பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயல்கள் (guinea pigs), கொறிக்கும் பிராணி கள் போன்ற பிராணிகட்கு ஒரு நீர் அருந்தும் அமைப்பு ஒரு பளுவான தட்டு அல்லது சாறுண் ணும் தட்டில் கவிழ்க்கப் பெற்ற ஒரு பாதுகாப்புச் சாடியினின்றும் இயற்றப் பெறுதல் கூடும். ஒழுங்கான முறைப்படி பிராணிகட்கு உண ஆட்டுதல், நீர் அருத்துதல், ஒழுங்கான முறைப் படி கூடுகளைத் துப்புரவு செய்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை பிராணிகளின் | உடல் நலன், வசதி இவைகட்கு இன்றி யமையாதனவாக இருப்பதுடன் மாளுக்கர் களின் ஒழுங்குமுறைப் பழக்கங்கள், பொறுப் புணர்ச்சி இவைகட்கும் இன்றியமையாதனவாக உள்ளன. உணவும் நீரும் நாடோறும் மாற்றப் பெறுதல் வேண்டும்; வாரத்திற்கு ஒருமுறை கூடுகளைத் துப்புரவு செய்தல் வேண்டும். 6. வீட்டில் தயாரித்த புழுக்களின் உறைவிடம் : 30 x30 x15 செ. மீ. அளவுகளுள்ள கண்ணுடி முகப்புப் பொருத்தப்பெற்றுள்ள ஒரு மரப்பெட்டி மண் புழுக்களின் பழக்கங்களைப்பற்றி ஆய் வதற்குப் பயனுள்ளதாக அமைகின்றது. . VIII பிராணியினப் படிப்பு பெட்டியின் அடிமட்டத்திலிருந்து கிட்டத் தட்ட உச்சிவரை (அ) மணல், (ஆ) இலை பூஞ்சக் காளான், (இ) தோட்ட மண் இவற்றின் அடுக்குகளால் நிரப்புக. ஒவ்வொரு அடுக்கினை யும் அடுத்த அடுக்கினை அமைப்பதற்கு முன்னர் திண்ணியதாக்குக. மேற்பரப்பின்மீது முட்டைக் கோசுக் கீரை போன்ற இலைகள், சருகுகள், காரட் கிழங்கு முதலியவற்றைப் போடுக ; அவற்றுடன் சில புழுக்களையும் போடுக. பெட்டியிலுள்ள பொருள்களை ஈரமாக வைத் திருந்து புழுக்களின் நடத்தையைக் கவனமாக ஆராய்க. * 7. பூச்சிகளின் வாழ்க்கை ஆராய்தல் : ஒரு பெரிய அட்டைக் கொள்கலனின் பக்கங் களில் பெரிய செவ்வக வடிவமுள்ள துளைகளிட்டு அத் துளைகளை மெல்லிய வெண் துகிலால் மூடுக. இத்துகிலின் ஒரங்கள் மடிக்கப்பெற்று அவை அசையாமல் ஒட்டப்பெறுதல் வேண் டும். ஒரு செவ்வக வடிவத்தின் மூன்று பக்கங் களே வெட்டி நான்காவது பக்கத்தில் மடித்து ஒரு பெரிய கதவின அமைத்திடுக. மடித்த தாள் அல்லது அட்டையைக் கதவின் முன்புற ஒரத்தில் ஒட்டி அதனைக் கைப்பிடிபோல் செயற் படுமாறு செய்திடுக. பெட்டியின் தொடக்கத்தி லிருந்த அடிப்புறத்தைச் சேதமுருமல் வைத் திருந்தால் பெட்டி உறுதிப்பாட்டுடன் இருக் கும். (செல்லோஃபேன் தாள் கிடைத்தால் கதவில் அல்லது பெட்டியின் ஒரு பக்கத்தில் சாளரம் ஒன்றினை அமைத்திடலாம்.) தரைமட் டத்தில் தளர்ச்சியான தாளொன்றினை வைத் திடுக; இது துப்புரவு செய்வதற்கு வசதியாக இருக்கும். ஊன் பசைச் சட்டிகளில் ஈரமண் ணைப்போட்டு அதில் உணவுத் தாவரங்களின் வெட்டிய பூக்கள், தண்டுகள், இலைகள் இவற் றைப் போடுக. இது நீர்ச்சட்டிகளைவிட நல்லது; நீர்ச்சட்டிகளில் பூச்சிகள் அமிழ்வதும் இவ் வமைப்பினுல் தவிர்க்கப்பெறும். வரலாறு களை துயிற் பருவத்திற் கேற்றவாறு பெரிய சட்டி களில் மண் போடப்பெற்ருல், இந்தக் கூடு வண்ணத்துப் பூச்சிகள், அந்துப் பூச்சிகள் இவற் றின் வாழ்க்கை வரலாறுகளின் எல்லா நிலைகட் கும் பொருந்துவதாக அமையும். பூச்சிகள் ஒரு துரிகையினைக் (brush) கொண்டோ அல்லது

56