உள்ளது. சுருள் வில்லின் அடுத்த முனையை ஒரு கம்பி நாதாங்கியால் (wire staple) குழலி னுள் வழுக்கிச் செல்லக்கூடிய மரக்கோலுடன் பொருத்துக, மரக்கோலைக் குழலின் உச்சியில் பொருத்தி அதனுள் தராசினைத் தொங்கவிடும் பொருட்டு ஒரு கொக்கியை நுழைத்திடுக. மரத் தாலான முழுகுதண்டில் மற்ருெரு கொக்கியைத் திருகிவிடுக; முழுகுதண்டில் இனி அளவுக் கோடுகள் இடப்பெறலாம். 3. பளுவான சரக்குகளுக்காண வில் தராசு : ஒரு நாற்காலியின் சுருள் வில் அல்லது ஒரு தானியங்கி (automobile) மெத்தையின் சுருள் வில்லினைச் சம தளமாகவுள்ள ஒரு மரத் துண்டினுடன் பொருத்துக ; இத் துண்டு இக் கருவியின் அடித்தளமாக அமை யும். ஒரு பெரிய தகர மூடி அல்லது தட் டினைத் தராசுத் தட்டாகப் பயன்படுத்தலாம். இதனைச் சுருள் வில்லின் மேற் பகுதியில் பொருத் துக. இதற்குப் பற்ருசினை (solder)ப் பயன் படுத்த இயலாவிடில், தராசுத் தட்டில் பொருத்த மான இடங்களில் இரட்டைத் துளைகளிட்டு அவற்றின் வழியாக மெல்லிய கம்பியைச் செரு கித் தட்டினை சுருள் வில்லுடன் அசையாமல் இறுகப்பிணைத்து விடலாம். 四 அடித் தளத்துடன் இரண்டு செங்குத்தான மரச் சட்டங்களை இணைத்திடுக. இவை தராசுத் தட்டிற்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. தராசுத் தட்டின்மீது , 1, 2 முதலிய கிலோ கிராம் அளவுகள் சரக்குகள் வைக்கப்பெறுங்கால் இந்த வழிகாட்டிச் சட்டங்களின்மீது அளவுக் கோடுகளிடுக. நீரால் நிரப்பப்பெற்ற இன் தேறல் (wine) போத்தல்கள் பொருத்தமான லிட்டர் முதலிய அளவுகளாகின்றன; ஆயின் அவை கிலோகிராமில் சமபல எடைகளையும் கொண்டுள்ளன. A. நிறுக்கும் அமைப்புக்கள் 4. துலாக் கோல்கள் : - சிறிய காரீய அல்லது இரும்பு நீர்க் குழல் துண்டுகளைச் சரி-எடைகளாகவும், கம்பிக் கண்ணிகளைச் சுழல்-அச்சாகவும் பயன்படுத்தி உரோமன் அல்லது டேனிஷ் துலாக் கோல்களே அப்போதைய ஏற்பாடாகச் செய்தல் கூடும். கோல் மரத்தாலானதாகவோ அல்லது உலோ கத்தாலானதாகவோ இருக்கலாம்; உலோகத் தாலானதாக இருந்தால், கோலின் அடியில் அரத்தால் அராவி பல்வேறு எடைகளைச் சமன் செய்யும் புள்ளிகளாக உணர்த்தும் கீற்றுக் களை உண்டாக்கலாம். - 5. ஆய்வகத் துலாக் கோல் : 500 கிராம்வரை நிறுப்பதற்கேற்ற துலாக் கோலை அமைப்பதற்கு ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு மரச்சட்டத்தைப் பயன்படுத்துக இஃது ஒரு முனையிலிருந்து 12 செ. மீ. தூரத்திலும் மேல் ஒரத்திலிருந்து 3 மி. மீ. கீழும் துளையிடப்பெற்று அத்துளை வழியாகச் செல்லும் வலுவான தைய லூசியொன்றின்மீது சமனுக்கப்பெற்றுள்ளது. காரீயத்தாலான வட்டத்தகடு அல்லது பொருத்த மான அளவு பளுவாகவுள்ள ஏதாவது ஒரு பொருள் சமமாக்கும் எடையாகப் பயன்படுத்தப் பெறலாம் ; காரீயம் பயன்படுத்தப்பெற்ருல், ஒரு தகர மூடியில் அஃது ஒரு வட்டத் தகடாக வார்க்கப் பெறலாம். - செருப்பு மெருகிடு பொருள் வைக்கப்பெறும் தகர மூடியைத் தாங்கிக் கொண்டுள்ள கம் பியாலான 951&suit (wire stirrup) Gursirpi தராசுத் தட்டாகப் பயன்படுகின்றது; . لذاتی تک சுழலச்சுவிடமிருந்து 6 செ. மீ. தொலைவில் தொங்கவிடப் பெறலாம், - -
23
23