பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைப் பொறுத்தது. மிகப் பொருத்தமான நீர்த் தாரைகளின் பருமன்கள் முயன்று தவறிக் கற்றல் மூலம் கண்டறியப்பெறும் ; ஆனல் முதல் தாரைக்கு 1 மி. மீட்டர் குறுக்கள வினை யும், இரண்டாம் தாரைக்கு 2 மி. மீ. குறுக்கள வினையும் கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படு கின்றன. * 12. வேதியியலில் தனியாள் வேலைக்குரிய துணைக் கருவி : . தொடக்க வேதியியலில் மேற்கொள்ளப்பெறும் பல சோதனைகட்கு முக்குக் குவளைகள், சோத O U

படைத் தளவாடம தேவைபபடுகனறது. கeபு விவரிக்கப்பெற்றுள்ள கருவிகலத் தொகுதியில் (outfit) சாதாரணமாக நடை முறையில் தேவைப்படும் யாவும் அடங்கியுள்ளன. உருளை யான கழுத்தினையுடைய 150 க. செ. மீ. அள வுள்ளப் பைரெக்ஸ் (pyrex) குடுவை ஒரு முகவையாகவோ (beaker), குடுவையாகவோ அல்லது நீராவியை உற்பத்தியாக்கும் கருவி யாகவோ பயன்படுத்தப்பெறலாம். கம்பி வலை யில் சுருட்டப்பெற்றுள்ள ஒரு சாதாரணக் கண் ணுடிக் குழல் எரிதல் குழலாகப் (combustion tube) பயன்படுத்தப் பெறலாம் ; அது சாதாரண வன்கண்ணுடிக் குழலைப்போல் அ டி க் க டி உடைந்து போவதில்லை. - ஒரு மாதிரிக் குழல் ஒரு திருப்திகரமான சிறிய வாய் சாடியாக மாற்றப்பெறக் கூடும். மிகவும் இன்றியமையாததாக இராவிடினும், ஒரு சோதனைக்குழல் அடுக்கு வசதியாக இருக்கும், இங்குக் குறிப்பிடப் பெற்ற சிறு சோதனைக் குழல்களைச் சிறுவர்களின் சிறு விரல்களால் மூடுவதற்கு வசதியாக இருக்கக்கூடிய நற்பய னும் இதல்ை கிடைக்கும். ஒரு மரக்கட்டை அடித்தளத்துடன் கூடிய, ஒரு பெரிய குழல் ஏனைய பலசோதனைகட்குப் பயன்படும் கைப் பிடிப் போத்தலாகப் (stick bottle) பயன்படு கின்றது. ஓடும் நீர் கிடைக்காவிடில், நீருட னுள்ள ஒரு பெரிய தகரக்குவளை (500 க.செ.மீ.) வடிவில் ஒரு பெரிய கண்டென்ஸர் அமைக்கப் பெறுகின்றது. வெளிவரும் குழாயில் நீர் ஒழுகா இனப்பின அமைத்தல்தர்ன் இதில் ஒரு கடின மான செயலாகும். கீழ்நிலை வகுப்பு செய்முறை வேதியியலில் இத்துணைக் கரு வி மிகவும் பயனளிக்கக்கூடியதாக உள்ளது. 13. தீய்ந்த மின்குமிழ்களினின்லும் கொன் . கலன்கள் : દ્ધિ

குடுவைகள், முக்குக் குவளைகள், சோதனைக் குழல்கள் இவைபோன்ற அமைப்புக்க்ளுக்குப் பதிலாகப் பயன்படக்கூடிய கொள்கலன்களை தீய்ந்துபோன மின் விளக்குக் குமிழ்களினின் றும் உண்டாக்கிக் கொள்ளலாம். ஓரளவு முன் னெச்சரிக்கையுடன் கையாண்டால் இவை அதிக மான வெப்பத்தையும் கையாளுதலையும் தாங்கக் கூடியவை. எந்த அளவு மின்குமிழும் பயன் படுத்தப் பெறலாம். பல்வேறு அளவுக் குமிழ்கள் நன்கு பயனளிக்கக் கூடியவை. -

31