பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 5 பாறைகள், மண்கள், தாதுப் பொருள்கள், தொல்லுயிர்ப் பதிவுகள் இவற்றின் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் பாறைகள், மண்கள், தாதுப் பொருள்கள், தொல்லுயிர்ப் பதிவுகள் இவை யாவும் எப் பொழுதும் கவர்ச்சி தரக்கூடியவையாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவற் றின் மாதிரிகள் காணப்பெறுமாதலின், அறிவி யல் பயிற்றலில் அவை முக்கியமான பங்கினைப் பெறுகின்றன. மாளுக்கர்களால் கொணரப் பெறும் ஒவ்வொரு சோதனைப் பொருளின் பெய ரையும் ஆசிரியர் சொல்ல வேண்டுவது இன்றிய மையாதது என்று கருதவேண்டா ; அங்ங்னம் இனம் பிரித்துக் கூறலும் பெயர் சொல்லுதலும் அத் துறையில் பயிற்சி பெற்ற நில உட்கூற்றி பல் நிபுணரின் பணியாகும். துறைப் பெயர்களில் ytechnical terms) fáfâ Glasrsi sırrıpĞsoGu பாறைகளைப் பற்றியும் தாதுப் பொருள்களைப் பற்றியும் அதிகமாகக் கற்றுக் கொள்ளுதல் கூடும். பாறைகள், தாதுப் பொருள்கள் இவை பற்றி அதிகப் படியான தகவல்கள் வேண்டு மாயின் பின்னிணைப்பு 3-ஐப் பார்க்க. சில பாறைகள் கரடு முரடாகவும் பொடிக் கற்களையுடையனவாகவும் உள்ளன; அவை மணல் துணுக்குகளால் இணைந்தவை போலக் காணப் பெறுகின்றன. அத்தகைய பாறைகட்கு மணற்கல்’ என்பது நல்ல பெயராகும். வேருெரு தொகுதிப் பாறைகள் கருங்கல் போல் நுண்ணிய புள்ளிகள், படிகங்கள் ஆகியவற்ரு லானவைபோலக் காணப்பெறுகின்றன. இந்தப் பாறைகள் கருங்கல் போன்ற பாறைகள் என வழங்கப் பெறலாம். கற்பலகை, சுண்ணும்புக்கல், மெல்லிய அடுக்குகளாலான களிமண் பாறை (shale) ஆகியவை சாதாரணமாகக் காணப் பெறும் வேறு பாறைகள் ஆகும்; இறுதியில் குறிப்பிடப்பெற்ற பாறை .ெ ப. ரு ம் படா லு ம் நீரோடைகளின் கரை யோரங்களில் காணப் பெறுகின்றன. இந்த எளிய சொற்களஞ்சியம், துறைவகையில் மு ற் று ப் பெ ரு திருப்பினும், சாதாரணமாகக் காணப்பெறும் பெரும்பாலான பாறைகளை அடையாளங் காணவும் வகைப் படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகப் பாறைகள் அவை அமையும் முறைகளேயொட்டி மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பெறுகின்றன. 1. படிவுப் பாறைகள் என்பவை ஆறுகளால் கிடத்தப்பெறும் சேறு, வண்டல் மண் ஆகிய வற்றிலிருந்து நீரின்கீழ் உண்டாயினவை யாகும் இந்த வகைப் பாறைகள் பெரும்பாலும் அடுக்குகளாகக் காணப்பெறுகின்றன. களிமண் பாறை, சுண்ணும்புக் கல் ஆகியவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாகும். 2. திப் பாறைகள் என்பவை உருகிய பொருள் கள் குளிர்ந்ததால் உண்டாயினவையாகும். எரிமலைப் பாறை, படிகப்பாறை, அப்பிரகம் ஆகியவை தீப் பாறைகட்கு நல்ல எடுத்துக் காட்டுக்களாகும். 3. உருமாறிய பாறைகள் என்பவை படிவுப் பாறைகள், தீப்பாறைகள் என்ற இரண்டு வகை களினின்றும் மிக அதிகமான வெப்பம், அமுக் கம் இவற்றின் காரணமாகத் தோன்றியவை யாகும். சுண்ணும்புக் கல்லினின்றும் உண்டான சலவைக்கல், க ளி ம ண் பாறையினின்றும் உண்டான கற்பலகை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுக்களாகும். A. பாறைகளும் தாதுப்பொருள்களும் 1. பாறைச் சேகரம் செய்தல்: ஒவ்வொரு மாளுக்கனையும் ஒரு பாறைத் துண் டி&னக் கொண்டுவருமாறு செய்து ஒரு சமூகத் தினிடையே காணப்பெறும் சாதாரண பாறை களைச் சேகரம் செய்யலாம். எல்லாப் பாறை களின் பெயர்களையும் தெரிந்து கொள்ள வேண் டிய இன்றியமையாமை இல்லை என்பதை மாளுக்கர்கட்கு விளக்குக. ஒரே மாதிரியான சோதனைப் பொருள்கள் ஒருசேர ஒரு மேசை யின்மீது வைக்கப்பெறலாம். வடிவம், வண் ணம், வேறு சிறப்பியல்புகள் இவற்றின் வேறு பாடுகளை அடிப்படையாகக்கொண்டு சேகரிக் 66