பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 4 பிராணியினப் படிப்பிற்குரிய முறைகளும் பொருள்களும் 1. பூச்சிகளைச் சேகரிக்கும் வலை : துடைப்பக் கம்பு அல்லது ஒற்றடைக் கம்பு போன்ற ஓர் உருளை வடிவமான கம்பு, சிறிதளவு கனமான கம்பி, கொசுவலை அல்லது பாலடைத் துணி இவற்றைக்கொண்டு பயன் படத்தக்க ஒரு பூச்சி வலையைச் செய்யலாம். கனமான கம்பித் துண்டொன்றிணை 38 லிருந்து 45 செ. மீ. விட்டமுள்ள ஒரு வட்டவடிவ மாக வளைத்திடுக. கம்பியின் இரண்டு முன்ன களையும் ஒன்ருக இணைத்து முறுக்கி 15 செ. மீ. நீளமுள்ள நீண்ட பகுதியாக்குக. இதனை கம் கம்பு அல்லது ஒற்றடைக் புடன் இணைத்து ஒரு மெல்லிய கம்பியினுல் சுற்றியோ அல்லது கம்பித் தையல் பொறியி ேைலா இறுகப் பிணைத்திடுக. சுமார் 75 செ. மீ. ஆழம் உள்ள ஒருவலே அமையுமாறு ஒரு கொசு வலைத் துண்டு அல்லது பாலடைத் துணியை துடைப்பக் வெட்டுக. இதனை வட்டமான கம்பிச் சட்டத் தில் வைத்துப் பொருத்தி நன்ருகத் தைத்து இணைத்து விடுக. 2. பூச்சியைக் கொல்லும் சாடி : உச்சியில் மரையுடன் கூடிய அல்லது மிகவும் இறுக்கமாக மூடக்கூடிய ஓர் அகண்ட வாயினை யுடைய கண்ணுடிச் சாடியைக் கைவசப்படுத்துக. சாடியின் அடியில் ஒரு கற்றைப் பஞ்சினை வைத்து அதனைப் பல்வேறு துளைகளைக்கொண்ட ஒரு வட்டமான அட்டை அல்லது மையொற்றுத் தாளில்ை மூடுக. சாடியைப் பயன்படுத்தும் பொழுது பஞ்சினைக் கார்பன்-டெட்ராகுளோரை டிஞல் அல்லது D. D. T. யைக் கொண்ட, கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லி யினுல் நிறைநிலை யாக்குக (saturate). பஞ்சின்மீது அட்டையை வைத்து அதன் பிறகு சாடியில் பூச்சியினை வைத்திடுக. சாடியினை இறுக மூடுக ; அப்பூச்சி சாகும் வரையில் அதனை அப் படியே விட்டு வைத்திடுக. அந்துப் பூச்சிகள் அல்லது வண்ணத்துப் பூச்சிகள் தயாரிக்கப் பெறும்பொழுது அவற்றின் சிறகுகள் அறுபடா திருக்கும் பொருட்டுச் சாடியின் வாய் அகல மானதாக இருக்குமாறு கவனித்துக் கொள்க. 3. பூச்சிகளுக்கான துக்குப் பலகை : பூச்சிகள் சட்டத்தில் பதிக்கப்பெறுவதற்குத் தயாராகும் பொழுது ஒரு தூக்குப் பலகை (stretching board) iflá;5|th Øsirousoulturăşi. அத்தகைய ஒரு பலகையைச் சுருட்டுப் பெட்டியி னின்றும் தயாரித்துக் கொள்ளலாம். சுருட்டுப் பெட்டியினின்றும் அதன் மேலுறையை நீக்கி அதனை நீளப்போக்கில் இரு சம பாகங்களாகப் பிரித்திடுக. மீண்டும் இவற்றை அந்தப் பெட் டியுடன் இணைத்து அப்பகுதிகளிடையே ஒரு செ.மீ. அகலம் இடைவெளிஇருக்குமாறு செய்க. பூச்சியின் உடல் நீண்ட இடைவெளியில் வைக் கப்பெறுகின்றது ; அதன் சிறகுகள் உச்சியில் துண்டுக் காகிதங்களால் பொருத்தப்பெறுகின் றன; இக்காகிதங்கள் குண்டூசிகளால் மென் பலகையினுள் தாங்கப்பெறுகின்றன ; ஆனல் அவை சிறகுகளினூடே தாங்கப்பெறுவதில்லை.

சில சமயங்களில் உச்சிப் பகுதிகளில் ஓரளவு கோண நிலை விரும்பத்தக்கது. மேலுறையினின் றும் வெட்டிய பகுதிகளை இணைப்பதற்கு முன்னர் சுருட்டுப் பெட்டியின் கோடிகளை ஓரளவு W வடிவத்தில் வெட்டி இதனை நிறைவேற்றிக் கொள்ளலாம். இது மேலுள்ள விளக்கப் படம் b இல் காட்டப்பெற்றுள்ளது.

55

54