பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணியினப் படிப்பு ஒரு சிறு கோலினைக் கொண்டோ கையாளப் பெறலாம். 8. வெட்டுக்கிளிகட்கும் பூச்சிகட்கும் வசதி செய்தல் : குச்சிப் இத்தகைய பூச்சிகளை நீங்கள் கவிழ்க்கப்பெற்ற இன்பழ ஊறல் சாடியில் வைக்கலாம். அவற் றிற்குச் சிறிதளவு இலைத் தொகுதியை (foliage) வைத்தல் வேண்டும்; இந்த இலைத் தொகுதி ஓர் இறைச்சிச் சாடியில் நிறுத்தப்பெறலாம். பூச்சிக்கு அதிக இடம் தருவதற்காகவும், அஃது அமிழ்வதினின்றும் காப்பதற்காகவும், அந்தச் சாடி கவிழ்க்கப்பெற்ற கால் புதையரணப் பெட்டி யின் (shoebox) மீது இருக்குமாறு செய்யப்பெற லாம்; இந்த அமைப்பில் இலைகள் மேலே நீட் டிக் கொண்டிருக்கும். போதுமான அளவு புதிய காற்று வருவதற் கேற்றவாறு கால் புதைய ரணப் பெட்டியில் துளைகளிடப் பெறுதல் வேண்டும். 9. ஈக்களுக்குரிய இன்பழ ஊறல் சாடி உறை விடம் : ஓர் ஈயை வைத்து அதன் வாழ்க்கையையும் பழக்கங்களையும் ஆய்வதற்கு ஓர் இன்பழ ஊறல் சாடி (iam iar) பயன்படுத்தப்பெறலாம். கழிவுப் பொருளொன்றில் முட்டைகளை இட்ட பிறகு, ஈயை மற்ருெரு சாடிக்கு மாற்றுக ; முட்டைகளை வெயிலில் அல்லது ஒரு கதிர் வீசியின்மீது வெது வெதுப்பான இடத்தில் வைத்திடுக. ஒரு வாரம் கழிந்ததும் முட்டைகள் புழுக்களாகப் பொரிக்கப்பெறும். இன்னும் ஒரு வார காலத் தில் அவை கூட்டுப் புழுக்களாகும். சிறிதளவு ஈரமுள்ள மண் அல்லது பாசியை உள்ளே செலுத்தினல் அவற்றை உலராமல் தடுக்கும்; இதல்ை ஒரு சில வாரங்கள் அவற்றின் வாழ்க்கை வரலாற்று வட்டம் முழுவதையும் கவனிக்கலாம். அதன் பின்னர், சில பிரச்சினை கள் ஆராயப் பெறலாம். அவை உறங்குகின் றனவா ? அவை எவ்வாறு உண்கின்றன ? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு கள் யாவை ? 10. நீரின்மீதோ அல்லது மெருகிட்ட பளபளப் பான மேற்பரப்பின்மீதோ சிலந்திப் பூச்சிகள் ஊர்தல் இயலாது என்ற மெய்ம்மையைப் பயன்படுத்துக. ஒரு சட்டியிலுள்ள தாவ சத்தை ஒரு பெரிய கிண்ண நீரிலோ அல்லது பளபளப்பான மேசையின்மீதோ நிறுத்துக. இரண்டு அல்லது மூன்று குச்சிகள் அல்லது அட்டைத் துண்டுகளை ஒன்று சேர்த்து அவற்றை யாதாவது ஒரு பல கோண வடிவ முள்ள அமைப்பாகக் கட்டி, அந்த அமைப்பின இந்தத் தாவரத்தின்மீது சாய்த்து வைத்திடுக. ஓர் உருண்டை வடிவச் சிலந்திப் பூச்சியைத் தாவரத்தின்மீது வைத்திடுக; அஃது ஒரு சிலந்தி வலையினை உண்டாக்கும். சிலந்திப் பூச்சிகளை உற்றுநோக்குதல் : ஒரு நிலையறைப் பெட்டியினின்றும் (cupboard) ஒரு சில தட்டுக்கள் அகற்றப்பெறக் கூடு மாயின் எபைரா டயா டெமாடா (பெண்) போன்ற ஒரு பெரிய சிலந்திப் பூச்சி அதில் ஒரு வலையைக் கட்டுமாறு தூண்டப்பெறலாம். சிலந்திப் பூச்சியுடன் கூ டி ய சி ல தாவரங்களைக் கொண்ட சட்டிகளை நிலையறைப் பெட்டிக ளில் வைத்துக் கதவினை மூடுக. சில மணி நேரம் கழிந்ததும் கதவினத் திறந்திடுக. இது வலையைச் சிதைத்தல் கூடும்; ஆளுல் கதவினைத் திறந்த நிலையில் வைத்திருந்தால், சிலந்தி தப்பித்துப் போவதற்கு விருப்பம் காட்டுவதில்லை; ஆளுல் அது மற்ருெரு வலையை அமைக்கும். போதுமான அளவு பூச்சிகள் பிடிக்கப்பெரு விடில், அதற்கு நீண்டகால் பூச்சிகள் (daddylong-legs) கம்பளிப் புழுக்கள், அந்துப் பூச்சி கள், ஈக்கள் முதலியவற்தைத் தந்தருள்க. வலைகட்டும் செயலை நன்கு கவனித்துத் தேதியைக் குறித்து வைக்கலாம்; உணவு அருந் துதல், வேறு பழக்கங்கள் போன்றவற்றையும் கால விவரங்களுடன் குறித்து வைக்கலாம். வலையுடன் கூடிய சிலந்தி ஒரு பெரிய இன்பழ ஊறல் சாடியில் வைக்கப்பெறலாம். அதன் மீதுள்ள கம்பிவலை ஈயினை வைத்து அதனைச் சில சமயம் உள்ளே நுழைப்பதற்குப் பயன்படுகின்றது. இடப்பெறும் முட்டைகளும் 58