பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே பூஞ்சக் காளான்கள் 1. பல்வேறு வகை பூஞ்சக்காளன்களை அடைதல்: (அ) தன்மீது பச்சைப் பூஞ்சக் காளானைக் கொண்ட கிச்சிலிப்பழம் ஒன்றினைக் கைவசப் படுத்தி அதனை ஓர் இருண்ட இடத்தில் ஒரு சாடியில் வைத்திடுக. (ஆ) ஒரு சாடியில் ஈரமான ரொட்டித் துண் டினை வைத்து அதனைக் காற்று படுமாறு திறந்து வைத்திடுக. அதனை அப்படியே ஓர் இருண்ட வெதுவெதுப்பான இடத்தில் ஒரு சில நாட்கள் வைத்திடுக. (இ) பூஞ்சக் காளான் பிடித்த ஒரு நீல நிற முள்ள அல்லது ராக்ஃபோர்ட் (Roguetori cheese) பாலடைக் கட்டியைக் கைவசப்படுத்துக. அதனை ஓர் இருண்ட வெது வெதுப்பான இடத்தில் ஒரு சாடியில் வைத்திடுக. (ஈ) ஒரு சில இறந்த ஈக்களைத் தேங்கிக் கிடக்கும் சிறிதளவு நீரில் வைத்திடுக. ஒரு சில நாட்களில் அவை ஒருவகை வெண்ணிற வளர்ச்சியினைக் கொண்ட பூஞ்சக் காளாளுல் சூழப்பெற்றுவிடும். - - 2. பூஞ்சக் காளான் செடியினங்களை எங்ஙனம் வளர்ப்பது ? - பாக்டீரியாக்களைப்பற்றிய சோதனைகட்குத் தயாரிக்கப்பெற்றவைபோன்ற உருளைக் கிழங் குத் துண்டுகள் அல்லது கூழினைக்கொண்ட நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற தட்டுக்களைப் பயன் படுத்துக. மேற்குறிப்பிட்ட சோதனை-1 இல் உள்ள ஒவ்வொரு மூலத்தினின்றும் (source) பூஞ்சக் காளான நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற வளர்ப்புத் தட்டுக்களுக்கு மாற்றுக. ஒர் இருண்ட வெதுவெதுப்பான இடத்தின் ஒரு புறத்தில் இந்த நான்கு தட்டுக்க ளையும் வைத்திடுக. ஒரு சில நாட்களில் நீங்கள் வளர்த்திட்ட நான்கு வகைப் பூஞ்சக் காளான்கள் ஒவ்வொன்றிலும் தூய்மையான வளர்ப்புப் பண்ணைகளே அடைவீர்கள். م.م. 3. பூஞ்சக் காளான்களின் அமைப்பு: இந்த நான்கு தூய்மையான பண்ணைகளின் பூஞ்சக் காளான் வேகமான வளர்ச்சி நிலையை அடைந்ததும், ஒவ்வொன்றையும் ஒரு கை வில்லையைக் (hand lens) கொண்டு சோதித் திடுக. சில பூஞ்சக் காளான்களாகின்ற இழை முறுக்குகள் சிலந்திவலைத் தோற்றம்போல் காட்சி அளிக்கின்றனவா என்பதைக் காண்க துண்ணிய கறுப்புக் குமிழ்களைக் கொண்ட சிறிய காம்புகளைக் கண்டறிய முடிகின்றதா என்பதைக் காண்க. இவை இலைச் சிதல் (Spore cases) களாகும். ஒவ்வொரு இலைச் சிதலிலும் ஆயிரக் கணக்கான இலைச் சிதல்கள் உண்டாக்கப் பெறு கின்றன; ஒவ்வொன்றும் முதிர்ச்சி யடைந்ததும் வெடிக்கின்றது. நிலைமைகள் சரியாக இருப்பின் ஒவ்வொரு இலச் சிதலினின்றும் ஒரு புதிய பூஞ்சக் காளான் தாவரம் வளர்ச்சியடையதல் கூடும். 4. பூஞ்சக் காளான்களின் வளர்ச்சிக்கு தேவையா?

  • = நா

அரிசி அல்லது ஒட் மாவு போன்ற உலர்ந்த கூலவகைகளை நோய்ப்புழுக்கள் போக்கப்பெற்ற ஒரு பண்ணே வளர்ச்சித் தட்டில் (culture dish) வைத்திடுக. அதே அளவு அதே வகைக் கூலத் தைச் சமைத்த நிலையில் மற்ருெரு பண்ணை வளர்ச்சித் தட்டில் வைத்திடுக. நோய்ப் புழுக்கள் போக்கப்பெற்ற ஒரு மாற்றும் ஊசி யினைக் கொண்டு ஒரு வளர்ச்சிப் பண்ணையினின் றும் ஒவ்வொரு வகை மாதிரிக்கும் பூஞ்சக் காளானைப் புகுத்துக. தட்டுக்களை மூடி அவற் றின்மீது பெயர்களை எழுதுக. தட்டுக்களை ஓர் இருண்ட வெதுவெதுப்பான இடத்தில் ஒரு புறமாக வைத்து ஒரு சில நாட்கள் கழிந்ததும் ஒவ்வொன்றினையும் உற்று நோக்குக. 5. பூஞ்சக் காளான்கள் மிக நன்ருக வளர்வது வெதுவெதுப்பான இடத்திலா? அல்லது குளிர்ந்த இடத்திலா? 4-வது சோதனையைத் திரும்பவும் செய்க. இப்பொழுது ஒரு பண்ணை வளர்ச்சித் தட்டினை ஒரு வெதுவெதுப்பான இருண்ட இடத்திலும் மற்ருெரு பண்ணை வளர்ச்சித் தட்டினைக் குளிர்ந்த இருட்டான இடத்திலுமாக வைத் திடுக. ஒரு சில நாட்கள் கழிந்ததும் தட்டுக்களைச் சோதித்திடுக. - 6. பூஞ்சக் காளான்கள் மிக நன்றக வளர்வது இருண்ட இடத்திலா அல்லது ஒளியுள்ள இடத்தில்ா மேற் குறிப்பிட்ட 4-வது சோதனையைத் திரும் பவும் செய்திடுக. இப்பொழுது ஒரு பண்ணை வளர்ச்சித் தட்டினை எப்பொழுதும் ஒளியுள்ள ஒரு வெது வெதுப்பான இடத்தில் வைத்திடுக. மற்ருெரு தட்டினை ஒரு வெது வெதுப்பான இருண்ட இடத்தில் வைத்திடுக. ஒரு சில நாட்கள் கழித்துத் தட்டுகளைச் சோதித்திடுக.

52

51