பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்களில் (moulds) வைத்திடுக. இவற்றைப் பல நாட்கள் அப்படியே விட்டு வைத்திடுக. மீண்டும் இந்த மாதிரிப் பொருள்களின் தோற் றத்தையும் சிறப்பியல்புகளையும் ஆராய்க. 2. பாரிஸ் காரை : சிறிதளவு பாரிஸ் காரையைக் கைவசப் படுத்துக ; அதில் ஒரு சிறு பகுதியை நீருடன் கலந்திடுக. அவை கலக்கப்பெறுங்கால் வேக மாகச் செயற்படுதல் வேண்டும்; இல்லையாயின் அது கெட்டியாய் விடும். இந்தக் கலவையை வார்ப்பு அச்சுக்களில் வைத்திடுக; அது மிகக் கெட்டியாகும் வரையில் அப்படியே உறையட்டும். சுண்ணும்புக் கல், செங்கல் , B. செயற்கையான பாறைகள் இந்த மாதிரிப் பொருள்களின் தோற்றத்தையும் பண்புகளையும் ஆராய்க. - 3. கட்டடப் பொருள்களைச் சேகரித்தல் : உங்களுடைய ஊர்ப்புறத்தில் கிடைக்கக் கூடிய சலவைக் கல், கருங்கல், கற்பலகை, சீமைக் காரை, காரை முதலியவை போன்ற வெவ்வேறு வகைப் பொருள்கள் யாவற்றின் மாதிரிகளையும் சேகரித் திடுக. இந்த மாதிரிப் பொருள்களுடன் பொருத்தமான பெயர்ச் சீட்டுக்கள் இணைக்கப் பெற்ற பிறகு அவை உங்களுடைய சேகரித்த தொகுதியுடன் சேர்க்கப் பெறலாம். C. தனிமங்களும் கூட்டுப்பொருள்களும் 1. தனிமங்களின் தொகுதி : தனிமங்களின் பட்டியல் ஒன்றினை வாங்கி உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கைப் பொருள்களின் மாதிரிகளைத் திரட்டுக. இங்குக் கூறப்பெறும் பொருள்களின் மாதிரிகளை நீங்கள் அடைதல் கூடும்: இரும்பு, அலுமினியம், துத்தநாகம், வெள்ளியம், தாமி ரம், காரீயம், பொன் (தங்கம்), வெள்ளி, பாத ரசம், கந்தகம் ஆகியவை. பின்னிணைப்பு 3-ஐப் பார்க்க. 2. சாதாரண வேதியியற் கூட்டுப்பொருள்களின் தொகுதி : உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கை சாதாரண வேதியியற் கூட்டுப் பொருள்களின் மாதிரிகளைத் திரட்டுக. அடியிற் கண்டவற்றைக் கருத்தேற்றங்களாகக் கொள்க : சோற்றுப்பு, சருக்கரை, மாவுப்பொருள், சோடா, தாமிர சல்ஃபேட்டு, சலவைச் சுண்ணும்பு, பாரிஸ் காரை, இரப்பர், கம்பளம், பஞ்சு முதலியவை. D. ஒரு மாதிரி - எரிமலையை அமைத்தல் ஒரு வேதியியற் பொருட்சாலையினின்றும் 500 கிராம் அம்மோனியம் பைக்குரோமேட்டு, 125 கிராம் மெக்னிஷியம் தூள், 30 கிராம் மெக்னிஷி யம் நாடா ஆகியவற்றைக் கைவசப் படுத்துக. இந்தப் பொருள்களின் மொத்த விலை கிட்டத் தட்ட ரூ. 12-00 ஆகலாம்; இவை 30 லிருந்து 40 வரை எண்ணிக்கையுள்ள எரிமலை வெடித் தல்களை உண்டாக்குவதற்குப் போதுமானவை யாகும். --- - - - - .. - - - - - குழந்தைகளைக்கொண்டு சிறிதளவு சாதா ரணக் களிமண்ணைத் திரட்டிக் கொணர்க. ஒரு பலகையை அடித்தளமாக வைத்து களிம்ன்ணைக் கொண்டு 30 செ. மீ. உயரமுள்ளதும் அடித் தளத்தில் 60 செ.மீ. குறுக்களவுள்ளதுமான ஓர் எரிமலைக் கூம்பினை (cone) அமைத்திடுக. ஒரு துடைப்பக் குச்சியினைக் லிருந்து 5-7 செ. மீ. ஆழத்திற்குச் செலுத்துக. ஒரு துண்டுக் காகிதத்தில் கூம்பிலுள்ள துளை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நிரம்பும் அளவிற்குப் போதுமான அம்மோனியம் பைக் குரோமேட்டினைக் கொட்டுக. படிகங்களை அரைத்தல் வேண்டா. கட்டிகள்தாம் நன்கு செயற்படுகின்றன. சிறிதளவு மெக்னீஷியம் துளை ப்ைக்குரோமேட்டுப் படிகங்களுடன் கலந்து ஒரு பென்சிலைக் கொண்டு. மிகக் கவன மாகக் கிளறி விடுக. இக்கலவையில் கிட்டத்தட்டப் பாதி அளவினை எரிமலையின் கூம்பினுள் கொட்டுக. 7.5 செ. மீ. நீளமுள்ள மெக்னிஷியம் நாடாவினை வெட்டி அதன் ஒரு முனையைக் கூம்பிலுள்ள கலவையி னுள் செலுத்துக, அதன் மற்ருெரு முனை உச்சியில் ஒட்டிக் கொண்டு வெடிமருந்து வத்தி யாகச் செயற்படட்டும்.மெக்னீஷிய நாடாவினை ஒரு தீக்குச்சியினைக் கொண்டு தீப்பற்றச் செய்து 69.