பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆதிவியல் பயிற்றலுக்குரிய வாய்ப்புக் திறங்கள் நோக்கம் அல்லது நோக்கங்கட்குப் பயன்படுத் தப்பெறுதல் வேண்டும்; அஃதாவது, ஒரு புதிருக்குத் தீர்வு காணத் துணைசெய்தல், ஒர் அறிவியல் விதியினை மிகத் தெளிவாக்குதல், அறிவியலின் பயனையும் வியப்பினையும் புரிந்து கொள்வதை அதிகப்படுத்துதல் போன்றவை யாகும் இவை. ஒரு சிறுதொலைப் பயணத்திற்கு ஆயத்தம் செய்வதில் ஆசிரியரும் மாளுக்கர் களும் தம் மனத்தில் திட்டமாக வரையறுக்கப் பெற்ற பிரச்சினை அல்லது பிரச்சினைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆசிரியரும் சில சமயம் ஒரு சிறு மாளுக்கர் குழுவும் வகுப்பு பார்வையிடவேண்டிய இடத்திற்கு முன்ன தாகவே சென்று பயணத்தின் பொருத்தத்தை யும் சென்றடையும் வழியையும் தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும். மானுக்கர்கள் சமூகத்திலுள்ள யாராவது ஒருவரிடமிருந்து சில தகவல்களை அடைவதற் குத் திட்டமிடுங்கால், அவர்கள் அந்தப் பயணத் தின் நோக்கத்தினைப் புரிந்து கொண்டனரா என்பதையும், மாளுக்கர்கள் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களைக் கொண்டுள்ளனரா என்ப தையும் உறுதி செய்து கொள்ளல் வேண்டும். பயணத்தைத் தொடர்ந்து நடைபெறவேண் டிய கலத்தாய்தலில் (discussion) இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதைப்பற்றிக் கவன மாகத் திட்டமிடுதல் வேண்டும். புதிர் தீர்த்தலில் பொருத்தமான எடுகோள்கள் (data) பயன்படுத் தப்பெறுதல் வேண்டும்; பின்னல் மாளுக்கர்கள் தத்தம் பதிவேடுகளிலிருந்து இந்த எடுகோள் களைப் பயன்படுத்தக் கூடும் என்றிருந்தால், மாளுக்கர்கள் தம்முடைய பதிவேடுகளில் தாம் தாம் கண்டவற்றைப் பதிந்து கொள்ளுதல் வேண்டும், பெரும்பாலான பள்ளிகள் இன்னும் சமூகத்தி லிருந்து கிடைக்கக்கூடிய மூலவளங்களை முற்றிலும் பயன்படுத்தாதுள்ளன. அறிவியல் சூழ்நிலையைப்பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தபோதிலும், நாம் நம்மைச் சுற்றியுள்ள பல சாதாரண பொருள் களைப் புறக்கணிக்கக்கூடிய நிலை யி லே யே உள்ளோம். நம்முடைய நாட்டுப்புறப் பள்ளி யில் மிக விலையுயர்ந்த தளவாடங்கள் இருக்கும் பொழுதும் அறிவியல் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கப் பெறுகின்றது என்று சொல்லுவதற் கில்லை. ஆசிரியர்களும் மாளுக்கர்களும் தாம் ஓர் அறிவியல் உலகில் வாழ்கின்றதாகவும், தம்முடைய ஆராய்ச்சியிலுள்ள பொருள்கள் யாவும் தம் அருகிலேயே உள்ளன என்றும் உணரும்பொழுதுதான் அறிவியல் மிக நல்ல முறையில் கற்பிக்கப்பெறுகின்றது. அறிவியல் பயிற்றலுக்குரிய வாய்ப்புத் திறங்கள் நகர்ப்புறங்களிலோ அல்லது நாட்டுப்புறங் களிலோ உள்ள சில பள்ளிகள்தாம் அறிவியல் பயிற்றலுக்கென்று ஒரு தனியான அறையைப் பெறும் தகுதியிலுள்ளன. கல்வித் திட்டத்தில் தொடக்கப் பொதுஅறிவியல் ஒரு பகுதியாக இருக்கும்பொழுது அது நடைமுறையில் ஏனைய பாடங்கள் கற்பிக்கப்பெறவேண்டிய சாதாரண ஒரு வகுப்பறையிலேயே கற்பிக்கப் பெறுகின்றது. எனினும், அறிவியல் பெரும் பான்மையான பிற பாடங்களினின்றும் வேறு பட்டது; சிறுவர்கள் அறிவியலை நேரான அனுப வத்தால் பெருதவரை அவர்கள் அதனைப் பயனுள்ள முறையில் கற்றுக்கொள்ள முடிகின்ற தில்லை. அறிவியலைப்பற்றிக் கேட்பதோ அல்லது அதனைப்பற்றிப்படிப்பதோ மட்டிலும் போதாது. அறிவியல் கற்றல் சிறுவர்களிடம் நிலையாக அமையவேண்டுமாயின், அவர்கள் உற்று நோக்கலையும் சோதனை செய்தலையும் மேற் கொள்ளவேண்டும். 20 எனவே, சிறுவர்கள் தம்முடைய பொது வகுப்பறையில் உற்றுநோக்கலையும் சோதனை யையும் மேற்கொள்ள வேண்டுமாயின், முதலில் தீர்வு காணவேண்டிய சில பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பகுதியில் அறிவியல் பயிற்ற லைக் கவர்ச்சிகரமாகச் செய்ய வல்லனவாகவும் தம் வகுப்பறையில் அமைக்கக்கூடியனவாகவு முள்ள சில வாய்ப்புத்திறங்களைப்பற்றிய சில கருத்தேற்றங்கள் தரப்பெறுகின்றன; சுறு சுறுப்பாகவுள்ள அறிவியல் ஆசிரியர் இவற்றைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வாராக. வகுப்பறையில் ஒர் அறிவியல் முலயை அமைத்தல் வகுப்பறையிலுள்ள ஒரு மூலையைத் தனியாக ஒதுக்கி அதனை அறிவியல் மூலே (science corner) என்று வழங்குக. இயன்ருல், சோதனை

செய்தலுக்கும் பொருள்களைக் காட்சியாக அமைப்பதற்கும் ஒன்று அல்லது இரண்டு மேசைகளைக் கைவசப்படுத்துக. பள்ளிக்குப்

20