பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஒர் அளவு சாடி அல்லது அளவிடும் கண்ணுடி: பல்வேறு பருமன்களில் நேர்ப் பக்கங்களை யுடைய பல கண்ணுடிச் சாடிகளைத் தேர்ந் தெடுத்திடுக. அளவுக் கோடுகளிட்ட சாடிகளை ஆக்குவதற்கு ஆலிவ் போத்தல்கள் மிகவும் பயன்படுகின்றன. போத்தலின் மேற் புறத்தில் கிட்டத்தட்ட 1 செ. மீ. கீழிருக்குமாறு கிட்டத் தட்ட 1 செ.மீ. அகலமுள்ள தாளினைப் போத்த லின் நெடுக ஒட்டுக. அடுத்தபடியாக, கிட்டத் தட்ட அந்தப் போத்தலைப்போலவே கொள் ளளவுள்ள ஒரு வணிக அளவு சாடியினைப் பெறுக ; அதனைக்கொண்டு போத்தலில் ஒட்டப் பெற்றுள்ள தாளின் உச்சி வரையிலும் நீரினை அளந்து ஊற்றி நிரப்புக. தாளின் குறுக்கே ஒரு கோடிட்டு அதன் கீழ் எத்தனைக் கன செ.மீ. நீர் ஊற்றப் பெற்றதோ அந்த எண்ணைக் குறித் திடுக. எடுத்துக்காட்டாக, இது 50 க. செ. மீ. அல்லது 100 க. செ. மீ. என்று இருக்கட்டும். அடுத்தபடியாக, அந்தப் போத்தல் ஒருதன் மைத்தான விட்டமுடையதாக இருந்தால், இந் தக் கோட்டிற்கும் சாடியின் அடிமட்டத்திற்கும் இடையிலுள்ள தூரத்தை சில வசதியான பகுதி களாகப் பிரித்திடுக. தாளின் குறுக்கே கோடுக ளிட்டு ஒவ்வொரு பிரிவையும் குறிப்பிடுக. எடுத் துக்காட்டாக, 50 க. செ. மீ. நீர் பயன்படுத்தப் பெற்றதாகக் கொள்வோம்; இப்பொழுது நீங்கள் போத்தலின் நீளத்தை ஐந்து சமப் பகுதிகளா கப் பிரித்திடலாம்; அடி மட்டத்திலிருந்து முதல் கோடு 10 க. செ. மீ., அடுத்த கோடு 20 க.செ.மீ. என்று இங்ங்னம் குறிகளிடப் பெறலாம். அடுத்த படியாக, ஒவ்வொரு பெரிய பிரிவும் சிறு பிரிவுக ளாகப் பிரிக்கப்பெற்றுத் தாளின்மீது கோடுகள் வரையப்பெறலாம். இவ்வாறு அமைத்திட்ட அளவு சாடியில் ஒரு குறிப்பிட்ட அளவு நீரினை ஊற்றி அந்த நீரினைத் திரும்பவும் தரப்படுத்தி யுள்ள கலத்தில் ஊற்றிச் சரிபார்க்கலாம். இங்கனம் பல்வேறு அளவுகட்கும் நீரினை ஊற்றி அந்த அளவுகள் யாவும் சரியானவைதாமா என்பதைச் சோதித்திடுதல் வேண்டும். கோடு களில் சிலவற்றைச் சிறிதளவு மேலும் கீழுமாகத் தள்ளிப்போடவேண்டியும் நேரிடலாம். இச் சோதனை முற்றுப் பெற்றதும், அளவுகோலைத் தாளில் நிரந்தரமாக அமைத்து (இந்தியா மையினக்கொண்டு அமைத்திடலாம்) அதனை மெல்லிய உருகிய பாரஃபின் மெழுகு, அரக்கு, காகித மினுக்கெண்ணெய் (warnish) அல்லது பிளாஸ்டிக் காரை ஆகியவற்ருல் பூசிவிடலாம். v C. வேறு பயனுள்ள பொருள்கள் 16. ஒரு சோதனைக் குழாய்ப் பிடி : இரும்பு அல்லது பித்தளையாலான ஒர் உறுதியான வில் கம்பியை விளக்கப்படத்தில் காட்டியுள்ள வடிவத்தைப்போல் வளைத்து ஒரு பொருத்தமா சோதனைக்குழாய்ப் செய்யலாம். மேற்சட்டையைத் தொங்கவிடும் கருவியின் கம்பி இதற்கு நன்முறையில் செயற் படும். - பிடியைச் 17. ஆய்வக இடுக்கி : பெட்டியைச் சுற்றிலும் வைக்கப் பயன்படுவ தும் கப்பலில் ஏற்றுவதற்குப் பின்னற்கூடை அமைப்பதற்குப் பயன்படுவதுமான எளிதில் வளையக்கூடிய பட்டை இரும்பினைக் கொண்டு மிகவும் பயன்படக் கூடிய இடுக்கி செய்யப் பெறலாம். w wo இங்குக் காட்டப் பெற்றுள்ள இடுக்கி கிட்டத் தட்ட 12 செ. மீ. நீளமுள்ளது. மேலுள்ள படத்தில் காட்டப்பெற்றுள்ள இடுக்கி இரண்டு இரும்புப் பட்டைகளைப் பற்றுவைத்து ஒட்டியோ அல்லது ஆணியடித்து இறுக்கியோ இணைத்தும் அதன் பிறகு வளைத்தும் பொருத்தமான வடிவத் திற்கு வெட்டியும் அமைக்கப் பெறலாம். கீழுள்ள படத்தில் காட்டப்பெற்றுள்ள இடுக்கி 26 செ.மீ. நீளமுள்ள ஓர் ஒற்றை இரும்புப் பட்டையினின் றும் அமைந்ததாகும். பட்டையின் மையத்தைப் பொருத்தமான குறுக்களவுள்ள ஒர் இரும்புக் கோலினைச் சுற்றி வளைத்து அதன் வட்டமான தலைப்பகுதி செய்யப்பெற்றது. அதன் பிறகு பக்கங்கள் வெட்டப்பெற்று அளவிற்கு உருவாக் கப்பெற்றது. 18. ஓர் உலோக வளையந்தாங்கியும் வளையங்களும்: சமதளமாகவுள்ள ஒரு தி ரைக் கே லை யும் விளக்கு மூடாக்குகளைத் (shades) தாங்குவதற்

33