பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. காடிச் சத்து 1. பிசைந்த மாவில் காடிச்சத்தின் வினவு களைக் காட்டுதல் : . சிறிதளவு சருக்கரை, நீர், மாவு இவற்றை ஒரு நல்ல ரொட்டி மாவினைச் செய்வதற்கேற்ற வீதங்களில் நன்ருகக் கலந்திடுக. பிசைந்த மாவின இரு சம பகுதிகளாகப் பிரித்திடுக. ஒரு காடிச்சத்துப் பாளத்தின் (cake) பாதியை சிறி தளவு நீரில் போட்டு நன்ருகக் கலக்கி அக்கரை சலை ஒரு மாதிரிப் பகுதிப் பிசைந்த மாவுடன் கலந்திடுக. ஒவ்வொரு மாதிரி மாவினையும் தட் டுக்களில் வைத்து பெயர்களை எழுதி அவற்றை ஒரு வெதுவெதுப்பான இடத்தில் ஒருபுறமாக வைத்திடுக. ஒருசில மணி நேரம் கழிந்ததும் அவற்றை உற்றுநோக்குக. 2. காடிச்சத்தின் செயலில் வெப்பநிலை விளைவு களைச் சோதித்தல்: . மேற்குறிப்பிட்ட 1-வது சோதனையிலுள்ள தைப்போல் பிசைந்த ரொட்டி மாவினைத் தயாரித்திடுக. ஒரு காடிச்சத்துப் பாளத்தை நீரில் போட்டுக் கலக்கிப் பிசைந்த மாவுடன் அதனை நன்ருகக் கலந்திடுக. இந்த மாவின மூன்று சம பாகங்களாகப் பிரித்து அவற்றைத் தட்டுக்களில் அல்லது சாடிகளில் வைத்திடுக. மாதிரிகளின்மீது 1, 2, 3 என்று எண்களைக் குறித்திடுக. மாதிரி-1ஐ ஒரு கடுங்குளிர்ப் பெட் டியிலும் (refrigerator), மாதிரி-2ஐ ஒரு வெது வெதுப்பான இடத்திலும், மாதிரி - 3ஐ ஒரு சூடான இடத்திலுமாக வைத்திடுக. ஒரு சில மணி நேரங்கழித்து ஒவ்வொரு மாதிரிப் பொரு ளையும் சோதித்திடுக. ്. 3. சருக்கரையின்மீது காடிச்சத்து செயற்படுகின் றது என்பதைக் காட்டுதல்: பழுப்பு அல்லது வெள்ளைச் சருக்கரையைக் கொண்டோ, வெல்லப் பாகு அல்லது தேனைக் கொண்டோ ஒரு சாடியில் சருக்கரைக் கரை சலைத் தயாரித்திடுக. ஒரு காடிச்சத்துப் பாளத் தின் நான்கில் ஒரு பகுதியை நன்ருகச் சிறு துண்டுகளாக்கி அவற்றைச்சருக்கரைக் கரைசல் உள்ள ஒரு சோதனைக் குழலில் போடுக. அதே அளவு சாதாரணக் குழல் நீரில் வேருெரு நான் கில் ஒரு பகுதி காடிச்சத்துப் பகுதியைத் துண்டு களாக்கிப் போடுக. இரண்டு சோதனைக் குழல் களையும் வெது வெதுப்பாக வைத்திடுக. அவ் வப்பொழுது சோதனைக் குழல்களே உற்று நோக்கி அவற்றில் ஏதாவது வேற்றுமைகள் காணப்பெற்ருல், அவற்றைக் குறித் துக் கொள்க. 4. காடிச்சத்து கருக்கரையுடன் சேர்ந்து செயற் படுங்கால் உண்டாகும் வாயுவை ஆராய்தல் : சிறிதளவு தெளிவான சுண்ணும்பு நீரினை ஒரு சோதனைக் குழலில் ஊற்றி அதில் ஒரு சோடா பருகும் வைக்கோற்புல் குழலை வைத்து அதை ஒரு மாளுக்கனை வாயில் வைத்து ஊதச் செய்க. விரைவில் தெளிவான சுண்ணும்பு நீர் பால்போல் வெண்ணிறமாக மாறும் ; இது கரியமிலவாயு விற்குரிய சோதனையாகும். அடுத்து, சிறிதளவு காடிச்சத்தினைச் சருக்கரைக் கரைசல் உள்ள - சருக்கரைக் கரைசலும் காடிச் சத்தும் ஒரு சோதனைக் குழலில் போடுக. அக்குழலில் ஒற்றைத் துளேயுள்ள அடைப்பானை அமைத் துத் துளை வழியாக ஒரு கண்ணுடிக் குழலினைச் செருகுக. அடைப்பானில் செருகியுள்ள கண் குடிக் குழலுடன் ஓர் இரப்பர்க் குழலையும் கிட்டத்தட்ட 15 செ. மீ. நீளமுள்ள கண்ணுடிக் குழலையும் இணைத்திடுக. நீண்ட கண்ணுடிக் குழலினைத் தெளிவான சுண்ணும்பு நீருள்ள ஒரு சோதனைக்குழலில் வைத்திடுக. இந்தக் குழல்கள் ஒரு வெது வெதுப்பான இடத்தில் சிறிது நேரம் இருக்கட்டும். சுண்ணும்பு நீ ரி னே உ ற் று நோக்குக. - 5. காடிச்சத்துத் தாவரங்களை (yeast plant) உற்றுநோக்குதல் : ஒரு கல்லூரி, ஓர் உயர்நிலைப் பள்ளி, ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ மனை - இங் கிருந்து நுண்பெருக்கி (microscope) யொன்

53

52