்னம் செவ்வையானவையாக்கப் பெறுகின்றன என்பதை அறிதல் ஒரு பகுதியி லுள்ள மரங்கள் வெட்டப்பெற்ற பின்ன்ர் அங்குப் பிராணிகளின் வாழ்க்கையிலும், தாவரங் களின் வாழ்க்கையிலும் காணப்பெறும் மாற்றங் களே உற்றுநோக்கல். நிகழக்கூடிய பயன் மரமறுக்கும் ஆலயின் வினைமுறைகளைக் காண்பதற்காக அதனைப் பார்வையிடுக; சில மாதிரி மரத்துண்டுகளைக் கொண்டுவந்து. அவற்றில் காணப்பெறும் வளர்ச்சி வளையங்களைக் (growth rings) காண்க : காடுகளில் மரங்கள் எவ்வாறு வெட்டப்பெறு கின்றன என்பதைக் காண அவற்றின் ஊடே போய் வருக; பல்வேறு பொறிகள் எங்ங்னம் தொழிலாளர்கட்குப் பயன்படுகின்றன என்
17
17