பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E, புகன் தளர்ச்சியாகவுள்ள மண்ணினைக் தட்டங்களை நிரப்புக ; ஒவ்வொன் றையும் ஒரே அளவுக்குச் சாய்த்திடுக. ஒரு தட்டத்தில் மேலும் கீழுமாகவும் மற்ருெரு தட் டத்தில் குறுக்காகவும் ஒரு குச்சியைச் செலுத்தி வரிபோன்ற பள்ளங்களைச் (furrows) செய்திடுக. (அ) கொண்டு ஒவ்வொன்றிலும் ஒரே அ ள வு நீரினைத் தெளித்திடுக. ஒவ்வொன்றிலும் அரிமானத் தையும் வெளியிலோடும் நீரினையும் உற்று நோக்குக. (ஆ) மீண்டும் தட்டங்களைத் தளர்ச்சியாக வுள்ள மண்ணினுல் நிரப்புக. ஒடும் நீரினின்றும் நன்ருகத் தெரியுமாறு அருவியால் தோண்டப் பெற்ற பள்ளங்கள் (guileys) உண்டாகும்வரை யிலும் அவற்றில் நீரினை ஊற்றுக. இப்பொழுது அருவியால் தோண்டப்பெற்ற பள்ளங்களில் இடம் விட்டு இடம் விட்டு சிறிய கற்களையும் சுள்ளிகளையும் (twigs) கொண்டு தடைசெய் திடுக. மீண்டும் நீரை ஊற்றி பள்ளங்களில் தடை அமைத்ததனுல் ஏற்பட்ட விளைவினை உற்றுநோக்குக. 23. அரிமானத்தை ஆராய ஒரு சிறு தொலைப் リ 。 உங்களுடைய ஊர்ப்புறத்தில் ஒடும் நீர் அருவி யால் தோண்டப் பெற்ற பள்ளங்களை உண்டாக் கிச் சேதப்படுத்திய ஏதாவது ஓர் இடத்தைக் கண்டுபிடித்திடுக. அரிமானத்தை ஆராய்வ தற்கு வகுப்பினையே அங்குக் கொண்டு செல்க. ஏன் அஃது உண்டானது? அஃது எங்ங்னம் தடுக்கப் பெற்றிருந்திருக்கலாம்? இனியும் என்ன செய்தல் கூடும்? 24. பள்ளிக் களங்களின் பாதுகாப்பு : கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளியின் தோட்டத் திலும் ஒடும் நீர் உண்டாக்கிய சேதத்தினைக் கொண்ட ஏதாவது ஓர் இடம் இருக்கத்தான் செய்யும். அத்தகைய அரிமானத்தைத் தடுப்ப தற்கான செயல்முறைத் திட்டம் ஒன்றைத் தீர்மானிப்பதற்காக வகுப்பின் ஒத்துழைப்பினைப் பெறுக ; அதன் பிறகு வகுப்பு மானுக்கர்கள் யாவரும் அச் செயல்முறைத் திட்டத்தைச் செயற்படுத்தட்டும். 1. தொல்லுயிர்ப் பதிவுகள் 1. தொல்லுயிர்ப் பதிவுகளே எங்குக் காணலாம் ? சில ஊர்ப்பகுதிகளில் கற் சுரங்கங்களில் அல்லது மேற்பரப்பின்மிது பாறைகள் காணப் பெறும் இடங்களில் தொல்லுயிர்ப் பதிவுகள் காணப்பெறலாம். சமூகத்தில் தொல்லுயிர்ப் பதிவுகளைப்பற்றித் தெரிந்த ஒருவரைக் கண் டறிய முயலுக ; அப்பதிவுகளுள் சிலவற்றைச் சேகரஞ் செய்வதற்கு வகுப்புடன் ஒரு சிறு தொலைப் பயணத்தை மேற்கொள்ளத் திட்ட மிடுக. மென்மையான நிலக்கரி அல்லது புகை நிலக் &flá (bituminous coal) g, sirós&T e-Gol-d பதாலும் தொல்லுயிர்ப் பதிவுகள் பெரும்பாலும் காணப்பெறலாம். நிலக்கரிக் கட்டிகளைக் கவன மாக உடைத்து உடைபட்ட மேற்பரப்புக்களில் இலைகள், பெரணிகள் (ferms) இவற்றின் பதிப்புக் கள் உள்ளனவா என்று பரிசோதித்திடுக. நீங்கள் வாழும் இடங்களில் தொல்லுயிர்ப் பதிவுகள் இராவிடில், அரசாங்க அல்லது தேசி யப் பொருட் காட்சி நிலையங்களினின்றும் (museums) ஒரு சிலவற்றை அனுப்புமாறு கேட்க அதன் பொறுப்பாளர்களை நாடவேண்டி யதுதான். அரசாங்கப் பொருட்காட்சி நிலையம் அல்லது தேசியப் பொருட்காட்சி நிலையத்திற்கு எழுதும் கடிதம் பயனளிக்கக்கூடியதாக இருக்க லாம். - - 2. தொல்லுயிர்ப் டாயின? ஓர் இலையைக் களிம்பு நெய்யில்ை (vaseline) மூடி அதனை ஒரு கண்ணுடித் தகடு அல்லது வேறு மழமழப்பான மேற்பரப்பின்மீது வைத் திடுக. ஒரு வட்டமான துண்டுத் தாள் அல்லது அட்டையை இலையைச் சுற்றிலும் இருக்குமாறு வைத்திடுக. உருவங்கள் அமைத்திடும் களி மண்ணை அட்டைத் துண்டில் அமுக்கி அதனை உறுதியாகப் பற்றுமாறு செய்க. சிறிதளவு பாரிஸ் காரையைக் கலந்து அதனை இலையின் மீது ஊற்றுக. பாரிஸ் காரை கெட்டியானதும், நீங்கள் இலையை அகற்றிவிடலாம் ; நீங்கள் இப்பொழுது மிக நேர்த்தியான இலை அச்சினை அடைவீர்கள். இம் முறையில்தான் சில தொல் லுயிர்ப் பதிவுகள் உண்டாயின : அஃதாவது, முதலில் வண்டல் அவற்றின்மீது படிந்து பின்னர் அது படிவுப் பாறையாக இறுகிப்போய் அவை உண்டாயின. எண்ணெய்ப் பசை தடவிய மீன் ஓடு (clam) அல்லது கிளிஞ்சல் ஒட்டினைப் பதிவுகள் எங்ங்ணம் உண் 74