பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதிரி மண்களைத் தனித்தனியான பூஞ்சட்டிகள் அல்லது கண்ணுடிச் சாடிகளில் போடுக. ஒவ் வொரு வகை மண்ணிலும் விதைகளை நட்டு ஒவ் வொன்றுக்கும் ஒரே அளவு நீர் ஊற்றுக. எந்த வகை மண்ணில் விதைகள் முதலில் முளைவிடு கின்றன என்பதை உற்று நோக்குக. இந்தச் செடிகள் வளரத் தொடங்கியதும், அவை மிக நன்ருக வளரும் மாதிரி மண்ணை உற்று நோக்குக. - 8. மண் நீரினைக் கொண்டிருக்கலாம் எனக் காட்டுதல் : சிறிதளவு மண்ணை ஒரு மெல்லிய கண்ணுடித் தட்டில் வைத்து அதனை எச்சரிக்கையுடன் ஒரு சிறிய சுவாலையில் சூடாக்குக. அதனை ஒரு கண்ணுடிச் சாடியால் மூடுக ; குளிர்ந்த அதன் பக்கங்களில் நீர்த்துளிகள் காணப்பெறுவது உற்றுநோக்கப் பெறலாம். 9. மேல்மண்ணுக்கும் அடிமண்ணுக்கும் இடையே யுள்ள வள வேற்றுமையை ஆராய்தல் : ஒரு பூந்தோட்டத்திலிருந்து நல்ல மேல் மண்ணின் மாதிரியைக் கைவசப்படுத்துக. அங்குக் கிட்டத்தட்ட 50 செ. மீ. ஆழத்தில் மற்ருெரு மாதிரி மண்ணைக் கைவசப் படுத்துக. இந்த மாதிரி மண்களைத் தனித்தனிப் பூஞ்சட்டி களில் போட்டு ஒவ்வொன்றிலும் விதைகளை நடுக. ஒவ்வொரு மாதிரிக்கும் நீரின் அளவு, வெப்ப அளவு, ஒளியின் அளவு இவை சமமாக இருக்குமாறு செய்க. எந்த மண் வளமான தாவரங்களைத் தருகின்றது என்பதைக் காண்க. 10. பருப்பு வகைத் தாவரங்களின் வேர்களில் நைட்டிரஜனைக் கவரும் பாக்டீரியா முடிப்புக் களின் இருப்பினைக் காட்டுதல் : மணப்புல், ஆல்ஃபால்ஃபா, மொச்சை வகை கள், பட்டாணி வகைகள் முதலிய சில பருப்பு வகைத் தாவரங்களைப் பாதுகாப்பாக மண்வெட்டி யால் தோண்டி எடுத்திடுக. நீரால் கழுவி வேர்களினின்றும் மண்ணினை அகற்றுக சிறிய வெள்ளை முட்டுகள் அல்லது முடிப்புக்கள் வேர் களிலிருப்பதை உற்று நோக்குக, நைட்டி ரஜனைக் கவரும் பாக்டீரியா இந்த முடிப்புக் களினுள் உள்ளன. இந்தப் பாக்டீரியா காற்றி னின்றும் நைட்டிரஜனை அகற்றி தாவரங்கள் மண்ணின்றும் அதனை அடைவதற்குத் துணை யாக இருக்கக்கூடிய உருவத்தில் நிலைநிறுத்து கின்றது. .ே மண் 11. நீர் எவ்வாறு தந்துகித் தன்மையால் (capillarity) மேலேறுகின்றது என்பதைக் காட்டுதல் : ஒர் ஆழமற்ற தட்டிலுள்ள நீரை மையில்ை நிறமூட்டி ஒரு மையொற்றுத் தாளைக்கொண்டு நீரின் மேற்பரப்பைத் தொடுக. மையொற்றுத் தாளில் நீர் எங்ங்ணம் மேலேறுகின்றது என் பதை உற்றுநோக்குக. ஒரு சருக்கரைக் கட்டியைக்கொண்டு நீரின் மேற்பரப்பினைத் தொட்டு நீர் எங்ங்னம் மேலேறுகின்றது என்பதை உற்றுநோக்குக. ஒரு விளக்குத் திரியை நீரில் வைத்து உற்று நோக்குக. 12. மெல்லிய குழல்களில் எங்ங்ணம் நீர் மேலேறு கின்றது என்பதைக் காட்டுதல் : கண்ணுடிக் குழலை ஒரு சுவாலையில் சூடாக்கி அதனை இழுத்துப் பல மயிர் போன்ற, அல்லது நுண்ணிய சில குழல்களைச் செய்திடுக. அக் குழல்களை வெட்டிக் கிட்டத்தட்ட 5 செ. மீ. நீளம் ஒரத்திற்குக் கீழ் நீட்டிக் கொண்டிருக்கு மாறு ஓர் அட்டைத் துண்டில் ஒட்டுக. இந்தக் குழல்களின் நுனிகளை நிறமூட்டப் பெற்ற நீரில் வைத்து தந்துகிக் கவர்ச்சியின் விசை எங்ங்னம் நீர் மேலேறுவதற்குக் காரணமாகின்றது என் பதை உற்று நோக்குக. 13. எங்ங்ணம் நீர் வெவ்வேறு வகை மண்களில் மேலேறுகின்றது என்பதைக் காட்டுதல் : வரிசையாகப் பல விளக்குக் கண்ணுடிகளில் (lamp chimneys) esso al 9si@an sir ósir முனையிலும் ஒரு துணியைக் கட்டிய பிறகு 15 செ. மீ. அளவு வெவ்வேறு வகை மண்களைப் போடுக. மணல், கலப்பு மண் (loam), மென் சரளை மண், களிமண் முதலியவை போன்ற மண் வகைகள் பயன்படுத்தப்பெறலாம். அடுத்து 71