பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. விண்மீன்களே உற்றுநோக்கல் லங்களை அடையாளங் காணல் கவர்ச்சிகரமான வழியாகும். மற்ருெரு 5. விண்மீன் அடிச்சுவடுகளே (trails) ஒளிப்பட மாக எடுத்தல் : காமிராக்களே வைத்துக் கொண்டுள்ள மாளுக் கர்கள் பூமி சுழல்வதற்கேற்ப விண்மீன் சுவடுகளை ஒளிப்படமாக எடுத்தல் அவர்கட்கு ஒரு கவர்ச்சி கரமான செயலாகும். இதற்கு மதி தோன்ருத இரவு ஒன்றினைத் தேர்ந்தெடுத்திடுக; தொடு வானத்தின் தடையில்லாத காட்சி இருக்கக் கூடிய இடம் ஒன்றினைக் கண்டறிக. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற இடம் தானியங்கியின் Gpsül4 Hsf (automobile headlights) போன்ற புறம்பான ஒளியினின்றும் தொலை விலிருத்தல் .ே வ ண் டு ம். எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்குக் காமிராவைத் துருவ விண்மீனுக்கு நேராக இருக்குமாறு நிறுத்துக ; அதனை ஒரு முக்காலியுடன் அல்லது மரக்கட்டை களுடன் இணைத்து வைத்திடுக. காமிரா குவியச் செய்யப்பெறக்கூடிய வகையாக இருப்பின், வில்லையை எல்லையற்ற தூரத்திற்குப் பொருத்தி வைத்து இடைத் தகட்டினை (diaphragm) முற்றி லும் திறந்து விடுக. ஒரு குறிப்பிட்ட காலத் திற்குப் பிறகு மூடி பொருத்தி வைக்கப்பெறுதல் வேண்டும். எல்லாம் ஆயத்தமாக இருக்கும் பொழுது மூடியைத் திறந்து அதனை ஒரு மணியி லிருந்து ஆறு மணி வரையில் திறந்த நிலையி லேயே விட்டுவிடுக. எவ்வளவுக் கெவ்வளவு நீண்ட நேரம் அது திறந்துள்ளதோ அவ்வள வுக் கவ்வளவு விண்மீன் சுவடுகளும் மிக நீண்ட நிலையில் இருக்கும். பால் மண்டலத்தில் (milky way) விண்மீன்களை ஒளிப் படமாக எடுக்க முயலுக. 6. விண் மீன் மண்டல உருவம் அமைத்தல் : பல்வேறு விண்மீன் கூட்டங்களின் வடிவங் களைப்பற்றி கற்பிப்பதற்குப் பயன் படுத்தப் பெறும் ஓர் எளிய ஏற்பாடே (device) விண்மீன் upsiri-so 2-(5s, osotorily (constellations) என்பது. ஓர் அட்டைப் பெட்டி அல்லது மரப் பெட்டியினைக் கைவசப்படுத்தி அதன் ஒரு முனையை அகற்றுக. இந்தப் பெட்டியின் முனைக் குச் சரியாகப் பெரிதாகவுள்ள இருண்ட நிற அட்டைத் துண்டுகளில் பல்வேறு விண்மீன் மண்டலங்களின் உருவங்களை வரைக. விண் மீண் மண்டலங்களின் விளக்கப்படங்களில் விண்மீன்கள் குறிப்பிடப்பெற்றுள்ள இடங் களில் துளைகளை இடுக. பெட்டியினுள் ஒரு மின் விளக்கினை அமைத்திடுக. விளக்கு எரியும் பொழுது பல்வேறு அட்டைத் துண்டுகள் பெட்டி யின் முனையின்மீது வைக்கப்பெற்ருல், விண் மீன் மண்டலங்கள் தெளிவாக பார்க்கப்பெற லாம். ஒரு மின் விளக்கு பொருந்தக்கூடிய பல தகரக் குவளைகளைக் கைவசப்படுத்துவது மற் ருெரு வழியாகும். பல்வேறு விண்மீன் மண்ட் லங்களின் விண்மீன்களை உணர்த்தக்கூடிய வாறு தகரக் குவளைகளின் அடிமட்டத்தில் துளை கள் இடப்பெறுகின்றன. விளக்கு ஒரு குவளை யினுள் வைக்கப்பெற்று எரியத் தொடங்கிய வுடன் திறப்புக்களின் வழியாக விளக்கு தென் படுகின்றது; இப்பொழுது விண்மீன் மண்டலங் களின் உருவங்கள் பார்க்கப்பெறலாம். துரு ஏருமல் தடுப்பதற்காகக் குவளைகள் வண்ணம் பூசப் பெற்றுப் பல்லாண்டுகள் பாதுகாப்புடன் வைக்கப்பெறலாம். 7. ஒரு குடைபோன்ற கோள்மண்டல உருவ அ ைம ப் பி னே (planetarium) எங்ங்ணம் ஆக்குவது? : ஒரு குடை ஒரு கோளத்தின் உட்புற வடிவத் தைப் பெற்றிருப்பதால் அது வானத்தின் பகுதி களை விளக்கிக் காட்டப் பயன்படுத்தப்பெறலாம். பெரிதாகவுள்ள ஒரு குடையை கைவசப்படுத்துக, ஒரு சீமைச் சுண்ணும்புக் கட்டியினைக்கொண்டு குடையின் உட்புறத்தில் மையத்தினை அடுத்து வடக்கு விண்மீன் அல்லது துருவ நட்சத் திரத்தை அடையாளமிடுக. ஒரு விண்மீன் படத் தைப் பயன்படுத்திப் பல்வேறு விண்மீன் மண்ட லங்களுக்குரிய விண்மீன்களின் இருப்பிடங்களைச் சிலுவைக் குறிகளால் (crosses) அடையாள மிடுக. எல்லாத் துருவ விண்மீன் மண்டலங்கள்ை யும் நிரப்பிய பிறகு சிலுவைக் குறிகள் இருக்கும் இடங்களில் பசையினைக் கொண்ட பெயரொட்டி களினின்றும் செய்யப்பெற்ற வெண்ணிற விண் மீன்களை நீங்கள் ஒட்டலாம் ; அல்லது வெண் ணிற வண்ணப் பூச்சில்ை உட்புறத்தில் வண் ணப் பூச்சிடலாம். பின்னர் வெண்ணிறப் பூச்சி ல்ை அல்லது சீமைச் சுண்ணும்புக் கட்டியினல் நீங்கள் புள்ளிகளிட்ட கோடுகளால் ஒரு குறிப் பிட்ட விண்மீன் மண்டலங்களின் விண்மீன்களைச் சேர்த்துக் காட்டலாம். - 78