பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. சாக்டீரியா துண்கிருமி 1 றும்பொழுது ஒரே ஒரு குச்சியை மட்டிலும் தொடுக. -- எவ்வளவு இயலுமோ அத்தனை மூலங்களி னின்றும் பாக்டீரியாக்களைக் கைவசப் படுத்துக. இதற்கு அடியிற்கண்டவற்றைக் குறிப்பிடலாம் : (அ) அழுகும் நிலையிலுள்ள அல்லது கெட்டுப் போன பழம் ; (ஆ) அழுகிப்போன பல் : (இ) அழுக்கடைந்த பணம் ; (ஈ) விரல் நகங் களின் கீழுள்ள அழுக்கு. பல்குத்தும் குச்சியைக் கொண்டு பாக்டீரியா மூலத்தைத் தொடுக ; பயனற்ற (sterile) தோட் டத்தின் மூடியை விரைவாக உயர்த்துக. பல்குத் தும் குச்சியின் முனையை உருளைக்கிழங்குத் துண்டின்மீது தேய்த்து மூடியைத் திரும்பவும் போடுக. தோட்டத்தைப் பயிரிடுங்கால் காற்றி லுள்ள பாக்டீரியாக்களும் பூஞ்சக் காளான்களும் அதில் படாதவாறிருப்பதற்காக மூடியை மிகக் குறைந்த அளவே உயர்த்தவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்க. மீண்டும் மூடிகளை இறுகக் கட்டி அத்தட்டுக்களை ஒர் இருட்டான வெதுவெதுப்பாகவுள்ள இடத்தில் சில நாட்கள் வைத்திடுக. தட்டுக்கள் சோதிக்கப் பெறும் பொழுது உருளைக் கிழங்குத் துண்டின்மீது பாக்டீரியாக்கள் பொட்டுப் பொட்டுக்களாகக் காணப்பெறும். ஒவ்வொரு பொட்டும் ஆயிரக் கணக்கான பாக்டீரியாக்க ளடங்கிய ஒரு குடி யேற்றம் (colony) ஆகும். 3. பாக்டீரியாத் தோட்டங்களுக்குரிய மற்ருெரு வகை நிலம் : நன்ருக வேகும்வரை சிறிதளவு அரிசி அல்லது உருளைக் கிழங்கினை ஒரு தட்டில் கொதிக்க வைத்திடுக. நீரை வடித்து அதனைப் பாதுகாப்பாக வைத்திடுக. சிறிதளவு கூழ் அல்லது அகரினத் (agar) தயாரிப்பதற்கு இந்த நீரினைப் பயன்படுத்துக. ஒரு சிட்டிகை உப்பி னையும் ஒரு சிறு மாட்டிறைச்சியின் கூழ் அல்லது மீனின் தசைத் துண்டினையும் கூழுடன் சேர்த் திடுக. மேலே பயன்படுத்திய அதே வகைத் தட்டினையும் மூ டி யி னே யும் பயன்படுத்துக. தேவையான அளவு சூடான கூழ்க் கலவை யினை ஒவ்வொரு தட்டிலும் அதன் அடிப்பகுதி யில் 3 அல்லது 4 மி. மீ. அளவு நிரம்பும்படி ஊற்றுக. தட்டுக்களில் விரைவாக மூடிகளைப் போடுக ; கூழ் கெட்டியாகும் ஒரையிலும் அத் தட்டுக்கள் அப்படியே இருக்கட்டும். மூடிகளைக் கட்டி அந்த அமைப்பினை ஒர் அடுப்பின்மீது வைத்து நுண்ணிய நோய்ப் புழுக்களைப் போக் குக (sterilize). அடுப்பினின்றும் தட்டுக்களை அகற்றுவதற்கு முன்னர் அவற்றைச் சூடாறச் செய்து கூழும் முன்னிருந்ததைப் போலவே திரும்பவும் கெட்டியாகுமாறு அப்படியே விட்டு வைத்திடுக. இந்த பாக்டீரியாத் தோட்டங்கள் மேலே விவரித்தவற்றைப் போலவே அதே முறையில் பயிரிடப்பெற்று வளர்க்கப் பெறு கின்றன. 4. மாற்றும் ஊசியை (transfer needle) oã குதல் : ஒரு சுவாலையில் சூடுபடுத்தி நுண்ணிய நோய்ப் புழுக்கள் போக்கப்படக்கூடிய ஒரு மாற் றும் ஊசி பாக்டீரியாவுடன் செயற்படுத்துவதற்கு மிகவும் பயன்படக் கூடியது. கிட்டத்தட்ட ஒரு பென்சில் அளவுக்குச் சரியாகவுள்ள ஒரு மென் மரத் துண்டினைக் கைப்பிடியாகப் பயன்படுத்து வதற்காகக் கைவசப் படுத்துக. ஊசியின் கூரிய முனையை மரத்தில் நன்ருகப் பதியுமாறு செலுத்தி ஊசியின் காது முனையைப் பாக்டீரியா வுடன் சேர்ந்து செயற்படுத்துவதற்குப் பயன் படுத்துக. 5. பாக்டீரியா வெகு நன்ருக வளர்வது ஈரமான இடத்திலா, அல்லது உலர்ந்த இடத்திலா என்பதை ஆராய்தல் : நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற (sterilized) இரண்டு தட்டுக்களைப் பயன்படுத்துக. வேருெரு தட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாக்டீரி யாக் குடியேற்றத்தை நோய்ப் புழுக்கள் போக் கப்பெற்ற ஒரு மாற்றும் ஊசியால் தொட்டு ஒவ் வொரு தட்டிலும் பாக்டீரியாக்களைப் புகுத்துக. ஒவ்வொரு தட்டிலுமுள்ள கூழின் குறுக்கே ஊசியின்மீதுள்ள பொருளைத் தடவுக. தட்டுக் களில் விரைவாக மூடிகளைப் போடுக. ஒரு தட்டின்மீது உலர்ந்தது’ என்றும் மற்ருென் றின்மீது ஈரமானது என்றும் பெயர் எழுதுக. முதல் தட்டினை ஒரு பெட்டியினுல் மூடி வெப்பக் கதிர் வீசும் கருவியில் (radiator) வைத்து நன்ருக உலர்த்துக. ஈரமானது' என்று பெயரி டப்பெற்ற தட்டினை ஒர் இருண்ட வெது வெதுப்பாகவுள்ள இட த் தி ல் வைத்திடுக. ஆனல், அஃது அங்கு உலரக்கூடாது. இரண்டு தட்டுக்களையும் பல நாட்கள் சோதித்திடுக. 6. பாக்டீரியா மிக நன்ருக வளர்வது வெது வெதுப்பான இடத்திலா அல்லது குளிர்ந்த இடத்திலா என்பதை ஆராய்தல் : மீண்டும் நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற இரண்டு தட்டுக்களில் பாக்டீரியாக்களைப் புகுத்

领0

49