பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக. ஒரு தட்டின்மீது வெதுவெதுப்பானது' என்றும் மற்ருெரு தட்டின்மீது குளிர்ந்தது . என்றும் பெயரெழுதுக. முதல் தட்டினை ஓர் இருண்ட வெது வெதுப்பான இடத்திலும் இரண்டாவதனை ஓர் இருண்ட் குளிர்ந்த இடத் திலுமாக வைத்திடுக. தட்டுக்களை ஒவ்வொரு நாளும் சோதித்திடுக; இங்ங்ணம் பலநாட்கள் தொடர்ந்து செய்க. 7. பாக்டீரியா மிக நன்ருக வளர்வது இருண்ட இடத்திலா அல்லது ஒளியுள்ள இடத்திலா என்பதை ஆராய்தல் : முன்போலவே நோய்ப் புழுக்கள் போக்கப் பெற்ற இரண்டு தட்டுக்களில் பாக்டீரியாக்களைப் புகுத்துக. ஒன்றின்மீது இருண்டது என்றும் மற்ருென்றின்மீது ஒளியுள்ளது எ ன் று ம் பெயரெழுதுக. முதல் தட்டினை ஓர் இருண்ட வெதுவெதுப்பான இடத்திலும் இரண்டாவது தட்டினை ஒளிர்வுடைய ஞாயிற்றின் ஒளியிலோ அல்லது எப்பொழுதும் தட்டின்மீது பட்டுக் கொண்டுள்ள மின் விளக்கு ஒளியிலோ வைத் திடுக. பல நாட்கள் வரையில் நாடோறும் தட்டுக்களைச் சோதித்திடுக. 8. பாக்டீரியா எங்குக் காணப்பெறலாம்? நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற பாக்டீரி யாத் தட்டுக்களை எவ்வளவுக் கியலுமோ அவ் வளவுக்கு அடியிற்கண்ட நிலைமைகளில் திறந்து வைத்திடுக. தட்டுக்களில் பெயர்களை எழுதி அவற்றை ஒரு வெது வெதுப்பான இருண்ட இடத்தில் பல நாட்கள் வைத்து அதன் பின்னர் அவற்றைச் சோதிக்க வேண்டும். 1. தூய்மையான கைகளும் அழுக்குள்ள கைகளும். . ஒரு தட்டுத் துணி. கழிவுப் பொருள் உள்ள தகரக் குவளை. இருமல். . தும்மல். . உங்கள் செருப்புக்களின் அடிப்பக்கம், . ஒரு தூய்மையான உண்கலம், s řF« . கரப்பான் பூச்சி. மென் மயிருடன் கூடிய நாய்த்தோல். பள்ளியறையின் காற்று. புளிக்கும் பால். ஒரு பென்சில் முனை. ●虑杀 13. .ே பாக்டீசிய துண்கிருமி ! 14 ஒர் அழுக்கடைந்த தெருவின் காற்று. 15. தேங்கி நிற்கும் நீர். . . . . . 18. கம்பளம் அல்லது சமுக்காளம். 9. ஞாயிற்றின் ஒளி பாக்டீரியாக்களைக் கொல்லு கின்றதா? - பாக்டீரியா வளர்ந்து கொண்டிருக்கும் தட்டி லிருந்து நோய்ப் புழுக்கள் போக்கப் பெற்ற இரண்டு பாக்டீரியாத் தட்டுக்களுக்கு பாக்டீரி யாக்களைப் புகுத்துக. ஒரு தட்டினத் திறந்த ஞாயிற்றின் ஒளியிலும் மன்றென்றினை வெது வெதுப்பான இருண்ட இடத்திலுமாக வைத் திடுக. ஒரு தட்டு பல மணி நேரம் ஞாயிற்றின் ஒளியில் இருந்த பிறகு அதனை மற்ற தட்டோடு வெது வெதுப்பான இருண்ட இடத்தில் வைத் திடுக. ஒவ்வொரு நாளும் தட்டுக்களைச் சோதித் திடுக; இதனைப் பல நாட்கள் தொடர்ந்து செய்க. 10. தொற்று நீக்கிகள் பாக்டீரியாக்களைக் கொல்லு கின்றனவா ? பல்வேறு வகை வணிக, வீட்டுத் தொற்று நீக்கிகளைக் கைவசப்படுத்துக. உங்களிடம் எத் தன வகைத் தொற்று நீக்கிகள் உள்ளனவோ அத்தனைப் பண்ணை வளர்ப்புத் தட்டுக்களிலும் கட்டுப்படுத்துவதற்காக அதிகப்படியாக ஒரு தட் டிலும் பாக்டீரியாக்களைப் புகுத்துக. பாக்டீரி யாக்கள் புகுத்திய ஒவ்வொரு தட்டிலுமுள்ள நிலத்தையும் ஒவ்வொரு வகைத் தொற்று நீக்கி யால் கழுவுக. அதிகப்படியாகவுள்ளவற்றைக் கொட்டிவிடுக. ஒவ்வொரு தட்டின்மீதும் பெய ரெழுதுக. தட்டுக்களில் மூடிகளைத் திரும்பவும் போட்டு கட்டுப்படுத்தும் தட்டு உட்பட எல்லாத் தட்டுக்களையும் ஒரு வெ. து வெதுப்பான இருண்ட இடத்தில் வைத்து சின்னுட்கள் கழிந்தபின் அவற்றைச் சோதித்திடுக. 11. நில பாக்டீரியா வதியும் இடத்தை உற்று நோக்குதல் : - ஒரு மணப் புல் (clower), ஆல்ஃபால்ஃபா (alkalia) அல்லது மொச்சை வகைச் செடியினைத் தோண்டி எடுத்திடுக. வேர்களினின்றும் எல்லா மண்ணையும் கவனமாகக் கழுவி, வேர்களின்மீது வெண்மையான சிறு முடிச்சுக்களைக் (nodules) கண்டறிய முடிகின்றதா என்பதைக் காண்க. மண் வளத்திற்குக் காரணமாகவுள்ள நைட் ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் இந் இடங்களில் காணப்பெறுகின்றன. -:

51

50