பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றன. மெதுவான நீர்த்தாரையால் கண்ணுடிப் பாத்திரத்தை நிரப்பி அது தெளிவாகும் வரை ஒன்றிரண்டு நாட்கள் அப்படியே விட்டு வைத் திடுக, தூய்மையான நீர்த் தாவரங்கள் நுழைக் கப்பெறுதல் வேண்டும். ஏராளமான நீர்க் களைகள் (water weeds) இருப்பின் விரிவான காற் றுரட்டும் ஏற்பாடுகள் தேவையில்லை. குழாய் நீர் பயன்படுத்தப்பெற்ருல் டாஃப்னியா (daphnia) போன்ற உயிருள்ள உணவு சேர்க்கப்பெறுதல் வேண்டும், புல்லைத் துப்புரவாக வைத்துக் கொள்வதற் காக ஒரு சில நத்தைகளுடன் இப்பொழுது பிராணிகள் நுழைக்கப் பெறலாம். மிகக் குறை வான உணவூட்டலே தேவைப்படும். மீன்கள் நத்தைகளின் முட்டைகளை உண்ணும்; போது மான அளவு சிறிய் நீர்வாழ் உயிரிகள் வேறு தேவைகளை அளிப்பதற்கு ஒரு சராசரி குளத்தில் காணப் பெறுதல் கூடும். புழுக்கள் உணவாகப் பயன்படுத்தப் பெற்ருல் அவை உண்பதற்கேற்ற வாறு சிறிய துண்டுகளாக நறுக்கப்பெற்ற பிறகே வாரத்திற்கொரு முறை அளிக்கப்பெறு தல் வேண்டும். உண்ணப் பெருத உணவு ஏதா வது இருப்பின் அஃது உடனே அகற்றப்பெறு தல் வேண்டும் ; இல்லாவிட்டால் காளான் வளர்ந்து மீன்களுக்குத் தொற்று நேரிடும். காட்சிப் பொருட் கண்ணுடித் தட்டினலோ அல்லது துளைகளிடப் பெற்ற துத்தநாக மூடியினலோ மூடப்பெற்றுத் தூசுகள் படாமல் பாதுகாக்கப்பெறுதல் வேண் இந்தப் பெட்டி ஒரு டும். தவளைகள் அல்லது பல்லியின் வகைகள் (newts) வைக்கப் பெற்ருல், அவை உட்கார்வ தற்காக மிதக்கும் தக்கைத் துண்டொன்று அளிக்கப்பெறுதல் வேண்டும்; கண்ணுடி அல் லது துத்தநாகமூடி அவை தப்பிப் போகாத வாறு தடுத்து நிறுத்தும். - 16. பழ ஈக்களின் வாழ்க்கை வட்டத்தை உற்று நோக்கல்: சிறிய கண்ணுடிச் சாடிகள் பழ ஈக்களுக்கு மிகச் சிறந்த இயல்பான இருப்பிடங்களாக பிராணியினப் அடிப்பு அமைகின்றன. சாடியின் அடிமட்டத்தில் பழுத்த பழத்துண்டினை வைத்திடுக; புட்டியின் வாய்க்குப் பொருந்தக்கூடியவாறு கோடியில் துளையுள்ள ஒரு காகிதப் புனலைச் செய்திடுக. புட்டியை வெட்ட வெளியில் வைத்திடுக. ஆறு அல்லது எட்டு பழ ஈக்கள் நுழைந் தவுடன் புனலை அகற்றி தளர்ச்சியாக இருக்குமாறு பஞ்சினைக்கொண்டு புட்டியின் வாயினை அடைத்திடுக. இந்த எண்ணிக்கை ஈக்களில் ஆண் ஈக்களும் பெண் ஈக்களும் இருத் தல் வேண்டும். பெண் ஈக்கள் அகன்ற வயிற் றுடன் பெரியனவாக இருக்கும். ஆண் ஈக்கள் சிறியனவாகவும் கறுப்பு முனையுடன் கூடிய வயிற்றைக் கொண்டும் இருக்கும். 1. காகிதப் புனல் : னின்றும் வெளிவந்த புழுக்கள் : பருவப் புழுக்களும் இளம் பருவப் பூச்சிகளும், 2. முட்டிைகள் : 3. முட்டிையி 4. பஞ்சு : 5. துயிற் விரைவில் முட்டைகள் இடப்பெறும் ; இரண்டு அல்லது மூன்று நாட்களில் முட்டை களினின்றும் புழுக்கள் பொரிக்கப்பெறும். புழுக் கள் துயிற் கூடுகள் அமைப்பதற்குத் தயாராக இருக்கும்பொழுது அவை ஊர்ந்து செல்வதற் காகச் சாடியில் ஒரு காகிதத்துண்டு வைக்கப் பெறலாம். துயிற்பருவப் புழுக்களினின்றும் வளர்ந்த ஈக்கள் வெளி வரும். புதிதாகப் பொரிக்கப்பெற்ற ஈக்களை மற்ருெரு சாடியில் விட்டு ஒரு புதிய தலைமுறை தொடங்கப்பெற லாம். 17. கோழி முட்டைகளின் அடைகாத்தல்: உங்கள் வகுப்பறையில் மின்சாரம் கிடைக்கு மாயின் மிகக் குறைந்த செலவில் ஓர் எளிய அடைகாக்கும் கருவி இயற்றப் பெறலாம். ஒன்று பெரியதும் மற்ருென்று சிறியதுமாக இரண்டு அட்டைப் பெட்டிகளைக் கைவசப் படுத்துக. சிறிய பெட்டியினின்றும் ஒரு கோடியை வெட் டுக; பெரிய பெட்டியின் ஒரு பக்கத்தில் 15 செ.மீ. சதுரமுள்ள ஒரு சாளரத்தை வெட்டுக. அடுத்து, 63