பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്. ഉിക് .ே இலைகள் 1. இலைகளின் வகைகள் : அல்லி, மூங்கில், கரும்பு, கூலம், அலரி போன்ற செடி (willow), ஜெரேனியம் ஆகிய தாவரங்களினின்றும் இலைகளைச் சேகரித்திடுக. ஒருவிதையிலை யுள்ளவற்றின் (அல்லி, மூங்கில், கூலம், கரும்பு) இலை நரம்பு (Wein) ஒரு போகாக (parallel) ஒடுவதை உற்று நோக்குக. இரு விதையிலை யுள்ள தாவரங்களின் (அலரி போன்ற செடி, ஜெரேனியம்) இலைகள் பிரி நரம்பமைப் பினைக் கொண்டிருப்பதை உற்றுநோக்குக. 2. இலைகளைச் சேகரித்தல் : எவ்வளவு இயலுமோ அவ்வளவு பலவகைத் தாவரங்களின் துளிர் இலைகளைச் சேகரித்திடுக. ஓர் உறுதியான மழுமழுப்பான பலகையின்மீது பல அடுக்குச் செய்தித்தாள்கள் அல்லது மை யொற்றுத் தாள்களை வைத்திடுக. அடுத்தபடி யாக, இலைகள் ஒன்றினை யொன்று தொடாத வாறு அதன்மீது அமைத்திடுக. இந்த இலை களை வேறு செய்தித்தாள் அடுக்குகள் அல்லது மையொற்றுத்தாள்களிகுல் மூடுக. அதன்மீது வேறு ஒரு பலகையை வைத்து அதன் பிறகு பல பளுவான கற்கள் அல்லது எடைகளை வைத்திடுக. இலைகள் முற்றிலும் வரையிலும் அவற்றை அழுத்தக் கருவியில் இருக்குமாறு செய்திடுக. இந்த இலைகள் அழுத்தக் கருவியிலிருந்து அகற்றப்பெற்றதும், அவை நோட்டுப் புத்தகப் பக்கங்களில் ஒழுங் காக அமைக்கப்பெற்று ஸ்காட்ச் நாடாவினுலோ அல்லது கோந்துள்ள ஒட்டுச் சீட்டுக்களி ஞ்லோ பிணைக்கப்பெறலாம். இலையின் பெயர், வேறு கவர்ச்சிகரமான செய்தி ஆகியவை நோட் டுப் புத்தகப் பக்கத்தில் பதிவு செய்யப்பெற லாம். உலரும் 3. இலைகளின் புகை அச்சுக்களை உண்டாக்குதல் : இலைகள் புகை அச்சுக்கள் விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ள நான்கு நிலைகளில் எளிதில் செய்யப் பெறலாம். ஒரு மழுமழுப்பான உருளை வடிவப் போத்த லின்மீது ஒரு மெல்லிய கொழுப்பு (grease) அல்லது களிம்பு நெய் (Waseline) படலத்தில்ை பூசுக போத்தலைக் குளிர்ந்த நீரினல் நிரப்பி அதனைத் தக்கையில்ை இறுக மூடுக. போத்தல் புகைக் கரியால் ஒழுங்காக மூடப்பெறும்வரை யிலும் அதனை ஒரு மெழுகுவர்த்திச் சுவாலேயின் VI மீது வைத்திடுக. ஒரு செய்தித் தாள் அடுக்கின் மீது நரம்பமைப்புள்ள பக்கம் மேலிருக்குமாறு ஓர் இலையை வைத்துப் புகைக்கரி படர்ந்த போத்தலை இலையின்மீது உருட்டுக. இலையை t - 3 1. களிம்பு நெய் பூசப்பெற்ற நீர் நிரம்பிய போத்தல் : 2. செய்தித் தாள்கள் : 3. புகை படர்த்த போத்தல் : 4. தூய்மையான செய்தித் தாளின்மீது புகைபடர்ந்த இல: 5. வெள்ளைக் காகிதம்: 5. அச்சு ; 7. தூய்மையான யோத்தல். புகை அகற்றி அதனை ஒரு தூய்மையான செய்தித் தாளின் மீது நரம்பமைப்புள்ள பக்கம் மேலிருக்கு மாறு கிடத்துக. இலையை ஒரு வெள்ளைத் தாளிளுல் மூடுக. அடுத்து, ஒரு தூய்மையான உருட்டுப் போத்தல் அல்லது உருளையினைக் கொண்டு வெள்ளைத் தாளின்மீதும் இலையின் மீதும் உருட்டுக. 4. இலைகளின் சிதறு அச்சுக்களை (spatter prints) உண்டாக்குதல் : இலையை ஒரு வெள்ளைத் தாளின்மீது வைத்து அதனைக் குண்டுசிகள், சிறு ஆணிகள் அல்லது சில கூழாங்கற்கள் இவற்றைக் கொண்டு நன்ருக விரித்து வைத்திடுக. ஒரு பழைய பல் துலக்கும் தூரிகையினை (brush) ஏதாவது வண்ண மையில் அல்லது இந்தியா மையில் தோய்த்திடுக. துரிகையைத் தா னின் மீது இருக்குமாறு பிடித்துக்கொண்டு தூரிகையி லுள்ள மை இலையைச் சுற்றிலும் ஒரே மாதிரி யாக விழுமாறு ஒரு கத்தியின் வாளில்ை தூரிகை யின் முள் மயிரினக் கவனமாக இழுத்து இழுத்து

41

40