பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:A, பாறைகளும் தாதுப்பொருள்களும் 7. ஒரு பெருக்காடியினைக்கொண்டு மணலைச் சோதித்தல் : ஒரு சிறிய அளவு மணலை ஒரு பெருக்காடியி னைக் கொண்டு அல்லது நுண்பெருக்கி (microscope) கிடைத்தால் அதன்கீழ் வைத்துச் சோதித் திடுக. கிட்டத்தட்ட நிறமற்றவையாகவுள்ள படி கங்கள் பூமியில் எங்கும் சாதாரணமாகக் காணப் பெறும் குவார்ட்டுசு' என்று வழங்கப்பெறும் தாதுப்பொருளின் படிகங்களாகும். வேறு தாதுப்பொருள்களின் படிகங்களும் மணலில் காணப் பெறும். வேறு ஏதாவது படிகங்களைக் கண்டறிய மு டி கி ன் ற த என்பதையும் காணுங்கள். - 8. பாறை', "தாதுப்பொருள் இவற்றின் பொருள்: சேகரஞ் செய்யப்பெற்ற சோதனைப் பொருள் களை ஆராய்வதன் மூலமாகவே இந்த இரண்டு துறைச் சொற்களின் (terms) பொருளை விரிவு படுத்துக: ஒரு பாறை பூமியில் பேரளவுகளில் காணப்பெற்ருல் அது வழக்கமாக தாதுப் பொருள் என்றே வழங்கப்பெறுகின்றது. சில வகைப் பாறைகள் ஒர் ஒற்றைத் தாதுப் பொரு ளால் ஆக்கப் பெற்றிருப்பினும், பெரும்பாலான பாறைகள் தாதுப் பொருள்களின் கலவைகளே யாகும். பூமியில் இயற்கையாகக் காணப்பெறும் பொருளே தாதுப்பொருளாகும்; அந்தத் தாதுப் பொருள் ஒரு திட்டமான வேதியியல் இயை 17&srujo (chemical composition) of sorášjā குரியனவும் தனிப்பட்ட இயல்புடையனவுமான பண்புச் சிறப்புக்களையும் பெற்றுள்ளன. 9. ஒரு கற்சுரங்கத்திற்குச் சிறுதொலைப் பயணம் : ஆசிரியரால் கற்சுரங்கம் முன்னதாகவே பார் வையிடப் பெறுதல் வேண்டும். பாறை எவ்வாறு அகற்றப் பெறுகின்றது என்பதை உற்றுநோக் குக. பாறை படிவுப் பாறையாக இருப்பின், அடுக்குகளை உற்று நோக்குக. வகுப்பு அறைக் குத் திரும்பவும் கொண்டு சென்று ஆராய்வதற் காகப் பாறை மாதிரிகளைச் சேகரஞ் செய்க, ஏதா வது தாவரங்கள் அல்லது பிராணிகளின் தொல் லுயிர்ப் பதிவுகள் இருக்கின்றனவா என்பதைக் கவனமாக நோக்குக. திறந்த வெளியில் வெட்டப்பெற்ற அல்லது பிதுக்கமாகவுள்ள பாறை யொன்றினுக்கோ அல்லது அண்மை யில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருப்பின் அதற்கோ, ஒரு சிறு தொலைப் பயணம் திட்ட மிடப் பெறலாம். | 10. பா ைற யை யும் தாதுப் பொருள்களையும் சட்டத்தில் ஏற்றி யமைத்தல் : . . . பாரிஸ் காரையினைக் கொண்டு ஓர் அடித் தளத்தை அமைத்து அதில் பாறைகள், தாதுப் பொருள்கள் இவற்றின் மாதிரிகள் சேகரஞ் செய் வதற்காக ஒழுங்கான முறையில் ஏற்றி வைக்கப் பெறலாம். வெள்ளைத் தூள் நீருடன் கலக்கப் பெற்று ஒரு கெட்டியான கூழாகச் செய்யப்பெறு கின்றது. இந்தப் பசை கிட்டத்தட்ட 1 செ. மீ. ஆழ முள்ளதும் அரக்குத் தாள் உள்ளமைத்தோ அல்லது கொழுப்பு எண்ணெய்ப் பசை உள்ளே தடவப்பெற்ருே உள்ளதுமான ஒரு தகரக் குவளையின்மீது வைக்கப்பெறுகின்றது. இந்தப் பசை இறுகுவதற்கு முன்னர்ச் சிறிய பாறை அல்லது தாதுவின் மாதிரிப் பொருள் அதன் மேற்பரப்பின்மீது போதுமான அளவு அமுக்கப் பெறுகின்றது; இதல்ை அஃது உறுதியாகப் பற்றப்பெறுவதுடன் நன்ருகப் பார்க்கப்பெறு வதற்கும் ஏற்றதாக அமைகின்றது. பொருளின் பெயர் வெள்ளேயான அடித்தளத்தின்மீது அச் சிடப் பெற்று அதன் பிறகு அந்த அடித்தளம் தெளிவான அரக்கு அல்லது மினுக்கெண்ணெ" யால் பூசப்பெறலாம். B. செயற்கையான பாறைகள் 1. சீமைக்காரையும் சீமைக்காரைக் கட்டும் : ஒரு சிறிய பை போர்ட்லாந்து சீமைக் காரை யைக் (cement) கைவசப் படுத்துக. மாளுக்கர் களைக்கொண்டு அதனை நீருடன் கலக்கச் செய்து அக்கலவையைத் தகரக் குவளை மூடிகள், காகிதக் கிண்ணங்கள், அல்லது சிறிய பசைப் பலகைப் பெட்டிகள் இவற்றில் அது கெட்டி யாகும் வரையில் போட்டு வைத்திடுக. அதனு

○ டைய தோற்றத்தையும் அதனுடைய பண்பு களையும் ஆராய்க. ஒரு துண்டு சீமைக்காரையை உடைத்து அதனை ஆராய்க. உலர்ந்த சீமைக் காரையை அதுபோல் இரண்டு மடங்கு அள வுள்ள மணல் அல்லது சரளைக் கற்களுடன் கலந் திடுக. இது சீமைக்காரைக் கட்டு (concrete) ஆகின்றது. நீரைச் சேர்த்து அதனை மிக நன்ருகக் கலந்த பிறகு, அதனை வார்ப்பட 8