பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவர்ச்சிகரமான உணவு அருந்தும் பழக்கங்க ளும் எளிதில் உற்றுக் கவனிக்கப்பெறலாம். 11. தவளைகளையும் தேரைகளையும் கவனித்தல் : தவளைகளும் தேரைகளும் ஒரு பழைய பற வைக் கூட்டில் வைக்கப்பெறலாம். சில தாவ ரங்களையும் மண்ணையும் கூட்டில் வைத்திடுக; ஒன்று அல்லது இரண்டு வெறுமையான தட்டுக் களை நீருக்காக அதில் வைத்திடுக. பின்னர் நீருள்ள ஒரு புட்டியினைக் கூண்டின் சிறிய கதவு வழியாக வைத்துத் தட்டினை நீரால் நிரப் புக. சிறிய மண் புழுக்களையும் ஈக்களையும் கொண்டு தவளைகட்கும் தேரைகட்கும் உணவு அருத்துக. மூச்சு வாங்கும் பொறியமைப்புக்கள், மூச்சு வாங் கும் வேகங்கள், உணவு அருந்தும் பழக்கங்கள் இவற்றைப்பற்றி மிகச் சரியான உற்றுநோக்கல் கள் மேற்கொள்ளப்பெறலாம். கூ ட் டி ன் நிறத் திண்மையை மாற்றி அப்பிராணிகளின் தோல் வண்ண மாற்றங்கள் உற்றுக் கவனிக் கப் பெறலாம். தவளைகட்கும் தேரைகட்கும் தொடர்ந்தாற் போல் நிழல் தேவைப்படுகின்றது; ஆகவே அவற்றைப் பிரகாசமான ஞாயிற்றின் ஒளியில் வைத்தல் கூடாது. தவளைகள் நீந்துவதற்குப் போதுமான நீர் கூட்டில் இருத்தல் வேண்டும்; விரும்பும்போது அவை தற்காலிகமாக ஒரு பெரிய குளத்திற்கு மாற்றப்பெற்று அவற்றின் நீந்தும் பழக்கங்களை நன்கு கவனிக்க வசதி செய்யலாம். தலைப்பிரட்டைகள் (tadpoles) கண்ணுடிச் சாடிகளில் வைக்கப்பெறலாம் ; ஆனல் அவற் றின் உருமாற்றம் நெருங்கும்பொழுது அவை ஆழங் குறைந்ததும் நடுவில் கற்குவியலைக் கொண்டுள்ளதுமான தட்டிற்கு மாற்றப்பெறு தல் வேண்டும். சிறிய தவளைகளை வைத்திருப் பது எளிதன்று; ஆகவே அவற்றைத் தப்பிப் போகும்படி விட்டுவிட்டு மேற்கூறியதைப் போலவே பெரிய தவளைகளை வைத்திருத்தல் மிகவும் நன்று. (துத்தநாகம் பூசப் பெற்ற பாத்திரங்கள் நீர். நில வாழ்வனவற்றிற்குப் பொருத்தமானவை அன்று.) - - பிராணியினப் அடிப்பு 12. எலிகளின் பாதுகாப்பு : கறுப்பு எலிகளும் வெள்ளை எலிகளும் உறுதி யான கம்பிவலை மூடிகளைக்கொண்ட துத்த நாகம் பூசிய பழைய தொட்டிகளில் வைக்கப்பெற லாம். எலிக்குஞ்சுகள் கம்பிவலையின் வழியாக மேலேறி அதன் உச்சியை விளையாடு களமாகப் பயன் படுத்திக் கொள்ளும். கம்பிவலை அமைப்பு தொட்டியின் பக்கங்களில் பல அங்குல நீளம் அதிகமாகத் தொங்கிளுல் எலிகள் கீழிறங்க இய லாது ; வேறு ஆதாரப் பொருளும் இல்லை. தொட்டியில் தூய்மையான மணலைக் குறைந்தது 8 செ. மீ. ஆழத்திற்குப் போடுக. இது நாடோ றும் மாற்றப்பெறுதல் வேண்டும். இஃது ஒடும் நீரால் முற்றிலும் நன்கு கழுவப்பெற்று, காற்றி ல்ை உலர்த்தப் பெற்று மீண்டும் பயன் படுத்தப் பெறலாம். வலையமைப்பதற்காக எலிகட்குத் தூய்மையான கந்தைகளைத் தந்திடுக. இவை கொதிக்கவைக்கப்பெறுதல் வேண்டும்; அல் லது விலக்கப்பெறுதல் வேண்டும். இவற்றிற்குப் பதிலாகக் கிழிந்த செய்தித் தாள்கள் பயன் படுத்தப்பெறலாம்; வாரந்தோறும் கூடு துப்பரவு செய்யப்பெறுங்கால் இது மாற்றப்பெறுதல் வேண்டும். கிட்டத்தட்ட எல்லாப் பொருள்களையும் எலி கள் தின்ருலும் அவைகட்குச் சீருணவு (balanced diet) தேவைப்படுகின்றது. கோதுமையுட னும் (அ ல் ல து ரொட்டி) உடைத்த ஒட் தானியத்துடனும் கூட அவை பயறுவகை, ஆளிவிதை (அல்லது கலவையான கிளிவிதை) போன்ற விதைகளையும், பால் அல்லது பால் தூளையும் விரும்புகின்றன. (குஞ்சுகளை ஈன்ற தாய் எலிகளையும் குஞ்சு எலிகளையும் தவிர ஏனை யவை திரவ நிலையிலுள்ள பாலையே நன்கு விரும்புகின்றன.) பச்சைப் பொருள்களையும் பழங்களையும், அல்லது புதிய காய்கறிவகைகளை யும் கூட அவை நாடோறும் பெறுதல் வேண் டும்; சிறிதளவு சோற்றுப்பு, விட்டமின்கள் ஆகியவையும் அவைகட்குத் தேவை. சூரிய காந்திப் பூவின் நாற்றுக்கள், பட்டாணிவகை கள், மொச்சை வகைகள் அல்லது கோதுமை ஆகிய வடிவில் இந்த விட்டமின்கள் அமைய லாம். வாரத்திற்கு இருமுறை சிறிதளவு இறைச் சியும் விரும்பத்தக்கது. r எலிகள் விரைவாக இனப்பெருக்கம் அடைவ தால் தொடக்கத்தில் ஓர் இணை எலிகளே போதுமானவை. . . 59