பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுல் இத் தடவையில் அட்டையின் ஒரு முனையை முட்டுக் கொடுத்துத் தாங்குக. நீர் சொட்டப்பெறும் உயரத்தை மாற்றியும், சாய் மானத்தை மாற்றியும், துளிகளின் பருமனை மாற்றியும் சிதறல்களின் விளைவினை ஆராய்க. நிலைமைகளைப் - மாறக்கூடிய பல்வேறு முறை களில் இணைத்து இச் சோதனையைச் செய்திடுக. ஒவ்வொரு நிலைமையிலும் ஒரு தூய்மையான தாளும் வெவ்வேறு வண்ண நீரும் பயன் படுத்தப்பெற்ருல் சோதனையின் விளைவுகளைப் பற்றிய பதிவேட்டினை வைத்துக் கொள்ளலாம். 19. மேல் மண்ணின்மீது விழும் நீரின் விளைவு : மலர்ச் சட்டியொன்றினை மணற் பாங்கான மண் அல்லது கலப்பு மண்ணினுல் நிரப்புக. அச் சட்டியை ஒரு மணி நேரம் அதற்குமேல் துளி துளியாகச் சொட்டும் நீர்க்குழாயின் (tap) கீழ் வைத்திடுக. விழுந்துகொண்டிருக்கும் துளி களிளுல் களிப் பகுதியும் கரிமமல்லாப் பகுதியும் எங்ங்னம் மேற்பரப்பினின்றும் அகற்றப்பெறு கின்றன என்பதை உற்றுநோக்குக. 20. பாதுகாப்பற்ற மேற்பரப்புகளின்மீது மழை யின் விளைவு : ஒரு பெட்டியில் அல்லது தட்டில் மணலும் களிமண்ணும் சேர்ந்த குவியலை உண்டாக்குக. நீர்தெளிக்கும் குவளையினின்றும் அக் குவியலின் உச்சியின் அருகில் மெதுவாக நீரினைத் தெளித் திடுக. ஒடும் நீர் பாறைத் துகள்களைக் கொண்டு சென்று குவியலின் அடிமட்டத்தின் அருகில் வைக்கின்ற முறையினைக் கவனித்திடுக. х E. மண் 21. ஒடும் நீர் மண்னை எங்ங்ணம் தேய்த்துச் செல்லுகின்றது : கீழ்க்கண்ட விளக்கப் படத்தில் கண்டவாறு இரண்டு தட்டங்களை (trays) இயற்றுக. வெடிப் புக்களில் மெழுகினைத் (putty) தடவி விட்டால் அவற்றின் மூலம் நீர் ஒழுகாது. வாளிகள் அல் லது புனல்களுடன் கூடிய சாடிகள் வெளியிலோ டும் நீரைச் சேகரிப் பதற்குப்பயன்படுத்தப் பெறலாம். (அ) ஒரு தட்டினைத் தளர்ச்சியாகவுள்ள மண்ணிலுைம் மற்ருெரு தட்டினைக் கெட்டி யாகத் திணிக்கப்பெற்ற மண்ணினுலும் நிரப்புக. இரண்டு தட்டுக்களையும் ஒரு பக்கத்தில் சிறி தளவு சாய்ந்த நிலையில் வைத்து, ஒரு தெளிக் கும் குவளையினைக் கொண்டு ஒரே அளவு நீரினை ஊற்றுக. எந்த மண் அதிக வேகமாக நகர்த்தப் பெறுகின்றது என்பதையும் வெளியிலோடும் நீரின் இயல்பினையும் உற்றுநோக்குக. (ஆ) இரண்டு தட்டங்களையும் மண்ணினுல் நிரப்புக ; ஆல்ை ஒன்றினைப் புல்லுடன் சேர்ந்த மண்ணினல் (Sod) மூடுக. முன்னர்க் கூறப் பெற்றது போலவே இரண்டிலும் நீரினை ஊற்றுக ; இரண்டிலும் அரிமானத்தையும் (erosion) வெளியிலோடும் நீரினையும் உற்று நோக்குக. - மூலேகளுக்கு மெழுகிடுக நீர்க் குவளை (இ) இரண்டு தட்டங்களையும் மண்ணினுல் நிரப்புக; ஆனல் ஒன்றிற்கு மற்றென்றைவிட அதிகச் சாய்மானத்தைத் தருக. முன்னர்ச் சொல்லியவாறே நீரை ஊற்றி உற்றுநோக்குக. 22. மேல் மண்ணின் அரிமானத்தை எங்ங்ணம் தடுப்பது ? - மேற்கூறிய அநுபவத்திற்காக பெற்ற தட்டங்களையே பயன்படுத்துக, இயற்றப் 73