பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. தண்டுகள்

சட்டியை ஒரு சில நாட்கள் வீட்டுவைத்து விளைவுகளைக் கூர்ந்து கவனித்திடுக.

(ஈ) எஞ்சியுள்ள இளஞ் செடிகளைக்கொண்ட மூன்று சட்டிகள் ஒவ்வொன்றையும் வெவ்வேறு பெட்டிகளில் வைத்திடுக. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு சாளரத்தை வெட்டி ஒவ்வொரு சாளரத்தையும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களுள்ள செல்லோஃபேன் தாளால் மூடுக. செடிகளைக் கொண்ட சட்டிகளையுடைய மூன்று பெட்டிகளையும் நல்ல சூரிய ஒளியில் வைத்திடுக; சாளரம் சூரிய ஒளிக்கு நேராக இருக்கட்டும். தண்டுகளின் வளர்ச்சியில் வெவ்வேறு வண்ண ஒளி ஏதாவது வேறுபாடான விளைவினை உண்டாக்கியதா என்பதை உற்று நோக்குக.

2. தண்டுகள் திரவங்களைக் கொண்டு செல்லுகின்றன :

(அ) செலேரி (celery) இன் தண்டுகளின் நுனியிலிருந்து சுமார் 2 செ. மீ. நீளமுள்ள துண்டுகளை வெட்டி அவற்றைச் சோர்வு நீக்கு வதற்காகக் குளிர்ந்த நீரில் சுமார் ஒரு மணி நேரம் போட்டு வைத்திடுக. அடுத்தபடியாக அத் தண்டுகளைச் சிவப்பு மையுள்ள தட்டுக்களில் போடுக; இற்றில் அவை பலமணி நேரம் நீடித்து இருக்கட்டும். காம்புகளைக் கவனமாக உற்று நோக்குக. அவற்றைப் பல சிறிய நீளமுள்ள துண்டுகளாக வெட்டி, தண்டில் மை மேல் நோக்கி எந்த இடத்திற்கு நகர்ந்துள்ளது என்பதை உற்று நோக்குக, செலேரியின் தண்டுகளிலிருந்து சில குழல்களைத் தனியாக இழுத்து எடுக்க முயலுக. (ஆ) வெள்ளை ரோசாக்களின் (white carnations) மலர்க் காம்புகளினின்றும் சுமார் 2 செ. மீ. விட்டு வெட்டுக. வெட்டுதல் தண்ணிரினுள் கூரிய கத்தியால் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். மலர்களுடன் கூடிய தண்டுகளை உணவுக்கு நிற மூட்டும் நிறப்பொருள் அல்லது வண்ண மை இவை பல்வேறு நிறத் திண்மைகளுடன் கொண்ட கண்ணுடிப் பாத்திரங்களில் வைத் திடுக. பல மணி நேரம் கழிந்த பின்னர் அவற் றைக் கூர்ந்து நோக்குக. (இ) வெள்ளை ரோசாவின் காம்பினை சவர வாளினைக் (shaving blade) கொண்டு மூன்று பகுதிகளாகப் பிளந்திடுக. தண்டின் உயரத்தில் 8 அல்லது 10 செ. மீ. அளவுவரை பிளவினை நீட்டுக; மேலும் பிளவுருதிருக்கும் ஒரு பொருட்டு ஒரு நாடாவினைச் சுற்றுக. பகுதிகளையும் வெளிப்புறமாக விரித்து ஒவ் வொன்றையும் வெவ்வேறு நிறமுள்ள மை அல்லது உணவிற்கு நிறமூட்டும் பொருளைக் கொண்ட கண்ணுடிப் பாத்திரத்தில் வைத்திடுக. சில மணி நேரங்கழித்து மலரினை உற்று நோக்குக. மூன்று (ஈ) பல்வேறு வகை மரங்களின் சுள்ளிகள் அல்லது தளிர்த்து வெளிப்படும் புதிய தண்டு கள் இவற்றின் வெட்டப் பெற்ற முனைகளை வண்ண மையில் வைத்திடுக; பின்னர் அவற் றைக் கூரிய கத்தியால் சிறு சிறு பகுதிகளாக வெட்டுக. தண்டுகளில் வண்ணம் எவ்வளவு தூரம் மேல்நோக்கிப் பரவியுள்ளது என்பதைக் கூர்ந்து நோக்குக. (உ) சாதாரணமாகத் தோட்டத்தில் வளரும் செடிகளின் விதைகளை மலர்ச் சட்டிகளில் நடுக. இளஞ் செடிகள் 8 லிருந்து 10 செ. மீ. உயரம் வரையில் வேகமாக வளரும்பொழுது தண்டின் மேற் பகுதியை ஒரு கூரிய கத்தியைக் கொண்டு வெட்டுக. வெட்டிய பகுதியில் நீர்த்துளிகள் விரைவில் காணப்பெறும். 3. பல்வேறு வகைத் தண்டுகள் : (a) ஒரு விதையிலே யுள்ளவை : மூங்கில், கரும்பு, கூலம் (corn) போன்ற பல்வேறு வகைத் தாவரங்களின் தண்டுகளைப் பெறுக. ஒவ்வொரு தண்டினையும் ஒரு கூரிய கத்தி அல்லது சவர வாளினைக்கொண்டு வெட்டுக, வெட்டிய குறுக்கு வெட்டுப் பகுதிகளில் ஒற்றுமைகளை உற்று நோக்குக. தண்டின் உட்புறத்தில் உயிர்நிலைப் பகுதி முழுவதிலும் குழல்கள் அல்லது நார் போன்ற குழல்கற்றைகள் சிதறி யிருப்பதைச் சிறப்பாகக் கவனித்திடுக. - (b) இரு விதையிலை யுள்ளவை : தக்காளி, ஜெரேனியம், அலரி போன்ற பல தாவரங்கள் அல்லது சிறு மரங்களின் தண்டுகளைப் பெறுக. இந்தத் தண்டுகளை ஒரு கூரிய கத்தி அல்லது சவர வாளினைக் கொண்டு குறுக்கே வெட்டுக. தண்டின் வெளிப்புற அடுக்கின் சற்றுக் கீழ் ஒரு பிரகாசமுள்ள பச்சை அடுக்கு இருப்பதை உற்று நோக்குக. இது காம்பியன் அடுக்கு (cambian layer) ஆகும். மேலும், குழல்கள் அல்லது நார்க் குழல்களின் கற்றைகள் தண்டின் நடுவிடம் அல் லது மரப்பகுதியைச் சுற்றி ஒரு வளையம் போல் அமைக்கப் பெற்றிருப்பதையும் கூ ர் ந் து நோக்குக. -

40

39