பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்ணம் நடப்பெறுகின்றன, அவற்றின்மீது நீர் (அல்லது மருந்து) எங்ங்ணம் தெளிக்கப்பெறு கின்றது, அவை எங்ங்ணம் கத்தரிக்கப்பெறு கின்றன என்பவற்றை அறிதல் ; தாவரங்களுக் குப் பயன்படும் பூச்சிகட்கும் (தேனிக்கள்), தாவரங்கட்குத் தீங்கு பயக்கும் பூச்சியினங்கட்கும் (செதில்கள் (scales), ஏஃபிட்கள் (aphids)), தாவரங்கட்கும் ஏனைய பூச்சியினங்கட்கும் உள்ள உறவுமுறையினைக் காணல்; உணவினைத் தருவ தற்காக மனிதன் தாவரங்களைப் பயன்படுத்தும் எடுத்துக் காட்டினைக் காணல் : தாவர வளர்ச்சி யில் திடீரென ஏற்படும் வெப்ப மாற்றங்கள் அல் லது வேறு கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கல். நிகழக்கூடிய பயன்: ஆண்டில் பல்வேறு காலங்களில் மரங்களை உற்றுநோக்குவதற்காகப் பழத்தோட்டத்தினைப் பார்வையிடுக; ஒரு சில பூக்களைக் குறிப்பிட்டு, காலம் செல்லச் செல்ல அவற்றில் என்ன நிகழ்கின்றன என்பதை உற்றுநோக்குக: சில பூச்சிகளையும், அப்பூச்சி களால் சிதைக்கப்பெற்ற பழங்களேயும் திரட்டி அவற்றை ஆராய்க. 12. ஒரு சிறு ஒடை அல்லது குளம் இவற்றை அறியப் பயன்படலாம் : பல்வேறு வகைத் தாவரங்களை உற்று நோக்கி தண்டுகள், வேர்கள், இலைகள், பூக்கள், பழங்கள் இவை சூழ் நிலை ஈரமாக இருப்பதற்கு எங்ஙனம் சரிப் படுத்திக் கொள்ளுகின்றன என்பதை அறிதல் ; பிராணிகள் நீரிலும் அல்லது நீரின் அருகிலும் தம் வாழ்க்கையை எங்ங்னம் சரிப்படுத்திக் கொள்ளுகின்றன என்பதையும் இதனை நிலத் தில் வாழும் பிராணிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு வேறுபாடுகளைக் கண்டும் அறிந்து கொள்ளல்; இந்தப் பிராணிகளும் தாவரங்களும் பருவங்கள் மாறுவதற்கேற்ப எங்ங்னம் மாறு கின்றன என்பதை உற்றுநோக்கல்; பிராணி களின் வாழ்க்கையில் உணவுண்ணும் பழக்கங் களையும் வீடு அமைக்கும் பழக்கங்களையும் உற்றுநோக்கல். - - நிகழக்கூடிய பயன்: மேலே குறிப்பிடப்பெற்ற அறிவியல் செயற்படும் நிகழ்ச்சிகளை உற்று நோக்குவதற்காக அந்நிலப் பகுதியைப் பார்வை யிடுக; மேலும், ஆராய்வதற்குத் தாவரங்கள், பிராணிகள் இவற்றின் மாதிரிப் பொருள்களைத் 13. சாலை யோரம் இவற்றை அறியப் பயன் படலாம் :- பிராணிகளின் பட்டிகளையும். அவை திறமையாகக் D. அறிவியல் பயிற்றுவதற்குரிய மூலவளங்கள் உணவு கொணரும் முறைகளையும் அவை குட்டி களைக் சுவனிப்பதையும் உற்றுநோக்கல் : பல்வேறு தாவரங்களின் வாழ்க்கையைக் கவ னித்து அவை விதை பரவும் முறைகள், வறட்சிக் காலங்களிலும் அதிக ஈரமுள்ள காலங் களிலும் எங்ங்னம் சூழ்நிலைக்கேற்பத் தம்மைச் சரிப்படுத்திக் கொள்ளுகின்றன என்பவற்றை உற்றுநோக்கல் : தாவரங்களுக்கும் பிராணி கட்கும் (எ.டு. தாவரங்களும் பூச்சிகளும்) உள்ள உறவு முறைகளை ஆராய்தல் , அரித்தலுக்குரிய எடுத்துக்காட்டுக்களையும் அதனை நீக்கும் வழி வகைகளையும் ஆராய்தல். சாலை ஒரு மலையின் குறுக்கே செல்லுவதாயின், மாளுக்கர்கள் மேல் மண்ணையும் அடி மண்ணையும் உற்று நோக்க லாம் ; மேல் மண்ணின் ஆழத்தைக் கண்டு அது வெள்ளத்தில் கரைந்து போகாதிருக்கவேண்டிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். நிகழக்கூடிய பயன்: மேற்குறிப்பிட்ட எடுத் துக்காட்டுக்களை உற்றுநோக்குவதற்காக அப் பகுதியைப் பார்வையிடுக; மேல் மண்ணிற்கும் கீழ் மண்ணிற்கும் மாதிரிகளைத் திரட்டி, அவை ஒவ்வொன்றிலும் தாவரங்களை வளரச் செய்து, முடிவுகளைக் காண்க; விதைகள் பரவும் மாதிரிப் பொருள்களைத் திரட்டுக. 14. சமூகத்திலுள்ள மக்கள் : சமூகத்திலுள்ள சிலர் துணை செய்யக் கூடிய நிலையிலுள்ளனர். எடுத்துக்காட்டாக, பல பெற்றேர்கள் மிகப் பல இடங்கட்குப் பயணம் போய் வந்துள்ளனர் ; சிலர் பிராணிப் பாதுகாப்பில் வல்லுநர்களாக உள்ளனர்; சிலர் வீடுகளை அமைப்பதில் வல்லு நர்களாக இருக்கின்றனர்; இன்னும் சிலர் வேட்டையாடுதல், கண்ணி வைத்தல், மீன் பிடித்தல் இந்த அனுபவங்களில் துணைசெய்தல் கூடும். கிட்டத்தட்ட ஒவ்வொரு சமூகத்திலும் மின் துறைஞன் (electrician), பொறிக் கம்மியன் (mechanic) ஆகியோர் இருப்பர். சாதாரண மாகப் பள்ளிச் சிறுவர்களின் பிரச்சினைகளில் துணைசெய்யுமாறு கேட்கப்பெறுவதில் சிலர் விருப்பமுள்ளவர்களாக இருப்பர்; இங்ங்னம் சமூகத்திலுள்ள வயது வந்தவர்களைப் பள்ளியில் துணையாகப் பெறுவது எல்லோருக்கும் பயன் தரத்தக்க பழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்த மூலவளங்களைப் பயன்படுத்துதல்: o இந்த மூலவளங்களின் மதிப்பு அவற்றைத் கையாளுவதைப் பெ று த் துள்ளது. ஒவ்வொன்றும் ஒரு திட்டமான

19

19