பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணியினப் படிப்பு அவை நன்ருக உணவூட்டப்பெற்றுப் பரி வுடன் கையாளப்பெற்ருல், அவை மிக நன்ருகப் பழக்கமானவையாகி விடும் ; பயமுறுத்தப்பெரு விட்டால் அவை கடிக்கா. அவை எப்பொழுதும் ஒரே மனிதர்களால்தான் கையாளப்பெறுதல் வேண்டும். வாலைக்கொண்டு ஓர் எலியைத் தூக்க முயலா தீர்கள் ; ஓர் எலியை ஒரு கையில்ை எடுக்க வேண்டுமாயின், அதன் முதுகின் குறுக்கே உள்ளங்கையை வைத்து, அதனுடைய தாடை யின்கீழ் பெருவிரலையும் கட்டு விரலையும் வைத்து, ஏனைய மூன்று விரல்களால் அதனைத் தாங்கிக் கொள்க. இதற்குப் பதிலாக, அதனுடைய உடலைச் சுற்றிலும் இரண்டு ைக க ளே யு ம் கிண்ணம்போல் வைத்துக்கொள்வது விரும்பத் தக்கது. பழக்கங்கள்பற்றியும் இனப்பெருக்கம்பற்றி யும் உற்றுநோக்கல்களை மேற்கொள்ளலாம். வளர்ச்சிபற்றிய குறிப்புக்களையும் வைத்துக் கொள்ளலாம். எலிகளின் எடையைக் காண் பதற்கென்று சிறப்பாக அமைக்கப்பெற்ற பெட்டியை வைத்துக்கொள்க. ஆழமான மூடி யுடன் கூடிய ஓர் அட்டைப் பெட்டி இதற்கு மிகவும் பொருத்தமானது. பெட்டியின் உச்சியில் காற்று செல்வதற்காகப் பல சிறு துளைகளை இடுக. பெட்டியில் சில சூரியகாந்தி விதைகளைப் (Helianthus seeds.) Gur@s; Ai arsó a sirĠsir நுழையும்பொழுது மூடியைப் போடுக. முதலில் பெட்டியுடன் சேர்த்து எலியின் எடையையும், அதன் பின்னர் பெட்டியின் எடையை மட்டிலும் காண்க. எடையை ஓர் அளவு கருவியாகப் பயன்படுத்தி உணவுபற்றிய எளிய சோதனைகள் மேற்கொள்ளப்பெறலாம். அவை ஓர் ஒழுங் கான முறைப்படி - வாரத்திற்கு ஒரு முறை - நிறுத்து எடை காணப்பெறுதல் வேண்டும். எலிகளைக் கொண்டு எளிய மெண்டலியன் சோதனைகள் மேற்கொள்ளப் பெறலாம். பிளந்து ஆய்வு செய்வதற்காக ஓர் எலி கொல்லப்பெறவேண்டுமாயின், அதை ஒரு பெட்டியில் அல்லது மரண அறையில் (lethal 60 chamber) வைத்து அதனுள் நிலக்கரி வாயுவைச் செலுத்தி இதனை நிறைவேற்றலாம். குளோ ரோஃபாரம் அல்லது ஈதர் போன்ற மயக்க மருந்தினையும் பயன்படுத்தலாம் ; ஆனால் அத் திரவம் அதன் உடலில் பட்டு அதற்கு வலி உண்டாகாதவாறு பார்த்துக்கொள்ளுதல் வேண் டும்; மூச்சுத் திணராமல் பாதுகாப்பதற்குப் போதுமான அளவு காற் று ம் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, எலியை அதன் முன்னங்கால்களிரண்டுடன் சேர்த்து ஒரு துடைப்பத் துணியில் சுற்றி, தலைகீழாகப் பிடித்துக்கொண்டு ஒரு சுத்தி அல்லது உறுதி யான கோலினக்கொண்டு அதன் காதுகளின் பின்புறத்தில் மிகப் பலமாக அடித்து அதனைக் கொல்லலாம், நீரில் ஆழ்த்திக் கொல்வதற்கு அதிகக் காலம் ஆகின்றது; அதனைத் தவிர்க்கக்கூடுமாயின் அம்முறையை மேற்கொள்ளாதிருத்தல் நன்று. அம்முறையைப் பயன்படுத்த வேண்டுமாயின், எலியுள்ள கூடு முற்றிலும் நீரில் அமிழ்ந் திருக்குமாறு அதனை ஆழ்த்துதல் வேண்டும். விறைத்த நிலை (rigor mortis) தெளிவாகக் காணப்பெருதவரை ஒரு பிராணியை இறந்து விட்டதாகக் கொள்ளக்கூடாது. இல்லாவிட் டால், இறந்ததுபோல் காணப்பெறும் ஒரு பிராணி பின்னர் விழிப்புள்ள நிலையினை அடை தல் கூடும். 13. எறும்புகளுக்குரிய உற்றுநோக்கல் கூட்டினை ஆக்குதல் : - எறும்புகளின் வாழ்க்கை வரலாற்றினை ஆய் வதற்குரிய உற்றுநோக்கல் கூடு அடியிற் கண்டவாறு எளிய முறையில் ஆக்கப்பெறலாம். 30 செ. மீ. நீளமும், 1.5 செ. மீ. சதுரமும் உள்ள மூன்று மரத் துண்டுகளினின்றும் ஒரு U-வடிவமுள்ள அமைப்பினை ஆக்குக. இதனை ஒரு வசதியான மரத்தாலான அடித்தளத்தின் மீது செங்குத்தாக ஏற்றி வைத்திடுக. இப் பொழுது 30 செ.மீ. x 33 செ. மீ. அளவில் கண்ணுடிச் செவ்வகங்களை வெட்டி அவற்றை U-வடிவ அமைப்பின் இருபுறங்களிலும் இரப்பர்ப் பட்டைகளைக் கொண்டோ அல்லது ஏதோ ஒரு வகை உலோக இடுக்கியினலோ இறுகப் பொருத்துக. . . . . . . விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு உச்சியில் நன்கு பொருந்தக்கூடிய மரத்தாலான