பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடி யொன்றினை ஆக்குக. உச்சியினின்றும் 5 செ. மீ. தூரத்தில் ஒரு பக்கத்தில் 0.5 செ. மீ. துளையொன்றினை இடுக; அதனைப் பஞ்சினைக் கொண்டு அடைத்திடுக. இந்தக் கூட்டினை அமைப்பதில் கண்ணுடிக் கிடையிலுள்ள இடத்தை மண்ணைக்கொண்டு நிரப்புவதே முதலாகச் செய்யப்பெறவேண்டிய தாகும். நீங்கள் எறும்புகளை எடுக்கும் புலத்தி லிருந்தே இந்த மண்ணும் எடுக்கப்பெறுதல் வேண்டும், மணற்பாங்கான மண்ணை உச்சியில் கொட்டி அதனை அடிக்கடி ஓர் உருளையினைக்கொண்டு தட்டுக ; பஞ்சினல் அடைத்த துளைவரையில் மட்டமாக மணல் நிரம்பட்டும். இப்பொழுது எறும்புகளைப்பற்றிக் கவனிப் போம் : இதற்குச் சிறிய கறுப்பு அல்லது சிவப்பு எறும்புகள் மிகவும் சிறந்தவை, அவை எங்கும் சமதளமான கற்களுக்கிடையேதான் தம் குடியேற்றங்களை அமைத்துக் கொள்ளுகின்றன. சமதளமுள்ள கல்லைத் துக்குக: எறும்புகள் இங்கு மங்குமாக ஓடுவதைக் காண்பீர்கள். பஞ்சு அடைப்பான்களிேக்கொண்டவையும் கு று கி ய கழுத்துள்ளவையுமான இரண்டு மருந்துப் புட்டி கள், தோட்ட வேலைக்குப் பயன்படும் ஒரு மண் வெட்டி, ஒரு வெள்ளைத் தாள் அல்லது ஒரு பெரிய தாள் ஆகியவை உங்கட்குத் தேவைப் படும். புட்டிகளை நிலத்தில் கிடத்தி அவற்றின் வாய்க்குச் செல்லுமாறு எறும்புகட்கு வழிகாட்டிக் கிட்டத்தட்ட நூறு எறும்புகள் வரையிலும் சேக ரித்திடுக ; அதன் பிறகு பஞ்சினைக்கொண்டு புட்டிகளின் கழுத்தினை மூடுக. அடுத்து நீங்கள் ஓர் இராணியைக் கண்டு பிடித்தல் வேண்டும். இதற்கு மண்வெட்டியைக் கொண்டு மிக ஆழமாக வெட்டி அந்த மண்ணே நிலத்தின்மீது கிடத்தப்பெற்றுள்ள வெள்ளைத் தாளின்மீது போடுக. உங்கள் விரல்களால் மண்ணை உடைக்கும்பொழுது ஏனையவற்றை விட ஓர் எறும்பு மிகப் பெரிதாக இருக்கக் காண் பீர்கள். இதுதான் இராணி ஈ ஆகும்; இஃது இரண்டாவது புட்டிக்குச் செல்வதற்கு வழி காட் ட வே ண் டு ம்; இதற்குச் சிறிதளவு பொறுமை வேண்டும். உற்றுநோக்கல் கூட்டிற்குள் எறும்புகளைக் கொள்ள வேண்டுமாயின், ஒரு பெரிய தட்டில் நீரை நிரப்புக ; அதன் நடுவில் தலைகீழாகக் கவிழ்க்கப்பெற்ற உண்கலம் ஒன்றினை வைத்து பிராணியினப் படிப்பு ஒரு தீவாக்குக; இத்தீவினின்றும் எறும்புகள் தப்பிச் செல்ல இயலாது. தட்டின்மீது உற்று நோக்கல் கூட்டினை வைத்து அத்தட்டின்மீதோ அல்லது நேராக எறும்புக் காட்சிப் பெட்டியின் (formicarium) உச்சியின்மீதோ எறும்புகளை விடுவித்திடுக; இராணி ஈ உள்ளிருந்தால், ஏனையவை கதவின் வழியாக அதனைப் பின் தொடரும். எறும்புகள் பகல் ஒளியை விரும்பாவாகலின், துளையை அடைத்து விடுக; பெட்டியின்மீது ஒரு தவிட்டு நிறத் (brown) தாள் உறையைக் கொண்டு போர்த்தி அந்தக் கூட்டினை அதன் நிரந்தர உறைவிடத்திற்கு மாற்றுக. கதவிற்குச் சற்று உட்புறமாகக் கண்ணுடியில் தடவிய சிறிதளவு தேன் அதற்கு ஏராளமான உணவாக அமையும் ; ஊற்றுப் பேணுவிற்கு மை ஊற்றும் கருவியினுல் சிற்சில சமயங்களில் தெளிக்கப்பெறும் நீர் மண்ணை ஈரமாக வைத் திருக்கத் துணை செய்யும். - கூட்டினுள் நடைபெறும் கிளர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், முட்டைகளை யிடுதல், உழைப் பாளிகள் செயற்படுதல், எறும்புகளில் ஒன்று மற்ருென்றினுடைய தலையைத் தம்முடைய உணர்கொம்புகளினுல் தட்டிக் கொண்டு பேசிக் கொள்ளும் முறை ஆகியவற்றை எறும்பு களைத் தொந்தரவு செய்ய த செயற்கை மு ைற ஒளியில் ஆராய ப் பெ று த ல் கூடும்; கண்ணுடிக்கு இணையாகக் குடைந்து செல்லும் பாதைகள் அமைந்திருப்பதால் இவை யாவற்றையும் எளிதில் பார்த்தறிதல் கூடும். ஒரு சில எறும்புகளை அகற்றுதல், மீண்டும் அவற்றைக் கொணர்தல்; புதிய எறும்புகள், பச்சை ஈக்கள், சிலந்திகள் முதலியவற்றை 61