பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t. காடிச் சத்து றினை இரவலாகப் பெறுக, கொண்ட சருக்கரைக் கரடிச்சத்தினைக் ஒரு சில கரைசலின் முகைகள் துளிகளை ஒரு கண்ணுடி நழுவத்தின் (slide) மீது வைத்து அவற்றை நுண்பெருக்கியின் வழி யாக உற்று நோக்குக. நீங்கள் முட்டை-வடிவ முள்ள பல சிறிய உயிரணுக்களைக் காண்பீர்கள். இவை ஒவ்வொன்றும் காடிச்சத்துத் தாவர மாகும். ஒரு வேளை நீங்கள் ஒரு சில தாவரங் கள் தம்மிடம் முகைகளைக் (buds) கொண்டிருப் பதையும் காணுதல் கூடும். இம்முறையில் தான் காடிச் சத்துத் தாவரங்கள் இனப்பெருக் கம் செய்கின்றன. 1. நிலமின்றித் தாவரங்களை வளர்த்தல் நிலமின்றி வீட்டுக்குள்ளேயே தாவரங்களே வளர்ப்பதில் சில சிறுவர்கள் அக்கறை காட்ட டலாம். இது செய்யப்பெறுதல் கூடும்; இதற்குச் சில பிரத்தியேகமான பொருள் களும் வேதியியற் பொருள்களும் (chemicals) தேவைப்படுகின்றன. இத்தகைய சோதனை களுக்குரிய பொருள்களடங்கிய பெட்டி (kit) தயார் செய்யப்பெற்றுள்ளது; இதனை அறிவியல் பணித்துறை, 1719 என். தெரு, என். டபிள்யூ. வாஷிங்க்டன் டி. சி., அ மெ ரி க் க ஐக்கிய நாடுகள் என்ற இடத்தில் சுமார் 5 டாலருக்குப் பெறலாம். j. எளிய தோட்ட வேலை பல சிறுவர்கள் வீட்டில், அல்லது பள்ளியில் தோட்டங்களே அமைப்பதில் அக்கறை கொண் டுள்ளனர். ஒவ்வொரு சிறுவனும் ஒரு சிறிய தோட்ட நிலத் ைத த் தேர்ந்தெடுக்கவும் அதனைத் துப்புரவு செய்யவும் உற்சாகமூட்டப் பெறுதல் வேண்டும். தரை நன்ருக மண்வெட் டியால் கொத்தப்பெற்றுத் தயாரானவுடன் அதன்மீது வரிசையான கரைகள் அமைக்கப் பெறுதல் வேண்டும். ஒன்று விட்ட கரைகளில் முட்டைகோசைப் போன்ற கீரை வகை (lettuce), முள்ளங்கி போன்ற சிறு காய்கறி வகைகள் பயிரிடப் பெறலாம். ஒவ்வொரு மாளுக்கனும் தன்னுடைய தோட்டத்தின் நிலப்படத்தை வரைந்து அதில் தான் பயிரிட் டுள்ள பல்வேறு செடியினங்களைக் குறித்தல் வேண்டும். பின்னல் பெயர்த்து நடக்கூடிய செடி யினங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ தொடங்கப் பெறலாம். இதற்குச் சுமார் 10 செ.மீ. ஆழமுள்ள மரப் பெட்டிகள் தேவைப் படும். சுமார் 8 செ. மீ. ஆழத்திற்கு இப் பெட்டிகள் நல்ல மண்ணைக் கொண்டு நிரப்பப் பெறுகின்றன. தக்காளி, முட்டைகோசு, பூக் (cauliflower), இனிப்பு மிளகுகள் போன்ற விதைகள் வீட்டினுள் தொடங்கப் பெற லாம். முட்டைகோசைப் போன்ற கீரைவகை யும் முள்ளங்கியும் முதிர்ச்சி யடைந்தவுடன், வீட்டினுள் வளர்க்கப்பெற்ற தாவரங்கள் வெளி யிலுள்ள தோட்டத்தில் பெயர்த்து நடுவதற்குத் தயாராக இருக்கும். கோசு.

தாவரங்களின் வளர்ச்சியிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் உள்ள பல பயன்படத்தக்க பாடங்களில் தே ட் ட வே லை ச் செயல்கள் கொண்டு செலுத்தும். ஆண்டின் பிற்பகுதியில் தோட்டத்தில் வளர்த்த காய்கறிக் காட்சிப் பொருளைப் பலரறியக் காட்டுவதற்குத் திட்ட மிடப்பெறலாம்.

53