பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டின் ஒரு . பகுதியோ வெட்டி யெறியப் பெறலாம். - சுழலும் அச்சு ஓர் உலோக அங்கவடியால் தாங்கப்பெறுகின்றது; வெளிப்புறத்திலுள்ள ஓர் அங்கவடி, துலைத்தண்டு பக்கவாட்டில் நழு வாமலிருக்குமாறு தடுப்பதற்குத் துணைசெய்கின் றது. துலைத் தண்டின் மேற்புறத்தில் எடை யேறி (rider) ஒன்றுள்ளது ; தரப்படுத்திய அளவுக்கோடுகள் கீற்றுக்களாக இடப்பெறு கின்றன. ஒரு கூம்பு வடிவமாக்கிய வடிகட்டுந் தாள் அல்லது ஏதாவது ஒரு தாளினைப் பயன் படுத்திப் பொடி நிலையிலுள்ள திண் பொருள் கள் இத்தராசினைக் கொண்டு நிறுக்கப்பெறலாம். 8. சோடா வைக்கோற்புல் தராசு: குளிர்ந்த பானங்களைப் பருகப் பயன்படும் வைக்கோற் புல்லில் பொருந்தக்கூடிய ஒரு சிறிய போல்ட்டு ஆணியை (bolt) எடுத்துக் கொள்க : அதனைப் புல்லின் ஒரு புறத்தில் செருகிச் சில சுற்றுக்கள் உட்போகுமாறு திருகி விடுக. இந்த அமைப்பு சமமாக நிற்கும் புள் ளியை உத்தேசமாகத் தீர்மானித்து அந்த இடத் தில் வைக்கோற்புல்லை ஒரு தையலூசியால் துளையிடுக; இந்த ஊசி சுழலும் அச்சாக இயங்குகின்றது. அமைப்பு ஆடாமல் நிலைத்து நிற்பதற்காக வைக்கோற் புல்லின் குறுக்கு விட்டத்திற்குச் சற்று மேலாக இத் துளை இடப் பெறுதல் வேண்டும். . வைக்கோற்புல்லின் அடுத்த முனையை ஒரு சிறு கரண்டிபோலிருக்குமாறு வெட்டி அமைத் திடுக. ஊசி உரிய இடத்திலிருக்கும்பொழுது jү A. நிறுக்கும் பொறி அமைப்புக்கள் அதனை ஒரு மரக்கட்ட்ைத் துண்டிலுைம் இரப்பர்ப் பட்டையாலும் இணையாக வைக்கப் பெற்றுள்ள இரண்டு துண் பெருக்கி மூடித் துண்டுத் தாள்கள் அல்லது இரண்டு சவர வாள் அலகுகளின் (razor blades) மீது அமைத்திடுக. வைக்கோற் புல் படுக்கை மட்டத்திற்குக் கிட்டத் தட்ட 30° கோணத்தில் சம நிலையில் இருக்கும் வரையில் போல்ட்டு ஆணியைச் சரிப்படுத்துக. வைக்கோற் புல்லின் கரண்டிபோன்ற முனையின் பின்புறத்திலிருக்குமாறு ஆடை இடுக்கியையோ (clothes peg) அல்லது மற்ருெரு மரக்கட்டை யையும் ஒரு பெருவிரல் ஆணியையும் பயன் படுத்தியோ காகித அட்டையை செங்குத்தாக இருக்குமாறு அமைத்திடுக; இஃது அளவு கோலாகப் பயன்படும். - ஒரு மயிர் அல்லது சிறிய மெல்லிய துண்டுத் தாளைக் கரண்டி முனையிலிருந்து தொங்கவிட்டு ஒதுக்கத்தைக் காண்க. அளவுகளைச் சரியாகக் குறிப்பிட வேண்டுமானுல் அளவு கோலில் அள வுக் கோடுகள் இடப்பெறுதல் வேண்டும். சிறு சுருட்டுச் (cigarette) சிப்பத்திலுள்ள மெல்லிய அலுமினியத் தகட்டுச் சுருள் சிறிய எடைகள் செய்வதற்கேற்றது. சாதாரண அளவுள்ள தகட்டின் 2 சதுர செ. மீ. பரப்புள்ள துண்டு 5 மில்லி கிராம் எடையுள்ளது. 1 மில்லி கிராம், 2 மில்லி கிராம் முதலிய அளவுகளிருப்பதற் கேற்றவாறு துண்டுகளே வெட்டி அவற்றை இடுக்கிப்போல் வளைத் து ச் செய்யப்பெற்ற தாமிரக் கம்பியைப் பயன்படுத்திக் கரண்டிப் பகுதியில் வைத்திடுக. துலைத் தண்டு அமைதி நிலையிலிருக்கும் இடங்களைக் காகித அட்டையில் குறிகளேயிட்டுப் பதிவு செய்க. போல்ட்டு ஆணி யின் நிலையைச் சரி ப் படுத் தி த் தராசின் கூருணர்ச்சி மாறுதலடையச் செய்யப் பெறலாம். 9. Gigsŵnsiwl fisïr sgirs. (Zehnder's balance) : செய்து காட்டும் சோதனைகளில் மிகவும் பயன் படத்தக்க சூழ்ச்சித்திறன் மிகுந்த இந்தத் தராசு குண்டுசிகள், சவர வாள் அலகு, தக்கை, பின்ன லூசி இவற்றைப் பயன்படுத்தி ஒரு சில் நிமிடங் களில் அமைக்கப்பெறலாம். எவ்வளவுக் கெவ்வளவு வேற்றுமையமாக (eccentric) இருக்கமுடியுமோ அவ்வளவுக்கவ் வளவு வேற்றுமையமாக இருக்குமாறு முதலில் பின்னலுரிசி தக்கையினூடே அதன் விட்டத் திற்கு இணையாக இருக்குமாறு செலுத்தப்பெறு. கின்றது.

25

25