பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணியினப் கடிப்பு சிறிய பெட்டியின் உச்சியில் ஒரு நீளப் பிளவினை (slit) வெட்டி அதில் ஒரு மின்விளக்கினைத் தொங்கவிடுக. விளக்கிற்கு ஒரு நீண்ட மின் சாரக் கயிறு (electric cord) இணைக்கப் பெறுதல் வேண்டும். சிறிய பெட்டியைப் பெரிய பெட்டியினுள் வைத்து அவற்றிற்கிடையே எல்லாப் பக்கங் களிலும் துண்டு துண்டுகளாக்கப்பெற்ற செய் தித்தாளைக் கொண்டு நெருக்கமாக அடைத் திடுக. சிறிய பெட்டியின் திறந்த கோடி பெரிய பெட்டியின் பக்கவாட்டில் வெட்டப் பெற் றுள்ள சாளரத்தில் பொருந்துவதை உறுதிப் படுத்திக் கொள்க. பெட்டியில் ஒரு வெப்ப மானியை வைத்திடுக; சாளரத்தின் வழியாக வெப்பமானியின் அளவுகளைப் பார்க்கக்கூடிய வாறு அஃது அமைந்திருக்கட்டும். சாளரத்திற்கு மேல் ஒரு கண்ணுடித் தட்டு பொருத்தப்பெறு கின்றது. 4 J 5 9 : ? குறுக்கு வெட்டுத் தோற்றம் 1. சிறு யெட்டி : காப்புறை : பெட்டி : 2. முகப்பு : 4. வெப்பமானி : 7. முகப்பு : 3. செய்தித் தாள் 5. நீர் : 6. பெரிய 8. முட்டைகள் : 9. கண்ணுடி. இப்பொழுது நீங்கள் சோதனை செய்யத் தொடங்குவதற்கு ஆயத்தமாக இருக்கின்றீர்கள். 21 நாட்களுக்கு இரவிலும் பகலிலும் ஒரே மாதிரியாக மாருத 103°F. (40°C) வெப்பநிலை இருக்கவேண்டியது.இன்றியமையாததாகின்றது. வெவ்வேறு மின்குமிழ்களைப் பயன்படுத்தியும், செய்தித்தாளின் அளவினை மாற்றியும் ஒரு சில நாட்கள் கழித்து நீங்கள் உங்கள் அடைகாக்குங் கருவியை இந்த வெப்பநிலைக்கு ஒழுங்கு படுத்தக் கூடிய நிலையிலிருப்பீர்கள். அ டை கா க்கும் கருவியினுள் ஒரு சிறிய தட்டில் நீர் வைக்கப் பெறுதல் வேண்டும். இப்பொழுது பன்னிரண்டு வளமான முட்டை களைக் கைவசப் படுத்துங்கள். முட்டைகளை அடைகாக்குங் கருவியில் வைத்து அப்படியே விட்டுவிடுங்கள். மூன்ரும் நாள் இறுதியில் அந்த முட்டைகளில் ஒன்றினை அகற்றி அதனைக் கவனமாகச் சிறிது பிளக்குமாறு செய்யுங்கள். அதிலுள்ள பொருள்களை ஒர் ஆழங்குறைந்த சாறுணும் தட்டில் குவியலாகப் போடுங்கள். மூன்று நாள் முதிரா நிலைக் கருவில் (embryo) சாதாரணமாக இதயம் துடிப்பது காணப் பெறும். அஃது அரை மணி நேரம் தொடர்ந்து துடிக்கலாம். மூன்று நாட்களுக்கொரு முறை ஒவ்வொரு மு ட் ைட ைய யு ம் அ. க ற் றி மு தி ரா நி லை க் கரு வளர்ச்சியினை உற்று நோக்குக. சில முட்டைகள் 21 முழுநாட்கள் வரையிலும் விட்டுவைக்கப் பெற்று அவை குஞ்சு பொரிக்கப் பெறுகின்றனவா என்பதைக் காண லாம். 18. பாம்புகள்: நச்சுப் பாம்புகளல்லாத பாம்புகள் உற்று நோக்கலின்பொருட்டு வகுப்பிற்குக் கொண்டு வரப் பெறலாம். பாம்பினை வைத்துக் கொள்வ தற்கு ஒரு பாதுகாப்பான கூடு அமைக்கப்பெற 1. செங்கற்கள் அல்லது கற்கள் : 2. சாளர வலை ; 3. மரச் சட்டிம் : 4. கற்கள் : 5. கவைக் கிளை : 6. கண்ணுடியாலான .ெ ரு ட் கா ட் சி ப் செ ட் டி: 7. சரளை 8. நீர்த் தட்டு. லாம் என்பதை விளக்கப்படம் காட்டுகின்றது. கூட்டின் அடிமட்டம் மணலாலும் சரளைக் கற்க ளாலும் மூடப்பெறுதல் வேண்டும். கூட்டினுள் ஆழங்குறைந்த தட்டில் நீர் வைக்கப் பெறுதல் வேண்டும். சில கற்களும் கவையுள்ள கிளையும் கூட்டினுள் இருப்பது விரும்பத்தக்கது. ஒரு 64