பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுப்பாக இருப்பவர் மேசைக்கு அடியில் இந்தப் புத்தகத்தின் பின்னியல்களில் கூறப் பெறும் பொருள்கள். தருவித்த சரக்குகள், தளவாடங்கள் இவற்றைச் சேமிக்குமிடமாக்கு வதற்கு "நிலைப் பெட்டிகளை (shelves) அமைப் பதில் துணை செய்யக்கூடும். அறிவியல் மூலை யில் காட்சியாக இருக்கக்கூடிய பொருள்களைக் கொணருமாறு மாளுக்கர்களே உற்சாகப்படுத் துக. எந்த மாணுக்கன் அந்த வாரத்தின் அறிவியல் உருப்படியாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் பொருளைக் கொணர்கின்ருன் என்பதைக் காண சில ஆசிரியர்கள் ஒருவகைச் சிறு போட் டியையும் ஏற்படுத்துகின்றனர். அறிவியல் மூலை தொடர்ந்து செயல் நடை பெறக் கூடியதாகவும் மாற்றம் காணக்கூடிய தாகவும் இருத்தல் வேண்டும். சிறுவர்கள் கொண்டுவரும் பொருள்கள் நீண்டகாலம் மேசையின் மீதிருக்க அனுமதித்தலாகாது. அப்படியிருப்பின் அவற்றின் மீதுள்ள கவர்ச்சி இழக்கப் பெறும். நீர்ப் பொருட் காட்சிச்சாலைகளே (Aquaria) ஏற்பாடு செய்தல் : நீர்ப் பொருட் காட்சிச் சாலைகள் சதா கவர்ச்சி தரும் மூலமாக அமைகின்றன ; அவை பல முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிகளை உற்று நோக்கும் இடமாகின்றன. இத்தகைய நீர்ப் பொருட் காட்சிச் சாலைகளை அமைப்பதுபற்றிய குறிப்புக்களையும் அவற்றைக் கவனிப்பதுபற்றிய விவரங்களையும் இயல் 4 இன் இறுதிப்பகுதியில் காண்க, பிராணிகளுக்குக் கூடுகள் : - வகுப்பறையில், உற்று நோக்கலுக்காகப் பல் வேறு வகைப் பிராணிகள் வைக்கப் பெறலாம். சில பிராணிகள் ஏனையவற்றைவிடக் கூண்டில் அடைபடுவதற்குப் பொருத்த முறுகின்றன. சிறுவர்கள் தம்முடைய செல்லப் பிராணிகளை உற்றுநோக்கலுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் சிறு நேரங்கட்கு வகுப்பிற்குக் கொணருமாறு உற்சாகப்படுத்தப் பெறலாம். பிராணிகளுக் காகக் கூடுகளை அமைப்பதுபற்றிய கருத்தேற் றங்களை இயல் 4 இன் தொடக்கப் பகுதியில் リT55cmTa)吊「試), வானிலை நிலையங்களே அமைத்தல் : r - . . » இயல் 8 இல் எளிய வானிலைக் கருவிகள் விவரிக்கப் பெறுகின்றன. எங்கும் கிடைக்கக் E. அறிவியல் கயிற்றலுக்குரிய வாய்ப்புத் திறங்கள் கூடிய பொருள்களைக்கொண்டே இவை அமைக் கப்பெறுதல் கூடும். அன்ருட வானிலை மாற்றங் களே உற்றுநோக்கி அறிதல் கவர்ச்சியளிக்கும் மூலமாகும் ; அது பயன் படக்கூடிய அறிவியல் பாடங்கட்கு அடிப்படையாகவும் அமைதல் கூடும். - அறிவியல் அறிவிப்புப் பலகை : மாளுக்கர்களுக்குச் சரியான முறையில் உற் சாகம் அளிக்கப்பெறின், அவர்கள் செய்தித் தாள்கள் பருவ இதழ்கள் ஆகியவற்றினின்றும் வெட்டி யெடுத்த கவர்ச்சி யளிக்கக்கூடிய பொருள்களைத் தொடர்ந்து பள்ளிக்குக் கொண்டு வருவர். இத்தகைய பொருள்களையும், அறிவியல் வகுப்புக்களில் ஆயத்தம் செய்யப் பெற்ற ஒவியங்களையும் பிறவற்றையும் காட்சியாக அமைப்பதற்கு அறிவியல் அறிவிப்புப் பலகை சரியான இடத்தை நல்குகின்றது. அறிவியல் மூலையில் வைக்கப்பெற்றுள்ள மேசைக்குச் சற்று மேலுள்ள இடமே அறிவியல் அறிவிப்புப் பலகை அமைத்தற்குப் பொருத்தமான இட மாகும். மிருதுவான மரத்தைக் கொண்டோ அல்லது சிமெண்டுச் சாந்தினைக் கொண்டோ அறிவிப்புப் பலகை அமைக்கப் பெறலாம். வளரும் பொருள்கள் : . அதிகமாக ஒளி இருக்கக்கூடிய சாளர ஒரங் களில் வைக்கப்பெறக் கூடிய சிறிய பூச்சட்டிகள் வளரும் விதைகட்கும் சிறிய தாவரங்கட்கும் தேவையான இடத்தைத் தரும். வேறுசில அனுபவங்கட்கு இன்னும் அதிகமான இடம் தேவைப்பட்டால், ஆழமற்ற மரப்பெட்டிகளைக் கையாளலாம்; அல்லது பழைய கிச்சிலிப் பழக் கூடைகளைக்கொண்டு இதனை அமைத்துக் கொள்ளலாம்: - அரும் பொருட்காட்சி நிலைப்பெட்டி : குழந்தைகளிடம் கவர்ச்சி பிறந்துவிட்டால், அவர்கள் தம் மனம் நிறைவடையாத அளவுக்குப் பொருள்களைத் திரட்டுவோராகி விடுவர். அவர் கள் திரட்டும் பொருள்களில் சில பள்ளிக்கு வரு வதற்கு வழிகண்டு விடும். அத்தகைய செயல் கட்கு உற்சாகம் அளிக்கப்பெறுதல் வேண்டும். அரும்பொருட் காட்சி நிலைப்பெட்டியை அமைத் தில் இதற்கு ஒரு வழியாகும்; இப்பெட்டியில் மானுக்கர் கொணரும் பொருள்களையும், தனிப் பட்ட அறிவியல்வகைப் பொருள்களையும். வைத்துக் காட்சியாக அமைக்கலாம்.

21.

21